ஜிஎஸ்டி வரி விதிப்பில் மாற்றம் செய்ய மூன்று மாதங்கள் தாமதாமாகும் என்பதால் ஆயத்த ஆடை மற்றும் நூற்பாலைகள் அதிர்ச்சி- சைமா

ஒட்டு மொத்த ஜவுளி பிரிவில் ஒரு கோடி ரூபாய் மூலதனத்திற்கு 100 முதல் 150 பேருக்கு வேலை வாய்ப்பு அளிக்கும் ஆயத்த ஆடை மற்றும் படுக்கை விரிப்புகள் துறைகளுக்கு சம்பந்தப்பட்ட கூலி வேலைக்கு நடைபெற்ற ஜிஎஸ்டி குழுவின் கூட்டத்தில் 5 சதவிகித வரி விதிக்கப்பட்டு அறிவிப்பு வெளியாகும் என்று பெரிதும் எதிர்பார்க்கப்பட்டது.

மேலும், செயற்கை பஞ்சு மற்றும் நூலின் மீதான வரியை 18-யில் இருந்து 12 சதவிகிதமாக குறைக்கப்படும் என்றும் எதிர்பார்க்கப்பட்டது. ஏனெனில் இது வரை நூற்பாலை துறை விருப்ப வரி மற்றும் 12.5 சதவிகித மத்திய கலால் வரியை செயற்கை பஞ்சு மீது செலுத்தி வந்தது. இந்நிலையில், ஜிஎஸ்டி குழுவின் முடிவான வரி விதிப்பில் மாற்றம் என்பது மூன்று மாதங்களுக்கு பிறகுதான் என்ற அறிவிப்பு செயற்கை துணி மற்றும் ஆயத்த ஆடை துறையினருக்கு பேரடியாக அமைந்துள்ளது.

இதுகுறித்து சைமா சார்பில் இன்று வெளியிடப்பட்டுள்ள பத்திரிகை குறிப்பில், தென்னிந்திய பஞ்சாலைகள் சங்கத்தின் (சைமா) தலைவர் எம்.செந்தில்குமார், ஒட்டு மொத்த பருத்தி ஜவுளி பொருட்களுக்கும் 5 சதவிகித சரக்கு மற்றும் சேவை வரி விதித்தும், நூல் மற்றும் துணி கூலி வேலைகளுக்கு 5 சதவிகித சேவை வரி அட்டவணையில் சேர்ந்தமைக்கும் மிகுந்த நன்றியை தெரிவித்துக் கொள்கிறது என்று கூறியுள்ளார்.

80 சதவிகிதத்திற்கும் அதிகமான ஆயத்த ஆடை உற்பத்தியாளர்கள் கூலிக்கு வேலை செய்து கொடுப்பவர்கள், இந்த கூலிக்கு வேலை செய்து கொடுக்கும் ஜவுளி உற்பத்தியாளர்களுக்கு 18 சதவிகித சரக்கு மற்றும் சேவை வரி விதித்தால் இவர்களால் ஒருங்கிணைந்த ஜவுளி ஆலைகளுடன் போட்டியிட முடியாத நிலை ஏற்பட்டுள்ளது. இந்த நிலையில் வரி விதிப்பில் எந்த மாற்றமும் மன்று மாதங்களுக்கு பிறகுதான் சாந்தியம் என்பது மொத்த செயற்கை பஞ்சு நூல் நூற்பாலைகள் மற்றும் ஆயத்த ஆடை துறையினரை பெரிதும் பாதிக்கும். இதனால், பல நூற்றுக் கணக்கான ஆலைகள் மூடப்பட்டு பல இலட்சம் பேர் வேலை இழக்க நேரிடும் என்று சைமா தலைவர் தெரிவித்தார்.

ஜவுளித்துறையினர் சரக்கு மற்றும் சேவை வரியை வெற்றிகரமாக அமலுக்கு கொண்டு வர அனைத்து வகையான ஒத்துழைப்பையும் நல்க தயார் என்றும் அதன் மலம் அரசு வரி வருவாய் அதிகமாகும் என்றும் செந்தில்குமார் கூறினார்.

