அரசுப்பள்ளி மாணவர்களுக்கு விலையில்லா பாடபுத்தகங்கள் முதல்நாளிளே வழங்கப்பட்டுள்ளதாக மாவட்ட ஆட்சித்தலைவர் தகவல்!

கோயம்புத்தூர் மாவட்டத்தில் உள்ள அரசு பள்ளிகளில் பயிலும் மாணவ மாணவியர்களுக்கு விலையில்லா பாடநூல், குறிப்பேடுகள் மற்றும் சீருடைகள் ஆகியவை பள்ளி திறந்த முதல்நாளே வழங்கப்பட்டுள்ளது என மாவட்ட ஆட்சித்தலைவர் ஹரிஹரன் தெரிவித்துள்ளார்.

இது குறித்து மாவட்ட ஆட்சித்தலைவர் வெளியிட்ட செய்தி குறிப்பில் தெரிவித்ததாவது; தமிழக அரசு உத்தரவுபடி கோயம்புத்தூர் மாவட்டத்தில் அனைத்து பள்ளிகளும் திறக்கப்பட்டு அன்றே அனைத்து பாடப்புத்தகங்களும் மாணவ, மாணவியர்களுக்கு வழங்கப்படுகிறது. தமிழக அரசு கல்விக்காக பல்வேறு திட்டங்களை அறிவித்து செயல்படுத்தி வருகிறது. கிராமப்புறம் மற்றும் நகர்ப்புற மாணவ, மாணவியர்களுக்கு கல்விக்கு உதவியாக காலணி முதல் கணிணி வரையிலான 14 வகை கல்வி உபகரணங்கள், விலையில்லா மிதிவண்டிகள், பேருந்துபயண அட்டைகள் உள்ளிட்ட பல்வேறு திட்டங்கள் வழங்கப்பட்டு வருகிறது.

மாணவ, மாணவியர்கள் அரசு வழங்கி வரும் திட்டங்களை நல்ல முறையில் பயன்படுத்திக்கொண்டு அதிக மதிப்பெண் எடுத்து படிக்கின்ற பள்ளிக்கு பெருமை சேர்ப்பதோடு தங்கள் வாழ்க்கை தரத்தையும் உயர்த்திக் கொள்ள வேண்டும். ஆசிரியர்கள் கல்வி போதிப்பது மட்டுமல்லாது பள்ளிக் குழந்தைகளை சமூகத்தில் தினந்தோறும் நடைபெறும் நிகழ்வுகளையும் எடுத்துச் சொல்லி எவ்வாறு அவற்றையெல்லாம் எதிர்கொள்ள வேண்டும் என்பதையும் கற்றுதர வேண்டும். அப்பொழுது தான் மாணவ, மாணவியர்கள் எதிர்காலம் சிறப்பாக அமையும்.

முன் கூட்டியே திட்டமிட்டு கல்வி கற்க ஏதுவாக வருகின்ற கல்வியாண்டில் 10 ஆம் வகுப்பு. 11 ஆம் வகுப்பு மற்றும் 12 ஆம் வகுப்பு அரசு பொதுத்தேர்வுகள் என தமிழக அரசால் அறிவிக்கப்பட்டு தேதிகளும் முன்கூட்டியே தெரிவிக்கப்பட்டுள்ளது. நூறு சதவீத தேர்ச்சி பெறுவதற்கு மாணவர்கள் மட்டுமல்லாது ஆசிரியர்களும் தங்கள் பணியில் அர்ப்பணித்துக் கொள்ள வேண்டும். கோயம்புத்தூர் மாவட்டத்தில் உள்ள அனைத்து பள்ளிகளிலும் மாணவரூபவ் மாணவியர்களுக்கு தேவையான அடிப்படை வசதிகள் செய்து தரப்பட்டுள்ளது.

மேலும், கோயம்புத்தூர் மாவட்டத்தில் 2017-2018ஆம் கல்வியாண்டில் 1ஆம் வகுப்பு முதல் 10ஆம் வகுப்பு வரை பயின்ற 1,92,339 பள்ளி மாணவ, மாணவியர்களுக்கு விலையில்லா நோட்டு புத்தகங்கள் வழங்கப்பட்டுள்ளது. 1 ஆம் வகுப்பு முதல் 12ஆம் வகுப்பு வரை பயின்ற 2,27,868 பள்ளி மாணவ, மாணவிர்களுக்கும் விலையில்லா பாடப்புத்தகங்கள் வழங்கப்பட்டுள்ளது மற்றும் 1ஆம் வகுப்பிலிருந்து 8ஆம் வகுப்பு வரை பயின்ற மொத்தம் 1,19,854 மாணவ, மாணவியர்களுக்கு சீருடைகள், மதிய உணவு வழங்கப்பட்டுள்ளது என மாவட்ட ஆட்சித்தலைவர் தெரிவித்தார்.

