அறிவியல் கண்காட்சி ரயில் ஆத்தூர் ரயில் நிலையத்திற்கு வருகை; 3 நாட்கள் வரை பொதுமக்கள் பார்வையிடலாம்

ஆத்தூர் ரயில்நிலையத்தில் (17.06.2017) இன்று காலை அறிவியல் ரயில் கண்காட்சியை சேலம் ரயில்வே கோட்ட மேலாளர் ஹரிசங்கர் வர்மா ரிப்பன் வெட்டி துவக்கி வைத்தார். அறிவியல் பற்றி மாணவர்கள் மற்றும் பொதுமக்களிடையே விழிப்புணர்வு மற்றும் ஈடுபாடு உண்டாக்கும் பொருட்டு, இந்திய ரயில்வேயும், மத்திய அரசின் அறிவியல் மற்றும் தொழில் நுட்பத் துறையும் இணைந்து, அக்டோபர் 2007 முதல் அறிவியல் ரயிலை இயக்கி வருகின்றன. இந்த பருவச்சூழல் மாறுபாடு பற்றிய சிறப்பு ரயிலாக இயக்கப்படும் அறிவியல் ரயில் 2017ம் ஆண்டு பிப்ரவரி மாதம் 17ம் தேதி, புதுதில்லி சப்தர்ஜங் ரயில்நிலையத்தில் இருந்து மத்திய ரயில்வே அமைச்சர் சுரேஷ்பிரபு கொடியசைத்து துவக்கி வைக்கப்பட்டது.



புதுச்சேரியில் கண்காட்சியை முடித்த பிறகு, 17.06.2017 இன்று இந்த பருவச்சூழல் சிறப்பு அறிவியல் ரயில் ஆத்தூர் ரயில் நிலையத்தில் 19.06.2017 வரையும், பின்னர் 20.06.2017 முதல் 22.06.2017 வரை  கரூர் ரயில் நிலையத்திலும் பொதுமக்கள் பார்வைக்கு வைக்கப்பட்டு அதன் பின்னர் கொடைக்கானல் ரோடு புறப்பட்டு செல்லும். காட்சி நேரம் காலை 10.00 மணி முதல் மாலை 5.00 மணி வரை. 13 ரயில் பெட்டிகளில் சுற்றுச்சூழல் மாறுபாடு பற்றிய பல்வேறு காட்சிப் பொருட்களும், மீண்டும் பயன்படுத்தக் கூடிய சக்தி, பயோடொக்னாலஜி, சிறுவர்களுக்கான சிறப்பு கண்காட்சிப் பெட்டி மற்றும் 6 முதல் 10ம் வகுப்பு வரையிலான மாணவர்களுக்கு பல்வேறு அறிவியல் சோதனைகளை நேரில் செய்து பார்க்கும் சோதனைக்கூடம் போன்றவையும் இருக்கும். சூரிய மின்சக்தியை பயன்படுத்தும் வகையில் 3 ரயில் பெட்டிகளில்  சூரிய மின்சக்தி பலகைகள் பொருத்தப்பட்டுள்ளன.  



ரயில்பெட்டிகளில் உள்ள காட்சிப் பொருட்கள் குறித்து விளக்க ஒவ்வொரு ரயில்பெட்டியிலும் தன்னார்வலர்கள் மாணவ மாணவியரின் சந்தேகத்தை தீர்த்து வைத்தனர். ஆத்தூர் ரயில் நிலையங்களுக்கு இத்தகு பருவச்சூழல் மாறுபாடு பற்றி விளக்கும் அறிவியல் ரயில் வருகை தருவது முதன் முறை என்பதால் இப்பகுதிகளில் உள்ள மாணவர்கள் மாணவிகள் இந்த கண்காட்சியை சிறப்பாக பயன்படுத்திக் கொண்டனர்.

இந்த கண்காட்சி ரயிலுக்கு நுழைவுக்கட்டணம் ஏதுமில்லை. ரயிலின் உள்ளே வரும் போது, அலைபேசி, கேமரா, பைகள், தீப்பெட்டி, சிகரெட், பீடி, தண்ணீர் பாட்டில்கள், இதர நீர்மங்கள், கூர்மையான பொருட்களை வைத்திருந்தால் அனுமதி மறுக்கப்படும். எனவே, அவற்றை தங்களுடன் வைத்திருக்க வேண்டாம். என ரயில்வே துறை பொதுமக்களுக்கு அறிவுறுத்தியுள்ளது.



Newsletter

கோவை பீளமேடு வார்டு 27-ல் நியாய விலை கடை மற்றும் தூய்மை பணி ஆய்வு

சிங்காநல்லூர் தொகுதி வார்டு 27-ல் கவுன்சிலர் அம்பிகா தனபால் இன்று நியாய விலை கடை, சாலை சுத்தம் மற்றும் குப்பை அகற்றும் ப...

சுதந்திரப் போராட்ட வீரர்களை அறிவது அனைவரின் கடமை - அமைச்சர் சம்பத்குமார்

வ.உ.சிதம்பரனாரின் 155வது பிறந்தநாளையொட்டி கோவையில் அமைச்சர் சம்பத்குமார் மரியாதை செலுத்தினார். சுதந்திரப் போராட்ட வீரர்க...

கோவை மாநகராட்சி: கோவையில் தனியார் நிலங்களில் சீமைக் கருவேலம் மரங்களை அகற்ற 10 நாள் அவகாசம்

கோவை மாநகராட்சி எல்லைக்குள் உள்ள தனியார் நிலங்களில் சீமைக் கருவேல மரங்களை 10 நாட்களுக்குள் நில உரிமையாளர்கள் வேருடன் அகற...

கோவை மாநகராட்சி: தனியார் நிலங்களில் சீமைக் கருவேலம் கப் அகற்ற 10 நாள் அவகாசம்

கோவை மாநகராட்சி எல்லைக்குள் உள்ள தனியார் நிலங்களில் சீமைக் கருவேலமரங்களை 10 நாட்களுக்குள் நில உரிமையாளர்கள் வேருடன் அகற்...

மதுக்கரை ACC சிமெண்ட் ஆலைக்கு எதிராக பொதுமக்கள் ஆர்ப்பாட்டம்

கோவை மதுக்கரையில் செயல்படும் ACC சிமெண்ட் ஆலையிலிருந்து வெளியேறும் சிமெண்ட் துகள்களால் காற்று மாசடைந்து சுவாசக் கோளாறு ஏ...

கோவையில் சாலையோர வியாபாரிகளுக்கான லோக் கல்யாண் மேலா சிறப்பு முகாம் செப்டம்பர் 7ல் தொடக்கம்

கோவை மாநகராட்சி பகுதிகளில் சாலையோர வியாபாரிகளுக்கு வங்கி கடன் வழங்கும் லோக் கல்யாண் மேலா முகாம் செப்டம்பர் 7 முதல் 25 வர...