குழந்தைகள் மீதான வன்முறையை தடுக்க வலியுறுத்தி கோவை முதல் பெங்களூருக்கு சைக்கிள் பயணம் மேற்கொள்ளும் மென் பொருள் பொறியாளர்

கோவை ரத்தினபுரியை சேர்ந்தவர் தண்டபாணி லோகநாதன். இவர் சரவணம்பட்டி பகுதியில் தனியார் நிறுவணத்தில் மென் பொருள் பொறியாளராக பணியாற்றி வருகிறார். இவர் தொடர்ந்து குழந்தைகள் மீதான வன்முறைகள் நடைபெறும் சூழலில் குழந்தைகளை பாதுகாப்போம் என்பதை வலியுறுத்தி கோவையிலிருந்து பெங்களூருக்கு சைக்கிள் விழிப்புணர்வு பயணம் மேற்கொண்டுள்ளார்.



இன்று அதிகாலை 2 மணிக்கு காந்திபுரம் பேருந்து நிலையத்திலிருந்து பயணத்தை துவக்கியவர் பவானி சேலம் தர்மபுரி கிருஷ்ணகிரி ஒசூர் வழியாக கர்நாடக மாநிலம் பெங்களூர் மடிவால பகுதிக்கு சனிக்கிழமை காலை 10 மணிக்கு சென்றடைகிறார்.



சைக்கிள் பிரியரான இவர் இதே போன்று பல விழிப்புணர்வு நிகழ்விற்க்காக உதகை ஈரோடு சேலம் கேரள மாநிலம் ஆகிய பகுதிகளுக்கு சென்றுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. இதே போன்று கன்னியாகுமரியிலிருந்து காஷ்மீர் வரை விரைவில் சைக்கிள் பயணம் மேற்கொள்வது தனது லட்சியம் என தெரிவித்துள்ளார்.

இவரது முயற்சி வெற்றியடைய வாழ்த்துவோம்.

Newsletter

கோவை பீளமேடு வார்டு 27-ல் நியாய விலை கடை மற்றும் தூய்மை பணி ஆய்வு

சிங்காநல்லூர் தொகுதி வார்டு 27-ல் கவுன்சிலர் அம்பிகா தனபால் இன்று நியாய விலை கடை, சாலை சுத்தம் மற்றும் குப்பை அகற்றும் ப...

சுதந்திரப் போராட்ட வீரர்களை அறிவது அனைவரின் கடமை - அமைச்சர் சம்பத்குமார்

வ.உ.சிதம்பரனாரின் 155வது பிறந்தநாளையொட்டி கோவையில் அமைச்சர் சம்பத்குமார் மரியாதை செலுத்தினார். சுதந்திரப் போராட்ட வீரர்க...

கோவை மாநகராட்சி: கோவையில் தனியார் நிலங்களில் சீமைக் கருவேலம் மரங்களை அகற்ற 10 நாள் அவகாசம்

கோவை மாநகராட்சி எல்லைக்குள் உள்ள தனியார் நிலங்களில் சீமைக் கருவேல மரங்களை 10 நாட்களுக்குள் நில உரிமையாளர்கள் வேருடன் அகற...

கோவை மாநகராட்சி: தனியார் நிலங்களில் சீமைக் கருவேலம் கப் அகற்ற 10 நாள் அவகாசம்

கோவை மாநகராட்சி எல்லைக்குள் உள்ள தனியார் நிலங்களில் சீமைக் கருவேலமரங்களை 10 நாட்களுக்குள் நில உரிமையாளர்கள் வேருடன் அகற்...

மதுக்கரை ACC சிமெண்ட் ஆலைக்கு எதிராக பொதுமக்கள் ஆர்ப்பாட்டம்

கோவை மதுக்கரையில் செயல்படும் ACC சிமெண்ட் ஆலையிலிருந்து வெளியேறும் சிமெண்ட் துகள்களால் காற்று மாசடைந்து சுவாசக் கோளாறு ஏ...

கோவையில் சாலையோர வியாபாரிகளுக்கான லோக் கல்யாண் மேலா சிறப்பு முகாம் செப்டம்பர் 7ல் தொடக்கம்

கோவை மாநகராட்சி பகுதிகளில் சாலையோர வியாபாரிகளுக்கு வங்கி கடன் வழங்கும் லோக் கல்யாண் மேலா முகாம் செப்டம்பர் 7 முதல் 25 வர...