பயணாளிகள் பேட்டிகள்:-



என் பெயர் கார்த்திக்; நான் சித்தாபுதூர் மாநகராட்சி மேல்நிலைப்பள்ளியில் 7ஆம் வகுப்பு படித்து வருகிறேன். என் அப்பா கூலி வேலை செய்து வருகிறார். எங்கள் குடும்பம் மிகவும் ஏழ்மையில் வாடி வருகின்றது. எனக்கு இலவச நோட்டு புத்தகங்கள் இலவச சீருடை, காலணிகள், சத்தான காய்கறிகள் மற்றும் முட்டைகள் கூடிய சத்தான உணவுகள், என படிப்பதற்கு ஏதுவான அனைத்து உபகரணங்களும் என் பள்ளியில் வழங்கப்பட்டது. மேலும், நான் தினமும் பேருந்தில் செல்ல வேண்டிய கட்டாயத்தில் இருக்கிறேன். எனவே, எவ்வித சிரமமுமின்றி பள்ளிக்கு சென்றுவர இலவச பேருந்து பயண அட்டை மூலம் பள்ளிக்கு சென்று வருகிறேன். என் கல்விக்காக இதுபோன்ற அனைத்து வசதிகளையும் செய்து தந்த தமிழ்நாடு அரசுக்கு எனது நன்றியை தெரிவித்துக்கொள்கிறேன்.



என் பெயர் சௌமியா;  நான் சித்தாப்புதூர் மாநகராட்சி மேல்நிலைப்பள்ளியில் 11ஆம் வகுப்பு படித்து வருகிறேன். நான் இந்த வருடம் பொதுத்தேர்வு எழுத உள்ளேன். எனக்கு இலவச பாடபுத்தகங்கள் மற்றும் நோட்டுபுத்தகங்கள் பள்ளி தொடங்கிய முதல் நாளே தமிழ்நாடு அரசு என் பள்ளியின் மூலம் எனக்கு கொடுக்கப்பட்டது. இதனால் அன்று நடத்திய பாடங்களை அன்றே படித்திட முடிகிறது. 11ஆம் வகுப்பு பொதுத்தேர்வு கால அட்டவணை முன் கூட்டியே தமிழக அரசால் அறிவிக்கப்பட்டுள்ளதால் திட்டமிட்டு படிப்பதற்க ஏதுவாக இருக்கும். மேலும் படிப்பிற்காக பாடபுத்தகம், வரைபடம், கணித உபகரணங்கள், மிதிவண்டி, மடிக்கணிணி இது போன்ற பல்வேறு உபகரணங்கள் விலையில்லாமல் தமிழக அரசு அனைத்து மாணவ, மாணவியர்களுக்க வழங்கி வருகிறது. எங்களைப் போன்ற ஏழை, எளிய மாணவிகள மீது அக்கரை கொண்டு விலையில்லா பொருட்கள் வழங்கும் தமிழகஅரசிற்கு எனது நெஞ்சார்ந்த நன்றியினை தெரிவித்துக்கொள்கிறேன்.

Newsletter

காரமடையில் 5 கிலோ கஞ்சா பறிமுதல்; ஒடிசாவைச் சேர்ந்த இருவர் கைது

கோவை மாவட்டம் காரமடை பகுதியில் பதுக்கி வைக்கப்பட்டிருந்த 5 கிலோ கஞ்சாவை போலீசார் பறிமுதல் செய்து, ஒடிசா மாநிலத்தைச் சேர்...

வன்னியர்களுக்கு தனி இடஒதுக்கீடு அறிவித்தால், 251 சமூகங்கள் எதிர்க்கும்: ஓபிசி மக்கள் உரிமைகள் கட்சி

வன்னியர் சமூகத்திற்கான தனி இடஒதுக்கீட்டை தமிழக அரசு அறிவித்தால், மாநிலம் முழுவதும் 251 பிற்படுத்தப்பட்ட மற்றும் மிகவும்...

நிலம் அளவீடு செய்யாததால், பட்டா வழங்கியும் குடியிருக்க முடியாமல் அவதி- ஆட்சியரிடம் 330 குடும்பங்கள் மனு

ஆதிதிராவிடர் நலத்துறை சார்பில் இலவச வீட்டு மனைப் பட்டா வழங்கப்பட்டு ஓராண்டு கடந்தும், தங்களுக்கு ஒதுக்கப்பட்ட நிலங்கள் அ...

கோவையில் ஜூன் 19ல் தனியார் வேலைவாய்ப்பு முகாம் நடைபெறுகிறது

கோயம்புத்தூர் மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையத்தில் ஜூன் 19, 2026 அன்று தனியார் துறை வேலைவாய்ப்பு...

கோவையில் கல்லூரி மாணவரை சிறை வைத்து தாக்கி நகை, பைக் பறிப்பு

குனியமுத்தூரில் புதிய வாடகை அறை பார்க்கச் சென்ற கல்லூரி மாணவரை அறைக்குள் அடைத்து வைத்து கத்தி, இரும்புக் கம்பியால் தாக்க...

கோவை அரசு மருத்துவமனையில் சிகிச்சையில் இருந்த கொலை வழக்குக் கைதி உயிரிழப்பு

கோவை அரசு மருத்துவமனையில் போலீஸ் பாதுகாப்புடன் சிகிச்சை பெற்று வந்த கொலை வழக்கில் தண்டனை பெற்ற கைதி மணிகண்டன் உயிரிழந்த...