கோவை ஜமாஅத்தே இஸ்லாமி ஹிந்த் சார்பில் நோன்பு துறக்கும் நிகழ்ச்சி துவக்கம்

ஜமாஅத்தே இஸ்லாமி ஹிந்த் நாடு முழுவதும் வருடந்தோறும் அனைத்து மத, சமூக மக்களோடு இணைந்து நோன்பு துறக்கும் நிகழ்ச்சியினை நடத்தி வருகின்றது. சமூக நல்லிணக்கம் வலுப்பட நடத்தப்படும் இந்நிகழ்ச்சிகளில் பல்வேறு சமூக மக்கள் கலந்து கொண்டு சிறப்பித்து வருகின்றனர். கோவையிலும் இப்படிப்பட்ட பல்வேறு நிகழ்வுகளை ஜமாஅத்தே இஸ்லாமி ஹிந்த் கோவை மாநகர கிளை நடத்தி வருகிறது.



அதனடிப்படையில் கடந்த ஞாயிறன்று கோவை கரும்புக்கடை பகுதியில் உள்ள மஸ்ஜிதுல் இஹ்சானில் இஃப்தார் நிகழ்ச்சி நடைபெற்றது. இந்நிகழ்வில் பி.எஸ்.உமர் ஃபாரூக் முஸ்லிம்களின் வழிபாட்டுத்தலமான பள்ளிவாசல் எதற்காக என்பது குறித்தும் பள்ளிவாசலில் முஸ்லிம்கள் கடைபிடிக்கும் தொழுகையை பற்றியும் கருத்துக்களை பகிர்ந்து கொண்டார். பின்னர் அனைவரும் ஒன்று சேர்ந்து நோன்பு துறந்தனர்.



இதனைத் தொடர்ந்து, ஜமாஅத்தே இஸ்லாமி ஹிந்த் கோவை மாவட்டத் தலைவர் ஜனாப்.கே.ஏ.செய்யது இப்ராஹீம் தலைமையுரையாற்றினார். பின்னர், நிகழ்வின் சிறப்பு அழைப்பாளர் சென்னை புதுக்கல்லூரி வேதியியல் துறையின் உதவிப் பேராசிரியர்.ஃபரீத் அஸ்லம் சிறப்புரையாற்றினார். நோன்பு எப்படிப்பட்ட தனிமனித மற்றும் சமூகத்தை உருவாக்க விரும்புகின்றது என்பது பற்றி மிக விரிவாக எடுத்துரைத்தார். மேலும், சமூக நல்லிணக்கம் தமிழகத்தின் அடையாளம் என்றும், அதனை வலுப்படுத்துவதில் நாம் ஒவ்வொருவரும் முனைப்புடன் செயல்பட வேண்டும் என்றும் வலியுறுத்தினார்.



இந்நிகழ்வில் பெண்கள் உட்பட 600-க்கும் மேற்பட்ட நபர்கள் கலந்து கொண்டனர். நிறைவாக, இதில் கலந்து கொண்ட அனைவருக்கும் புத்தகங்கள் அன்பளிப்பாக வழங்கப்பட்டது.

Newsletter

ஈமு கோழி மோசடி வழக்கு: இருவருக்கு தலா 10 ஆண்டு சிறை - கோவை டான்பிட் நீதிமன்றம் தீர்ப்பு.

ஈமு கோழி பண்ணை முதலீட்டு மோசடி வழக்கில் 115 பேரிடம் ரூ.2.37 கோடி மோசடி செய்ததாக குற்றம் நிரூபணமான நிலையில், இருவருக்கு த...

கோவையில் 1.03 லட்சம் தெருவிளக்குகள் ஆய்வு

கோயம்புத்தூர் மாநகராட்சிக்குட்பட்ட 100 வார்டுகளில் உள்ள 1,03,755 தெருவிளக்குகளின் செயல்பாடு குறித்து சிறப்பு ஆய்வு மேற்க...

கல்வி உதவித்தொகை மோசடி: கோவை போலீஸ் எச்சரிக்கை

கல்வி உதவித்தொகை வழங்குவதாக கூறி மாணவர்கள் மற்றும் பெற்றோர்களிடம் வங்கி விவரங்கள், OTP எண்கள் மற்றும் முன்பணம் கேட்டு மோ...

கோவையில் கோவில் சிலை திருட்டில் ஈடுபட்ட நபரை கையும், களவுமாகப் பிடித்து போலீசாரிடம் ஒப்படைப்பு

கோவை பெரியநாயக்கன்பாளையம் மகாமாரியம்மன் கோவிலில் ரூ.50,000 மதிப்புள்ள வெண்கல விநாயகர் சிலையை திருடிச் செல்ல முயன்ற நபரை...

குறுந்தொழில்களின் வளர்ச்சிக்காக மானிய நிபந்தனைகளை பரிசீலிக்க அமைச்சர்களிடம் FOCIA மனு

கோவையில் குறுந்தொழில் முனைவோர் மானியம் பெறுவதில் உள்ள தடைகள் மற்றும் தொழில் அமைப்புகளின் பதிவு, புதுப்பிப்பு சிக்கல்களுக...

ஈரான்-இஸ்ரேல் போர் எதிரொலி: 70 டூ 50 டன் - கோவை–ஷார்ஜா சரக்கு கையாளுதலில் சரிவு..!

ஈரான்-இஸ்ரேல் போர் காரணமாக விமானங்கள் கூடுதல் எரிபொருளுடன் இயக்கப்படுவதால், கோவை–ஷார்ஜா விமானங்களில் சரக்கு ஏற்றும் திறன...