தமிழகத்தில் விரைவில் எய்ம்ஸ் மருத்துவமனை அமைக்கப்படும்- மத்திய அமைச்சர் நிர்மலா சீத்தாராமன் பேட்டி


தமிழகத்தில் விரைவில் எய்ம்ஸ் மருத்துவமனை அமைப்பதற்கான நடவடிக்கையில் மத்திய அரசு ஈடுபட்டுள்ளதாக மத்திய அமைச்சர் நிர்மலா சீத்தாராமன் பேட்டியளித்தார்.

கோவை மற்றும் திருப்பூரில் நடைபெறும் நிகழ்ச்சிகளில் பங்கேற்பதற்காக விமானம் மூலம் கோவை வந்த மத்திய அமைச்சர் நிர்மலா சீத்தாராமன் விமான நிலையத்தில் செய்தியாளர்களிடம் பேட்டியளித்தார். அப்போது அவர் பேசுகையில், 

எய்ம்ஸ் மருத்துவமனை தமிழகத்தில் அமைவதற்கு மாநில அரசு ஒத்துழைப்பு தரும் என முதல்வர் கூறியது மகிழ்ச்சி அளிக்கிறது. கணினி வழி ஜிஎஸ்டி தொடர்பாக ஏற்படும் பாதிப்புகள், சந்தேகங்கள் குறித்து கோவை, திருப்பூர் சிறு, குறு தொழில் நிறுவனங்களிடம் நேரடியாக விளக்கப்படவுள்ளது. அறிவித்தப்படி ஜி.எஸ்.டி அமல்படுத்தப்பட்டாலும் அடுத்த 3 மாதங்களுக்கு வரி விதிப்பில் சில தளர்வுகள் ஏற்படுத்தப்படும்.

குடியரசுத் தேர்தலில் தேசிய ஜனநாயக கூட்டணி வேட்பாளருக்கு வெற்றி வாய்ப்புகள் பிரகாசமாக உள்ளது. அவரை வேண்டாம் என்று கூறுவதற்கு எந்த காரணங்களும் எதிர்க்கட்சிகளிடம் இல்லை. ராம்நாத் கோவிந்த் செய்தி தொடர்பாளராக இருந்தபோது கிறிஸ்துவர்கள், இஸ்லாமியர்களை "ஏலியன்ஸ்" என்று கருத்து தெரிவித்ததாக சொல்லப்படுவது முற்றிலும் பொய்" இவ்வாறு மத்திய அமைச்சர்  நிர்மலா சீத்தாராமன் தெரிவித்தார்.

Newsletter

கோவை பீளமேடு வார்டு 27-ல் நியாய விலை கடை மற்றும் தூய்மை பணி ஆய்வு

சிங்காநல்லூர் தொகுதி வார்டு 27-ல் கவுன்சிலர் அம்பிகா தனபால் இன்று நியாய விலை கடை, சாலை சுத்தம் மற்றும் குப்பை அகற்றும் ப...

சுதந்திரப் போராட்ட வீரர்களை அறிவது அனைவரின் கடமை - அமைச்சர் சம்பத்குமார்

வ.உ.சிதம்பரனாரின் 155வது பிறந்தநாளையொட்டி கோவையில் அமைச்சர் சம்பத்குமார் மரியாதை செலுத்தினார். சுதந்திரப் போராட்ட வீரர்க...

கோவை மாநகராட்சி: கோவையில் தனியார் நிலங்களில் சீமைக் கருவேலம் மரங்களை அகற்ற 10 நாள் அவகாசம்

கோவை மாநகராட்சி எல்லைக்குள் உள்ள தனியார் நிலங்களில் சீமைக் கருவேல மரங்களை 10 நாட்களுக்குள் நில உரிமையாளர்கள் வேருடன் அகற...

கோவை மாநகராட்சி: தனியார் நிலங்களில் சீமைக் கருவேலம் கப் அகற்ற 10 நாள் அவகாசம்

கோவை மாநகராட்சி எல்லைக்குள் உள்ள தனியார் நிலங்களில் சீமைக் கருவேலமரங்களை 10 நாட்களுக்குள் நில உரிமையாளர்கள் வேருடன் அகற்...

மதுக்கரை ACC சிமெண்ட் ஆலைக்கு எதிராக பொதுமக்கள் ஆர்ப்பாட்டம்

கோவை மதுக்கரையில் செயல்படும் ACC சிமெண்ட் ஆலையிலிருந்து வெளியேறும் சிமெண்ட் துகள்களால் காற்று மாசடைந்து சுவாசக் கோளாறு ஏ...

கோவையில் சாலையோர வியாபாரிகளுக்கான லோக் கல்யாண் மேலா சிறப்பு முகாம் செப்டம்பர் 7ல் தொடக்கம்

கோவை மாநகராட்சி பகுதிகளில் சாலையோர வியாபாரிகளுக்கு வங்கி கடன் வழங்கும் லோக் கல்யாண் மேலா முகாம் செப்டம்பர் 7 முதல் 25 வர...