மக்கள் குறைதீர் கூட்டத்தில் ரூ.11.95 லட்சம் மதிப்பில் நலத்திட்ட உதவிகளை மாவட்ட ஆட்சியர் வழங்கினார்

கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் நடைபெற்ற மக்கள் குறைத்தீர்க்கும் நாள் கூட்டத்தில் 3 பயனாளிகளுக்கு முதலமைச்சர் பொது நிவாரண நிதியிலிருந்தும், 12 பயனாளிகளுக்கு தன்விருப்ப கொடை நிதியிலிருந்து சுயதொழில் துவங்கவும் என மொத்தம் 15 பயனாளிகளுக்கு ரூ.11.95 லட்சம் மதிப்பில் நலத்திட்ட உதவிகளை மாவட்ட ஆட்சியர் ஹரிஹரன் வழங்கினார். 

கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் திங்கட்கிழமை தோறும் நடைபெறும் மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் இன்றைய தினம் (ஜூன் 19) மாவட்ட ஆட்சியர் ஹரிஹரன் தலைமையில் நடைபெற்றது.

இக்கூட்டத்தில் பொதுமக்கள் பட்டாமாறுதல், புதிய குடும்ப அட்டை, ஆக்கிரமிப்பு அகற்றுதல், கல்விக்கடன், வீட்டுமனைப்பட்டா உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகள் குறித்த மனுக்கள் மாவட்ட ஆட்சியர் ஹரிஹரன்-யிடம் அளித்தனர். பொதுமக்களிடம்    மனுக்களை பெற்றுக்கொண்ட மாவட்ட ஆட்சியர் சம்மந்தப்பட்ட துறை அலுவலர்களிடம் பொதுமக்களின் கோரிக்கை மனுக்களை வழங்கி குறித்த காலத்திற்குள் உடனடியாக நடவடிக்கை மேற்கொள்ளுமாறு உத்தரவிட்டார்.

தொடர்ந்து, மாவட்ட சமூக பாதுகாப்புதிட்டத்தின் மூலம் மின்சாரம் தாக்கி உயிரிழந்தவர்களின் வாரிசுதாரர்களுக்கு முதலமைச்சர் பொது நிவாரண நிதியிலிருந்து 3 பயனாளிகளுக்கு தலா ரூ. 3 லட்சம் வீதம், ரூ. 9 லட்சமும், வறுமையில் மிகவும் பினதங்கியவர்களின் வாழ்வாதாரத்திற்கு பெட்டிக்கடை வைக்க, தையல் இயந்திரம் வாங்க, மாணவ, மாணவியர்களின் கல்வியினை தொடாந்து கற்க  நிதியுதவி என 12 பயனாளிகளுக்கு ரூ. 2.95 லட்சம் மதிப்பில் தன்விருப்ப கொடை நிதியிலிருந்தும் என மொத்தம் 15 பயனாளிகளுக்கு ரூ.11.95 லட்சம் மதிப்பிலான காசோலையினை மாவட்ட ஆட்சியர் ஹரிஹரன் வழங்கினார்.

இக்கூட்டத்தில் மாவட்ட வருவாய் அலுவலர் துரை.ரவிச்சந்திரன், துணை ஆணையர் (கலால்) பாலகிருஷ்ணன், மாவட்ட பிற்படுத்தப்பட்டோர் அலுவலர் சுரேஷ், மாவட்ட வழங்கல் அலுவலர் சரவணமூர்த்தி, ஆதி திராவிட நல அலுவலர் மோகன், மற்றும் அரசு அலுவலர்கள் உட்பட பலர் கலந்து கொண்டனர்.

Newsletter

கோவை சிறுமி கொலை வழக்கு: ஈரநெஞ்சம் காப்பக முதியோர்கள் மெழுகுவர்த்தி ஏந்தி மௌன அஞ்சலி

கோவை சூலூர் அருகே 10 வயது சிறுமி பாலியல் வன்கொடுமைக்கு உள்ளாக்கப்பட்டு படுகொலை செய்யப்பட்ட சம்பவத்திற்கு நீதி கேட்டு ஈரந...

காய்ச்சலால் கோவை தனியார் மருத்துவமனையில் அமைச்சர் செங்கோட்டையன் அனுமதி

லேசான காய்ச்சல் காரணமாக தமிழக வருவாய்த்துறை அமைச்சர் செங்கோட்டையன் கோவையில் உள்ள KMCH தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப...

ஆனைமலை புலிகள் காப்பகம்: காண்டூர் கால்வாயில் சிக்கி ஆண் யானை உயிரிழப்பு

பொள்ளாச்சி வனக்கோட்டம் காண்டூர் கால்வாயில் 20 அடி ஆழத்தில் சிக்கிய ஆண் யானையை மீட்க முயற்சி மேற்கொள்ளப்பட்ட நிலையில், நீ...

வடகோவையில் ஓடும் ரயிலில் இருந்து விழுந்த பயணி உயிரிழப்பு

வடகோவை ரயில் நிலையம் அருகே கன்னியாகுமரி செல்லும் எக்ஸ்பிரஸ் ரயிலில் இருந்து தவறி விழுந்த பயணி, கோவை அரசு மருத்துவமனையில்...

கோவையில் UPSC முதற்கட்ட தேர்வு: 6,526 பேர் பங்கேற்பு

இந்தியாவின் மிக முக்கியமான போட்டித் தேர்வான UPSC முதற்கட்ட தேர்வு கோவையில் 15க்கும் மேற்பட்ட மையங்களில் நடைபெற்றது. IAS,...

பெருந்துறை ரயில் நிலையத்தில் பராமரிப்பு: கோவை ரயில்கள் பகுதியாக ரத்து

ஈரோடு - திருப்பூர் இடையே பெருந்துறை ரயில் நிலையத்தில் பராமரிப்புப் பணிகள் மேற்கொள்ளப்படுவதால், மே 24ஆம் தேதி திருச்சி -...