உலக இரத்த கொடையாளர் தினத்தை முன்னிட்டு கோவையில் விழிப்புணர்வு பேரணி


உலக இரத்த கொடையாளர் தினத்தை முன்னிட்டு தமிழ்நாடு மாநில எய்ட்ஸ் கட்டுப்பாடு சங்கம், அரசு இரத்த வங்கிகள் சார்பில் பொதுமக்களிடையே விழிப்புணர்வு ஏற்படுத்தும் நோக்கில் விழுப்புணர்வு பேரணி நடைபெற்றது. இந்த பேரணியை கோவை மாவட்ட ஆட்சியர் ஹரிஹரன் கொடி அசைத்து துவக்கி வைத்தார். பல்வேறு செவிலியர் பயிற்சிக் கல்லூரிகளை சேர்ந்த மாணவிகள் என 300-க்கும் மேற்பட்டோர் பங்கேற்ற இந்த ஊர்வலம் கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் துவங்கி அரசு மருத்துவமனையில் நிறைவுற்றது.



பேரணியில் பங்கேற்ற மாணவிகள் விழிப்புணர்வு வாசகங்களை கொண்ட பதாகைகளை ஏந்தியபடி முழக்கமிட்டபடியே ஊர்வலமாக சென்றனர். இது குறித்து மாவட்ட இரத்த வங்கி துறைத் தலைவர் மங்கையர்கரசி கூறும்போது, மருத்துவமனைகளில் அறுவை சிகிச்சை மற்றும் விபத்து காலங்களில் எவ்வித தங்கு தடையுமின்றி இரத்தம் கிடைக்க பெறும். இது குறித்து மக்களிடையே விழிப்புணர்வு ஏற்படுத்தும் நோக்கில் இந்த பேரணி நடைபெறுகிறது.



மேலும், ஒரு யூனிட் இரத்தம் 4 உயிர்களை காப்பாற்ற உதவும். மாதம் 1000 யூனிட் இரத்தம் கொடையாளர்கள் வழங்குவதால் வருடம் தோறும் 12 ஆயிரம் யூனிட் இரத்தம் பெறப்பட்டு சேமித்து வைக்கப்பட்டுள்ளது. கோவை மாவட்ட மக்கள் தொகையில் ஒரு சதவிகித மக்கள் இரத்தம் வழங்க முன்வந்தாலே தேவைகள் பூர்த்தி அடையும்" என்றார்.

Newsletter

வடகோவையில் ஓடும் ரயிலில் இருந்து விழுந்த பயணி உயிரிழப்பு

வடகோவை ரயில் நிலையம் அருகே கன்னியாகுமரி செல்லும் எக்ஸ்பிரஸ் ரயிலில் இருந்து தவறி விழுந்த பயணி, கோவை அரசு மருத்துவமனையில்...

கோவையில் UPSC முதற்கட்ட தேர்வு: 6,526 பேர் பங்கேற்பு

இந்தியாவின் மிக முக்கியமான போட்டித் தேர்வான UPSC முதற்கட்ட தேர்வு கோவையில் 15க்கும் மேற்பட்ட மையங்களில் நடைபெற்றது. IAS,...

பெருந்துறை ரயில் நிலையத்தில் பராமரிப்பு: கோவை ரயில்கள் பகுதியாக ரத்து

ஈரோடு - திருப்பூர் இடையே பெருந்துறை ரயில் நிலையத்தில் பராமரிப்புப் பணிகள் மேற்கொள்ளப்படுவதால், மே 24ஆம் தேதி திருச்சி -...

கோடை விடுமுறையையொட்டி கோவை  போத்தனூரிலிருந்து கரக்பூருக்கு வாராந்திரச் சிறப்பு ரயில் இயக்கம்

கோடை விடுமுறையையொட்டி கோவை  போத்தனூரில் இருந்து மேற்கு வங்க மாநிலம் கரக்பூருக்கு வாராந்திர சிறப்பு ரயில் இயக்கப்பட உள்ளத...

கோவை பீளமேடு 27வது வார்டில் தூய்மை இந்தியா 2.0 திருவிழா மற்றும் பல்வேறு தூய்மை பணிகள் ஆய்வு

சிங்காநல்லூர் தொகுதி பீளமேடு வார்டு 27ல் தூய்மை இந்தியா திட்டம் 2.0 விழா நடைபெற்றது. கவுன்சிலர் அம்பிகா தனபால் குப்பை பி...

கோவை பிள்ளையார்புரத்தில் மரப்பராமரிப்பு பணிக்கு  தன்னார்வலர்களுக்கு அழைப்பு

கோவை மதுக்கரை வனச்சரகத்திற்கு உட்பட்ட பிள்ளையார்புரத்தில் கோவை குளங்கள் பாதுகாப்பு அமைப்பு சார்பில் 444-வது வார மரப்பராம...