தயாரிப்பு தேதி இல்லாத உணவு பொருட்களுக்கு தடை விதிக்கக் கோரி ஆட்சியரிடம் மனு

தயாரிப்பு தேதி, விலைப்பட்டியில் எதுவும் குறிப்பிடாமல் காலாவதியான உணவு பொருட்கள் விற்பனைக்கு தடை விதிக்கக் கோரியும், உணவு கட்டுபாடு அதிகாரிகள் கடும் நடவடிக்கை எடுக்க வலியுறுத்தியும் இன்று கோவை மாவட்ட ஆட்சியரிடம் மனு அளிக்கப்பட்டது.

கோவை தடாகம் ரோடு கோவில்மேடு மற்றும் சுற்றுப்புற பகுதிகளில் ஏராளமான திண்பண்ட கடைகள் இயங்கி வருகிறது. இவைகளில் பல கடைகளில் தரமற்ற திண்பண்டங்கள் அடைத்து விற்பனை செய்படுவதாகவும் உடல் நல குறைவு ஏற்பட வாய்ப்பு உள்ளதால் இப்பொருட்களுக்கு தடை விதிக்கக் கோரியும் அப்பகுதி மக்கள் இன்று மாவட்ட ஆட்சியரிடம் மனு அளித்தனர்.

இது குறித்து அவர்கள் கூறும்போது, இப்பகுதியில் திண்பண்டங்கள் விற்பனை செய்யபடும் பல கடைகளில் தரமற்ற பொருட்கள் விற்கபடுகிறது. பாக்கெட்டுகளில் விலைபட்டியில், தயாரிப்பு தேதி, காலவதியாகும் தேதி இவை எதுவுமே குறிப்பிடாமல் விற்பனை செய்து வருகின்றனர். மேலும், இதுபோன்ற உணவு பொருட்கள் உட்கொள்வதால் உடல் நல கோளாறுகள் ஏற்பட அதிக வாய்ப்பு உள்ளது. இது மாதிரியான திண்பண்டங்களுக்கு விற்பனைக்கு தடை விதிக்க வேண்டும். உணவு கட்டுபாடு அதிகாரிகள் கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றனர்.

Newsletter

கோவை பீளமேடு வார்டு 27-ல் நியாய விலை கடை மற்றும் தூய்மை பணி ஆய்வு

சிங்காநல்லூர் தொகுதி வார்டு 27-ல் கவுன்சிலர் அம்பிகா தனபால் இன்று நியாய விலை கடை, சாலை சுத்தம் மற்றும் குப்பை அகற்றும் ப...

சுதந்திரப் போராட்ட வீரர்களை அறிவது அனைவரின் கடமை - அமைச்சர் சம்பத்குமார்

வ.உ.சிதம்பரனாரின் 155வது பிறந்தநாளையொட்டி கோவையில் அமைச்சர் சம்பத்குமார் மரியாதை செலுத்தினார். சுதந்திரப் போராட்ட வீரர்க...

கோவை மாநகராட்சி: கோவையில் தனியார் நிலங்களில் சீமைக் கருவேலம் மரங்களை அகற்ற 10 நாள் அவகாசம்

கோவை மாநகராட்சி எல்லைக்குள் உள்ள தனியார் நிலங்களில் சீமைக் கருவேல மரங்களை 10 நாட்களுக்குள் நில உரிமையாளர்கள் வேருடன் அகற...

கோவை மாநகராட்சி: தனியார் நிலங்களில் சீமைக் கருவேலம் கப் அகற்ற 10 நாள் அவகாசம்

கோவை மாநகராட்சி எல்லைக்குள் உள்ள தனியார் நிலங்களில் சீமைக் கருவேலமரங்களை 10 நாட்களுக்குள் நில உரிமையாளர்கள் வேருடன் அகற்...

மதுக்கரை ACC சிமெண்ட் ஆலைக்கு எதிராக பொதுமக்கள் ஆர்ப்பாட்டம்

கோவை மதுக்கரையில் செயல்படும் ACC சிமெண்ட் ஆலையிலிருந்து வெளியேறும் சிமெண்ட் துகள்களால் காற்று மாசடைந்து சுவாசக் கோளாறு ஏ...

கோவையில் சாலையோர வியாபாரிகளுக்கான லோக் கல்யாண் மேலா சிறப்பு முகாம் செப்டம்பர் 7ல் தொடக்கம்

கோவை மாநகராட்சி பகுதிகளில் சாலையோர வியாபாரிகளுக்கு வங்கி கடன் வழங்கும் லோக் கல்யாண் மேலா முகாம் செப்டம்பர் 7 முதல் 25 வர...