மூளைச்சாவடைந்த மில் தொழிலாளி 9 பேருக்கு மறுவாழ்வு அளித்தார்!

திருப்பூர் மாவட்டம், பொங்கலூர் தாலுகா, ராம்நகர், பாப்புலர் மில் காலனியை சேர்ந்த செல்வராஜ் (வயது 43), இவர் கடந்த 12-ஆம் தேதி இரவு 9 மணி அளவில் பொங்கலூரில் இருந்து பல்லடத்திற்கு இரு சக்கர வாகனத்தில் வேலைக்கு சென்று கொண்டிருக்கும் பொழுது பல்லடம் அருகில் வந்த வாகனம் மோதியதில் தூக்கி வீசப்பட்டு தலையில் பலத்த காயம் ஏற்பட்டது. உடனடியாக அவர் சூலூர் கே.எம்.சி.எச். மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டார். அங்கு அவருக்கு முதலுதவி சிகிச்சை அளிக்கப்பட்டது. பின்னர் மேல்சிகிச்சைக்காக அவிநாசி ரோடு கே.எம்.சி.எச். மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டு அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டது இருந்தபோதிலும் அவரது உடல் நிலையில் எந்த வித முன்னேற்றமும் ஏற்படவில்லை. 

இந்த நிலையில் கடந்த 13-ஆம் தேதி அவருக்கு மூளைச் சாவு எற்பட்டதை மருத்துவ குழுவினர் உறுதி செய்தனர். அதனைத் தொடர்ந்து அவரது அண்ணன் ராஜேந்திரன் அவர்கள் செல்வராஜ் உடல் உறுப்புகளை தானம் செய்ய முன் வந்தார். அவரது இருதயம், நுரையீரல், கல்லீரல், சிறுநீரகங்கள், கண்கள், தோல் மற்றும் எலும்பு ஆகியவை தானமாக பெறப்பட்டு, கல்லீரல் மற்றும் ஒரு சிறுநீரகம் கே.எம்.சி.எச். மருத்துவமனைக்கும், மற்றொரு சிறுநீரகம் கோவை SPT மருத்துவமனைக்கும். தோல் மற்றும் எலும்பு கோவை கங்கா மருத்துவமனைக்கும். இருதயம் மற்றும் நுரையீரல் சென்னையில் உள்ள தனியார் மருத்துவமனைக்கும். கண்கள் அரவிந்த் கண் மருத்துவமனைக்கும் வழங்கப்பட்டது.

இது குறித்து கே.எம்.சி.எச். மருத்துவமனை தலைவர் டாக்டர் நல்ல G.பழனிசாமி கூறுகையில், மக்களிடையே உடல் உறுப்பு தானம் குறித்து அதிக விழிப்புணர்வு தேவைப்படுகிறது. ஒருவர் இறந்த பிறகு அவரது உடல் உறுப்புகள் தானமாக வழங்கப்பட்டால் அது பலரது உயிரைக் காப்பாற்ற உதவும் பின்னர் உடல் உறுப்பு தானம் வழங்கிய செல்வராஜ் குடும்பத்திற்கு தனது நன்றியை தெரிவித்துக் கொண்டார்.

Newsletter

வடகோவையில் ஓடும் ரயிலில் இருந்து விழுந்த பயணி உயிரிழப்பு

வடகோவை ரயில் நிலையம் அருகே கன்னியாகுமரி செல்லும் எக்ஸ்பிரஸ் ரயிலில் இருந்து தவறி விழுந்த பயணி, கோவை அரசு மருத்துவமனையில்...

கோவையில் UPSC முதற்கட்ட தேர்வு: 6,526 பேர் பங்கேற்பு

இந்தியாவின் மிக முக்கியமான போட்டித் தேர்வான UPSC முதற்கட்ட தேர்வு கோவையில் 15க்கும் மேற்பட்ட மையங்களில் நடைபெற்றது. IAS,...

பெருந்துறை ரயில் நிலையத்தில் பராமரிப்பு: கோவை ரயில்கள் பகுதியாக ரத்து

ஈரோடு - திருப்பூர் இடையே பெருந்துறை ரயில் நிலையத்தில் பராமரிப்புப் பணிகள் மேற்கொள்ளப்படுவதால், மே 24ஆம் தேதி திருச்சி -...

கோடை விடுமுறையையொட்டி கோவை  போத்தனூரிலிருந்து கரக்பூருக்கு வாராந்திரச் சிறப்பு ரயில் இயக்கம்

கோடை விடுமுறையையொட்டி கோவை  போத்தனூரில் இருந்து மேற்கு வங்க மாநிலம் கரக்பூருக்கு வாராந்திர சிறப்பு ரயில் இயக்கப்பட உள்ளத...

கோவை பீளமேடு 27வது வார்டில் தூய்மை இந்தியா 2.0 திருவிழா மற்றும் பல்வேறு தூய்மை பணிகள் ஆய்வு

சிங்காநல்லூர் தொகுதி பீளமேடு வார்டு 27ல் தூய்மை இந்தியா திட்டம் 2.0 விழா நடைபெற்றது. கவுன்சிலர் அம்பிகா தனபால் குப்பை பி...

கோவை பிள்ளையார்புரத்தில் மரப்பராமரிப்பு பணிக்கு  தன்னார்வலர்களுக்கு அழைப்பு

கோவை மதுக்கரை வனச்சரகத்திற்கு உட்பட்ட பிள்ளையார்புரத்தில் கோவை குளங்கள் பாதுகாப்பு அமைப்பு சார்பில் 444-வது வார மரப்பராம...