பாஜக-வின் குடியரசு வேட்பாளருக்கு எதிராக கருத்து கூறுபவர்கள் சிறுபான்மை மக்களின் விரோதிகள்- புதிய தமிழகம் கட்சி தலைவர் விமர்சனம்

பாஜக-வின் குடியரசு வேட்பாளர் ராம்நாத் கோவிந்திற்க்கு எதிராக குறுகிய மனப்பான்மையுடன் கருத்து கூறுபவர்கள், தாழ்த்தப்பட்ட, சிறுபான்மை மக்களின் விரோதிகள் என புதிய தமிழகம் கட்சி தலைவர் டாக்டர் கிருஷ்ணசாமி விமர்சனம் செய்துள்ளார்.

கோவை குனியமுத்தூர் பகுதியில் புதிய தமிழகம் கட்சி தலைவர் டாக்டர் கிருஷ்ணசாமி செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர் பேட்டியளிக்கையில் கூறியதாவது:-

எளிய தலித் ஒருவரை குடியரசு தலைவர் பதவிக்கான வேட்பாளராக தேர்வு செய்த பாஜக-விற்கு நன்றியினை தெரிவித்துக் கொள்கிறேன். ராம்நாத் கோவிந்திற்கும் எனது வாழ்த்துக்கள். ராம்நாத் கோவிந்தை பாஜக தேர்வு செய்திருப்பது சமூக நீதியின் புதிய பரிணாமம். ராம்நாத்கோவிந்துக்கு காங்கிரஸ், அதிமுக உள்ளிட்ட எதிர்கட்சிகள் அனைத்தும் ஆதரவு அளிக்க வேண்டும். அவரை போட்டியின்று ஏக மனதாக தேர்வு செய்ய வேண்டும். 

எதிர்கட்சிகள் சார்பில் ஒரு பொது தலித் வேட்பாளரை நிறுத்த வேண்டும் என்ற திருமாவளவன் கருத்துக்கு பதில் அளித்த டாக்டர் கிருஷ்ணசாமி, ராம்நாத் கோவிந்த் தொடர்பாக குறுகிய மனப்பான்மையுடன் கருத்து கூறுபவர்கள் ஒடுக்கப்பட்ட, தாழ்த்தப்பட்ட, சிறுபான்மை மக்களின் விரோதிகள் என்று விமர்சனம் செய்தார்.

மேலும், தலித் வேட்பாளரை பாஜக-வே தேர்வு செய்த பிறகு இதுபோன்ற கருத்துக்களை கூறுவது ஏற்புடையதல்ல எனவும் அவர் தெரிவித்தார். ராம்நாத் கோவிந்த் கிருஸ்துவர்களுக்கும், இஸ்லாமியர்களுக்கும் எதிரானவர் என்ற குற்றச்சாட்டு உள்ளதே என்ற கேள்விக்கு, அவர் ஜனாதிபதி ஆகும் பட்சத்தில் மத சிறுபான்மையர்களும், சமூக சிறுபான்மையர்களும் நிச்சயமாக பாதுகாப்பாக இருப்பார்கள் என்று கூறினார்.

Newsletter

கோவை பீளமேடு வார்டு 27-ல் நியாய விலை கடை மற்றும் தூய்மை பணி ஆய்வு

சிங்காநல்லூர் தொகுதி வார்டு 27-ல் கவுன்சிலர் அம்பிகா தனபால் இன்று நியாய விலை கடை, சாலை சுத்தம் மற்றும் குப்பை அகற்றும் ப...

சுதந்திரப் போராட்ட வீரர்களை அறிவது அனைவரின் கடமை - அமைச்சர் சம்பத்குமார்

வ.உ.சிதம்பரனாரின் 155வது பிறந்தநாளையொட்டி கோவையில் அமைச்சர் சம்பத்குமார் மரியாதை செலுத்தினார். சுதந்திரப் போராட்ட வீரர்க...

கோவை மாநகராட்சி: கோவையில் தனியார் நிலங்களில் சீமைக் கருவேலம் மரங்களை அகற்ற 10 நாள் அவகாசம்

கோவை மாநகராட்சி எல்லைக்குள் உள்ள தனியார் நிலங்களில் சீமைக் கருவேல மரங்களை 10 நாட்களுக்குள் நில உரிமையாளர்கள் வேருடன் அகற...

கோவை மாநகராட்சி: தனியார் நிலங்களில் சீமைக் கருவேலம் கப் அகற்ற 10 நாள் அவகாசம்

கோவை மாநகராட்சி எல்லைக்குள் உள்ள தனியார் நிலங்களில் சீமைக் கருவேலமரங்களை 10 நாட்களுக்குள் நில உரிமையாளர்கள் வேருடன் அகற்...

மதுக்கரை ACC சிமெண்ட் ஆலைக்கு எதிராக பொதுமக்கள் ஆர்ப்பாட்டம்

கோவை மதுக்கரையில் செயல்படும் ACC சிமெண்ட் ஆலையிலிருந்து வெளியேறும் சிமெண்ட் துகள்களால் காற்று மாசடைந்து சுவாசக் கோளாறு ஏ...

கோவையில் சாலையோர வியாபாரிகளுக்கான லோக் கல்யாண் மேலா சிறப்பு முகாம் செப்டம்பர் 7ல் தொடக்கம்

கோவை மாநகராட்சி பகுதிகளில் சாலையோர வியாபாரிகளுக்கு வங்கி கடன் வழங்கும் லோக் கல்யாண் மேலா முகாம் செப்டம்பர் 7 முதல் 25 வர...