மேற்கூறிய நியாயமான கோரிக்கைகளை கருத்தில் கொண்டால் அரசுக்கு வரி வருவாய் கூடும் என்றும், மேலும், ஜவுளித்துறையினருக்கு போட்டியிட சமதளம் உருவாக்கும் என்னும், அதன் மூலம் ஏழை, எளிய மக்களுக்கு குறைந்த விலை உயர்வில் துணிகள் கிடைக்கும் என்னும் சைமா தலைவர் கூறினார்.

எனவே, மேற்கண்ட ஜிஎஸ்டி பிரச்சனைகளை ஜூன் 30ம் தேதியன்று நடைபெறவுள்ள கூட்டத்தில் பல இலச்சக்கணக்கான தொழிலாளர்களின் வேலை வாய்ப்பை கருத்தில் கொண்டு ஆயத்த ஆடை மற்றும படுக்கை விரிப்பு சம்பந்தப்பட்ட கூலி வேலைகளை 5 சதவிகித சேவை வரி அட்டவணையில் சேர்க்க வேண்டும் என்றும் செயற்கை பஞ்சு மற்றும் நூலின் மீதான வரியை 18-யில் இருந்து 12 சதவிகிதமாக குறைக்க ஆவண செய்ய வேண்டும் என்றும் பிரதமர் மற்றும் மத்திய நிதித்துறை அமைச்சர் ஆகியோருக்கு சைமா தலைவர் வேண்டுகோள் விடுத்துள்ளார்.

Newsletter

கோவையில் 1.03 லட்சம் தெருவிளக்குகள் ஆய்வு

கோயம்புத்தூர் மாநகராட்சிக்குட்பட்ட 100 வார்டுகளில் உள்ள 1,03,755 தெருவிளக்குகளின் செயல்பாடு குறித்து சிறப்பு ஆய்வு மேற்க...

கல்வி உதவித்தொகை மோசடி: கோவை போலீஸ் எச்சரிக்கை

கல்வி உதவித்தொகை வழங்குவதாக கூறி மாணவர்கள் மற்றும் பெற்றோர்களிடம் வங்கி விவரங்கள், OTP எண்கள் மற்றும் முன்பணம் கேட்டு மோ...

கோவையில் கோவில் சிலை திருட்டில் ஈடுபட்ட நபரை கையும், களவுமாகப் பிடித்து போலீசாரிடம் ஒப்படைப்பு

கோவை பெரியநாயக்கன்பாளையம் மகாமாரியம்மன் கோவிலில் ரூ.50,000 மதிப்புள்ள வெண்கல விநாயகர் சிலையை திருடிச் செல்ல முயன்ற நபரை...

குறுந்தொழில்களின் வளர்ச்சிக்காக மானிய நிபந்தனைகளை பரிசீலிக்க அமைச்சர்களிடம் FOCIA மனு

கோவையில் குறுந்தொழில் முனைவோர் மானியம் பெறுவதில் உள்ள தடைகள் மற்றும் தொழில் அமைப்புகளின் பதிவு, புதுப்பிப்பு சிக்கல்களுக...

ஈரான்-இஸ்ரேல் போர் எதிரொலி: 70 டூ 50 டன் - கோவை–ஷார்ஜா சரக்கு கையாளுதலில் சரிவு..!

ஈரான்-இஸ்ரேல் போர் காரணமாக விமானங்கள் கூடுதல் எரிபொருளுடன் இயக்கப்படுவதால், கோவை–ஷார்ஜா விமானங்களில் சரக்கு ஏற்றும் திறன...

சிறுபான்மையினருக்கான குறைந்த வட்டி கடன் திட்டங்கள் அறிவிப்பு

தமிழ்நாடு சிறுபான்மையினர் பொருளாதார மேம்பாட்டு கழகம் மூலம் சிறுபான்மையினருக்கு தனிநபர், சுயஉதவிக்குழு, கைவினை கலைஞர் மற்...