துப்புரவு பணியாளர்களுக்கான இலவச மருத்துவ முகாமினை மாநகராட்சி ஆணையாளர் தொடங்கி வைத்தார்

கோயம்புத்தூர் மாநகராட்சி ஆணையாளர் அவர்கள் ஒப்பந்த துப்புரவு பணியாளர்களின் நலச்சங்கங்கள் கேட்டுக் கொண்டதற்கிணங்க கோயம்புத்தூர் மாநகராட்சியும் வர்தான் இன்ப்ராஸ்டக்சர்ஸ் நிறுவனமும் இணைந்து மேற்கு மண்டலத்தில் பணிபுரியும் மாநகராட்சி ஒப்பந்த துப்புரவு பணியாளர்களுக்கான இலவச மருத்துவ முகாம் எஸ்.ஆர்.பி அம்மணியம்மாள் மாநகராட்சி மேல்நிலைப்பள்ளியில் இன்று மாநகராட்சி ஆணையாளர் மற்றும் தனி அலுவலர் விஜயகார்த்திகேயன் மற்றும் மாநகராட்சி துணை ஆணையாளர் காந்திமதி தலைமையில் நடைபெற்றது.

இந்த இலவச மருத்துவ முகாமில் மாநகராட்சியில் பணிபுரியும் ஒப்பந்த துப்புரவு பணியாளர்களுக்கு கண், பல், இரத்த அழுத்தம், இரத்த பரிசோதனை, சர்க்கரை அளவு மற்றும் ECG, Echo போன்ற இருதய சம்பந்தமான சிகிச்சைகள் மேற்கொள்ளப்பட்டது. இந்த மருத்துவ முகாமில் மேற்கு மண்டலத்தில் பணிபுரியும் 650 ஒப்பந்த துப்புரவு பணியாளர்கள் கலந்து கொண்டு பயனடைந்தார்கள். 112 நபர்களுக்கு கண் சம்பந்தமான நோயும், 246 நபர்களுக்கு பல் சம்பந்தமான பிரச்சனைகளும், இரத்த அழுத்தம் மற்றும் சர்க்கரை சம்பந்தமான பரிசோதனையில் 60 நபர்களுக்கும் இருப்பது கண்டறியப்பட்டது. இவர்களுக்கு ECG மற்றும் Echo எடுக்கப்பட்டு தகுந்த மருத்துவ சிகிச்சை வழங்கப்பட்டது.

இதனை தொடர்ந்து மாநகராட்சியின் மற்ற மண்டலங்களில் ஒவ்வொரு சனிக்கிழமைகளில் ஒப்பந்த துப்புரவு பணியாளர்களுக்கான இலவச மருத்துவ முகாம் நடைபெறும் என மாநகராட்சி ஆணையாளர் அவர்கள் தெரிவித்துள்ளார்.

பாதுகாப்பு உபகரணங்கள் உபயோகப்படுத்துவது குறித்தும், புகை பழக்கம் மற்றும் குடிப்பழக்கத்திற்கு அடிமையாவை தவிர்ப்பது குறித்தும் துப்புரவு பணியாளர்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டது. மாநகராட்சி ஆணையாளர் அவர்கள் தலைமையில் நடைபெற்ற இம்மருத்துவ முகாமில் மாநகர நல அலுவலர் சந்தோஷ்குமார், மேற்கு மண்டல உதவி ஆணையாளர் ராமைய்யா, மாநகராட்சி சுகாதார அலுவலர்கள், தன்னார்வ அமைப்புகளின் பிரதிநிதிகள், தனியார் மருத்துவமனையை சேர்ந்த மருத்துவர்கள் ஆகியோர் கலந்து கொண்டனர்.

Newsletter

கோவை பீளமேடு வார்டு 27-ல் நியாய விலை கடை மற்றும் தூய்மை பணி ஆய்வு

சிங்காநல்லூர் தொகுதி வார்டு 27-ல் கவுன்சிலர் அம்பிகா தனபால் இன்று நியாய விலை கடை, சாலை சுத்தம் மற்றும் குப்பை அகற்றும் ப...

சுதந்திரப் போராட்ட வீரர்களை அறிவது அனைவரின் கடமை - அமைச்சர் சம்பத்குமார்

வ.உ.சிதம்பரனாரின் 155வது பிறந்தநாளையொட்டி கோவையில் அமைச்சர் சம்பத்குமார் மரியாதை செலுத்தினார். சுதந்திரப் போராட்ட வீரர்க...

கோவை மாநகராட்சி: கோவையில் தனியார் நிலங்களில் சீமைக் கருவேலம் மரங்களை அகற்ற 10 நாள் அவகாசம்

கோவை மாநகராட்சி எல்லைக்குள் உள்ள தனியார் நிலங்களில் சீமைக் கருவேல மரங்களை 10 நாட்களுக்குள் நில உரிமையாளர்கள் வேருடன் அகற...

கோவை மாநகராட்சி: தனியார் நிலங்களில் சீமைக் கருவேலம் கப் அகற்ற 10 நாள் அவகாசம்

கோவை மாநகராட்சி எல்லைக்குள் உள்ள தனியார் நிலங்களில் சீமைக் கருவேலமரங்களை 10 நாட்களுக்குள் நில உரிமையாளர்கள் வேருடன் அகற்...

மதுக்கரை ACC சிமெண்ட் ஆலைக்கு எதிராக பொதுமக்கள் ஆர்ப்பாட்டம்

கோவை மதுக்கரையில் செயல்படும் ACC சிமெண்ட் ஆலையிலிருந்து வெளியேறும் சிமெண்ட் துகள்களால் காற்று மாசடைந்து சுவாசக் கோளாறு ஏ...

கோவையில் சாலையோர வியாபாரிகளுக்கான லோக் கல்யாண் மேலா சிறப்பு முகாம் செப்டம்பர் 7ல் தொடக்கம்

கோவை மாநகராட்சி பகுதிகளில் சாலையோர வியாபாரிகளுக்கு வங்கி கடன் வழங்கும் லோக் கல்யாண் மேலா முகாம் செப்டம்பர் 7 முதல் 25 வர...