ஓ.பி.எஸ் அணி எம்எல்ஏ-க்கள் அணி மாறப்போவதாக சசிகலா அணியினரால் தவறான தகவல் பரப்பபடுகிறது- முன்னாள் அமைச்சர் மாஃபா பாண்டியராஜன்

ஓ.பி.எஸ் அணியில் உள்ள எம்.எல்.ஏ-க்கள் அணி மாறப்போவதாக சசிகலா அணியினரால் தவறான தகவல் பரப்பபடுகி்றது என முன்னாள் அமைச்சர் மாஃபா பாண்டியராஜன் தெரிவித்தார்.

கோவை விமான நிலையத்தில் அதிமுக புரட்சி தலைவி அம்மா அணியினைச் சேர்ந்த முன்னாள் அமைச்சர் மாஃபா பாண்டியராஜன் செய்தியாளர்களுக்கு பேட்டியளித்தார். அப்போது அவர் பேசுகையில், அதிமுக கூட்டணியில் இருந்த 4 எம்.எல்.ஏ-க்கள் மாட்டிறைச்சி விவகாரம் தொடர்பாக வெளிநடப்பு செய்தது என்பது எடப்பாடி பழனிச்சாமி அரசிடம் இருந்து அவர்கள் விலகி நிற்க விரும்புகின்றனர் என்பதை காட்டுகிறது. அரசை நடத்துபவர்கள் இதை கவனமாக பார்க்க வேண்டும். உண்மையான அதிமுகவாக தாங்கள் தான் செயல்பட்டு வருகிறோம். தங்கதமிழ்செல்வன் வெளிநடப்பு செய்து இருக்கக் கூடாது. 

ஜி.எஸ்.டி குறித்த சரியான புரிதல் இல்லாமல் திமுக எம்.எல்.ஏக்கள் பேசிவருகின்றனர். முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதா விரும்பிய மாற்றங்களுடன் கூடிய ஜி.எஸ்.டி தற்போது மத்திய அரசு கொண்டு வந்திருக்கிறது. இதில் மாற்றங்கள் கொண்டு வர வேண்டிய விசயங்கள் நிறைய உள்ளது. 

ஜி.எஸ்.டி காரணமாக தமிழக அரசு பட்ஜெட்டில் 4000 கோடி வணிக வரி அதிகரிக்கும். நல்ல முறையில் பயிற்சிகளை வழங்க வேண்டும். அதிமுக புரட்சி தலைவி அணியில் இருந்து எம்.எல்.ஏ-க்கள் யாரும் அணி மாற வாய்ப்பில்லை. ஓ.பி.எஸ் தலைமையிலான அதிமுக புரட்சி தலைவி அம்மா அணிக்கு தொண்டர்களின் ஆதரவு அதிகரித்து வருகிறது. 

பாஜக அறிவித்துள்ள ஜனாதிபதி வேட்பாளருக்கு ஆதரவு கொடுப்பது குறித்து விரைவில் உயர்மட்ட குழு கூடி நல்ல முடிவை அறிவிப்போம். ஏற்கனவே மோடி - ஓ.பி.எஸ் சந்திப்பின் போது ஜனாதிபதி வேட்பாளருக்கு பிரதமர் மோடி ஆதரவு கேட்டு இருந்தார். இரண்டு நாட்களில் ஜனாதிபதி வேட்பாளரை ஆதரிப்பது குறித்து முடிவு செய்வோம்.

ஓ.பி.எஸ் அணியில் உள்ள எம்.எல்.ஏ-க்கள் அணி மாறப்போவதாக சசிகலா தரப்பினரால் தவறான தகவல் பரப்பப்படுகின்றது. விரைவில் உள்ளாட்சி தேர்தலை தமிழக அரசு நடத்த வேண்டும். உள்ளாட்சி தேர்தலுக்கு பின்னர் அதிமுக தொண்டர்கள் அனைவரும் தங்கள் பக்கம் வந்து விடுவார்கள். இரட்டை இலை சின்னம் தங்களுக்கு கண்டிப்பாக கிடைக்கும். சட்டமன்றத்தில் நம்பிக்கை வாக்கெடுப்பு தற்போது நடத்த வாய்ப்பில்லை" இவ்வாறு மாஃபா பாண்டியராஜன் தெரிவித்தார்.

Newsletter

ஈமு கோழி மோசடி வழக்கு: இருவருக்கு தலா 10 ஆண்டு சிறை - கோவை டான்பிட் நீதிமன்றம் தீர்ப்பு.

ஈமு கோழி பண்ணை முதலீட்டு மோசடி வழக்கில் 115 பேரிடம் ரூ.2.37 கோடி மோசடி செய்ததாக குற்றம் நிரூபணமான நிலையில், இருவருக்கு த...

கோவையில் 1.03 லட்சம் தெருவிளக்குகள் ஆய்வு

கோயம்புத்தூர் மாநகராட்சிக்குட்பட்ட 100 வார்டுகளில் உள்ள 1,03,755 தெருவிளக்குகளின் செயல்பாடு குறித்து சிறப்பு ஆய்வு மேற்க...

கல்வி உதவித்தொகை மோசடி: கோவை போலீஸ் எச்சரிக்கை

கல்வி உதவித்தொகை வழங்குவதாக கூறி மாணவர்கள் மற்றும் பெற்றோர்களிடம் வங்கி விவரங்கள், OTP எண்கள் மற்றும் முன்பணம் கேட்டு மோ...

கோவையில் கோவில் சிலை திருட்டில் ஈடுபட்ட நபரை கையும், களவுமாகப் பிடித்து போலீசாரிடம் ஒப்படைப்பு

கோவை பெரியநாயக்கன்பாளையம் மகாமாரியம்மன் கோவிலில் ரூ.50,000 மதிப்புள்ள வெண்கல விநாயகர் சிலையை திருடிச் செல்ல முயன்ற நபரை...

குறுந்தொழில்களின் வளர்ச்சிக்காக மானிய நிபந்தனைகளை பரிசீலிக்க அமைச்சர்களிடம் FOCIA மனு

கோவையில் குறுந்தொழில் முனைவோர் மானியம் பெறுவதில் உள்ள தடைகள் மற்றும் தொழில் அமைப்புகளின் பதிவு, புதுப்பிப்பு சிக்கல்களுக...

ஈரான்-இஸ்ரேல் போர் எதிரொலி: 70 டூ 50 டன் - கோவை–ஷார்ஜா சரக்கு கையாளுதலில் சரிவு..!

ஈரான்-இஸ்ரேல் போர் காரணமாக விமானங்கள் கூடுதல் எரிபொருளுடன் இயக்கப்படுவதால், கோவை–ஷார்ஜா விமானங்களில் சரக்கு ஏற்றும் திறன...