கல்லட்டி மலைப் பாதையில் காவல் துறை சார்பில் சுற்றுச்சூழல் பாதுகாப்பு முகாம்

உதகை அருகே உள்ள கல்லட்டி மலைப் பாதையில் காவல் துறை சார்பில் சுற்றுச்சூழல் பாதுகாப்பு முகாம் நடத்தப்பட்டது.

நீலகிரி மாவட்டக் காவல் துறை, வனத் துறை மற்றும் நெஸ்ட் அமைப்பினர் இணைந்து இந்த சுற்றுச்சூழல் பாதுகாப்பு முகாமை கல்லட்டி சோதனைச் சாவடி பகுதியில் சுற்றுச்சூழல் பாதுகாப்பு முகாம் ஒன்றினை நடத்தினர். இந்த முகாமை உதகை நகரக் காவல் துணைக் கண்காணிப்பாளர் மணிகண்டன், மாவட்டக் குற்றப்பிரிவுக் காவல் துணைக் கண்காணிப்பாளர் திருமேனி ஆகியோர் தொடக்கிவைத்தனர்.



இந்த முகாமையொட்டி கல்லட்டி மலைப் பாதை முதல் மாவனல்லா பகுதி வரை சாலையோரங்களில் கிடந்த பிளாஸ்டிக் குப்பைகள், பாட்டில்கள் போன்றவற்றை அப்புறப்படுத்தினர். இப்பணியில் பெண்கள் உள்ளிட்ட 50-க்கும் மேற்பட்டோர் பங்கேற்றனர்.

முன்னதாக, பாம்பு கடித்தால் வனப்பகுதிகளில் இருந்து உதகை கொண்டுவர சுமார் இரண்டு மணி ஆகும். இதனால் ஏற்படும் உயிர் இழப்புகளை தவிர்க்கும் வகையில் இம்முகாமின் போது, வனத்துறையினருக்கு மருந்துகள் வழங்கப்பட்டது. அந்த ஆயூர்வேத மருந்து உயிர் இழப்பு ஏற்படாமல்  இரண்டு மணி நேரம் பாதுகாக்கும் எனபது குறுப்பிடத்தக்கதாகும். இம்மருந்தை காவல்துறை துணை கண்காணிப்பாளர் மணிகண்டன் வடக்கு வன கோட்ட ரேஞ்சரிடம் வழங்கினார்.



இம்முகாம் குறித்து காவல் துணைக் கண்காணிப்பாளர் மணிகண்டன் கூறியதாவது: சுற்றுச்சூழலையும், இயற்கையையும் பாதுகாக்க வேண்டிய பொறுப்பும், கடமையும் அனைவருக்கும் உள்ளது. அதை வலியுறுத்தும் விதமாகவே இத்தகைய முகாம் நடத்தப்பட்டது. இனி, மாதந்தோறும் இத்தகைய முகாம்கள் நடத்தப்படும்" என்றார்.

Newsletter

கோவை பீளமேடு வார்டு 27-ல் நியாய விலை கடை மற்றும் தூய்மை பணி ஆய்வு

சிங்காநல்லூர் தொகுதி வார்டு 27-ல் கவுன்சிலர் அம்பிகா தனபால் இன்று நியாய விலை கடை, சாலை சுத்தம் மற்றும் குப்பை அகற்றும் ப...

சுதந்திரப் போராட்ட வீரர்களை அறிவது அனைவரின் கடமை - அமைச்சர் சம்பத்குமார்

வ.உ.சிதம்பரனாரின் 155வது பிறந்தநாளையொட்டி கோவையில் அமைச்சர் சம்பத்குமார் மரியாதை செலுத்தினார். சுதந்திரப் போராட்ட வீரர்க...

கோவை மாநகராட்சி: கோவையில் தனியார் நிலங்களில் சீமைக் கருவேலம் மரங்களை அகற்ற 10 நாள் அவகாசம்

கோவை மாநகராட்சி எல்லைக்குள் உள்ள தனியார் நிலங்களில் சீமைக் கருவேல மரங்களை 10 நாட்களுக்குள் நில உரிமையாளர்கள் வேருடன் அகற...

கோவை மாநகராட்சி: தனியார் நிலங்களில் சீமைக் கருவேலம் கப் அகற்ற 10 நாள் அவகாசம்

கோவை மாநகராட்சி எல்லைக்குள் உள்ள தனியார் நிலங்களில் சீமைக் கருவேலமரங்களை 10 நாட்களுக்குள் நில உரிமையாளர்கள் வேருடன் அகற்...

மதுக்கரை ACC சிமெண்ட் ஆலைக்கு எதிராக பொதுமக்கள் ஆர்ப்பாட்டம்

கோவை மதுக்கரையில் செயல்படும் ACC சிமெண்ட் ஆலையிலிருந்து வெளியேறும் சிமெண்ட் துகள்களால் காற்று மாசடைந்து சுவாசக் கோளாறு ஏ...

கோவையில் சாலையோர வியாபாரிகளுக்கான லோக் கல்யாண் மேலா சிறப்பு முகாம் செப்டம்பர் 7ல் தொடக்கம்

கோவை மாநகராட்சி பகுதிகளில் சாலையோர வியாபாரிகளுக்கு வங்கி கடன் வழங்கும் லோக் கல்யாண் மேலா முகாம் செப்டம்பர் 7 முதல் 25 வர...