கோவை சிபிஎம் அலுவலகம் மீது பெட்ரோல் குண்டு வீசிய சம்பவத்தில் பாஜக-வை தொடர்புபடுத்துவது கண்டிக்கத்தக்கது- பாஜக வானதி சீனிவாசன்

கோவை சிபிஎம் கட்சி அலுவலகம் மீது பெட்ரோல் குண்டு வீசி தாக்குதல் நடத்தப்பட்டதற்கு பாஜக மீதும், இந்து அமைப்பினர் மீதும் சிபிஎம் கட்சியினர் குற்றம்சாட்டுவது கண்டிக்கத்தக்கது என பாஜக பொதுச்செயலாளர் வானதி சீனிவாசன் தெரிவித்தார்.

கோவை மாவட்ட பாஜக அலுவலகத்தில் அக்கட்சியின் மாநில பொதுச்செயலாளர் வானதி சீனிவாசன் இன்று செய்தியாளர்களுக்கு பேட்டியளித்தார். அப்போது அவர் பேசுகையில், யாரும் குறை சொல்ல முடியாத வேட்பாளராக ஜனாதிபதி வேட்பாளரை பாஜக அறிவித்துள்ளது. போட்டியின்றி ஜனாதிபதி வேட்பாளரை தேர்வு செய்யவே பாஜக விரும்புகிறது. பாஜக சார்பில் ஜனாதிபதி வேட்பாளராக பட்டியல் இனத்தை சேர்ந்த தகுதி வாய்ந்த ஒருவரை நிறுத்தியுள்ள நிலையில் விடுதலை சிறுத்தைகள் கட்சித் தலைவர் திருமாவளவன் போன்றோர் விமர்சனம் செய்வது சரியல்ல.

ஜி.எஸ்.டி மசோதாவினை தமிழக சட்டபேரவையில் நிறைவேற்றப்பட்டதற்கு தமிழக அரசிற்கு பாஜக சார்பில் நன்றி தெரிவித்துக் கொள்கிறது. கோவையில் ஜி்.எஸ்.டி குறித்து விளக்கம் அளிக்க மத்திய அமைச்சர் நிர்மலா சீத்தாராமன் வரும் 22-ம் தேதி  வரவுள்ளார். பீளமேடு பகுதியில் உள்ள சுகுணா ஆடிட்டோரியத்தில் இந்நிகழ்ச்சி நடைபெறும். கோவையில் உள்ள தொழில் முனைவோர்கள் ஜி.எஸ்.டி தொடர்பான சந்தேகங்களுக்கு விளக்கம் பெற வாய்ப்பினை ஏற்படுத்தப்பட்டுள்ளது. துறை சார்ந்த அதிகாரிகளும் இதில் கலந்து கொண்டு விளக்கம் அளிக்க உள்ளனர். அன்றைய தினம் மாலை திருப்பூருக்கு செல்லும் மத்திய அமைச்சர் நிர்மலா சீத்தாராமன், ஜி.எஸ்.டி தொடர்பான நிகழ்வுகளில் பங்கேற்க உள்ளார். 

கோவை சி.பி.எம் கட்சி அலுவலகம் மீது தாக்குதல் நடத்தப்பட்டதற்கு பாஜக மீதும், இந்து அமைப்பினர் மீதும் சிபிஎம் கட்சியினர் குற்றம் சாட்டுவது கண்டிக்கத்தக்கது. சிபிஎம் கட்சியினர் பொறுப்புணர்வு இல்லாமல் ஆதாரம் இன்றி பேசக்கூடாது. அரசியல் கட்சிகளின் அலுவலகங்கள் மீது தாக்குதல் நடத்துவதை பாஜக எப்போதும் ஆதரிக்காது.

ஆவாஸ் யோஜனா திட்டத்தின் கீழ் பாரத பிரதமரின் அனைவருக்கும் வீடு திட்டத்தின் கீழ் கோவை மாவட்டத்தில் இது வரை 40,000 பேர் பதிவு செய்துள்னர். நாளை யோகா தினத்தை முன்னிட்டு கோவையில் பகுதி வாரியாக பாஜக சார்பில் யோகா நிகழ்ச்சிகளுக்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. இவ்வாறு வானதி சீனிவாசன் தெரிவித்தார்.

Newsletter

வடகோவையில் ஓடும் ரயிலில் இருந்து விழுந்த பயணி உயிரிழப்பு

வடகோவை ரயில் நிலையம் அருகே கன்னியாகுமரி செல்லும் எக்ஸ்பிரஸ் ரயிலில் இருந்து தவறி விழுந்த பயணி, கோவை அரசு மருத்துவமனையில்...

கோவையில் UPSC முதற்கட்ட தேர்வு: 6,526 பேர் பங்கேற்பு

இந்தியாவின் மிக முக்கியமான போட்டித் தேர்வான UPSC முதற்கட்ட தேர்வு கோவையில் 15க்கும் மேற்பட்ட மையங்களில் நடைபெற்றது. IAS,...

பெருந்துறை ரயில் நிலையத்தில் பராமரிப்பு: கோவை ரயில்கள் பகுதியாக ரத்து

ஈரோடு - திருப்பூர் இடையே பெருந்துறை ரயில் நிலையத்தில் பராமரிப்புப் பணிகள் மேற்கொள்ளப்படுவதால், மே 24ஆம் தேதி திருச்சி -...

கோடை விடுமுறையையொட்டி கோவை  போத்தனூரிலிருந்து கரக்பூருக்கு வாராந்திரச் சிறப்பு ரயில் இயக்கம்

கோடை விடுமுறையையொட்டி கோவை  போத்தனூரில் இருந்து மேற்கு வங்க மாநிலம் கரக்பூருக்கு வாராந்திர சிறப்பு ரயில் இயக்கப்பட உள்ளத...

கோவை பீளமேடு 27வது வார்டில் தூய்மை இந்தியா 2.0 திருவிழா மற்றும் பல்வேறு தூய்மை பணிகள் ஆய்வு

சிங்காநல்லூர் தொகுதி பீளமேடு வார்டு 27ல் தூய்மை இந்தியா திட்டம் 2.0 விழா நடைபெற்றது. கவுன்சிலர் அம்பிகா தனபால் குப்பை பி...

கோவை பிள்ளையார்புரத்தில் மரப்பராமரிப்பு பணிக்கு  தன்னார்வலர்களுக்கு அழைப்பு

கோவை மதுக்கரை வனச்சரகத்திற்கு உட்பட்ட பிள்ளையார்புரத்தில் கோவை குளங்கள் பாதுகாப்பு அமைப்பு சார்பில் 444-வது வார மரப்பராம...