பண மோசடி வழக்கு தொடர்பாக சுகேஷ் சந்திரசேகருக்கு ஜூலை 6-ஆம் தேதி வரை நீதிமன்ற காவல்



கர்நாடக அரசின் ஒப்பந்தம் பெற்றுத் தருவதாகக் கூறி கோவையை சேர்ந்த தொழிலதிபரிடம் பண மோசடி செய்த வழக்கு தொடர்பாக கோவை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்ட சுகேஷ் சந்திரசேகருக்கு வருகிற ஜூலை 6-ம் தேதி வரை நீதிமன்ற காவலை நீட்டித்து நீதிபதி ராஜ்குமார் உத்தரவிட்டுள்ளார்.

கோவை மாவட்டம், கணபதி பகுதியில் சமையலறை சாதனங்கள் மற்றும் மருத்துவ உபகரணங்கள் தயாரிப்பு நிறுவனங்களை நடத்தி வரும் ராஜவேலு என்பவரிடம் கடந்த 21.12.2010 அன்று கர்நாடகாவிலிருந்து அழைப்பதாக பிரகாஷ் என்பவர் பேசியுள்ளார். அப்போது கர்நாடக அரசுக்கு சமையல் உபகரணம் வாங்க ஒப்பந்த புள்ளி கோர உள்ளதாகவும், அதற்காக முதல் படிவம் பெற வேண்டும் எனக் கூறி 43 ஆயிரம் ரூபாய் பெற்றுள்ளார்.

பின்னர் இரண்டாவது கொள்முதல் செய்வதற்கான படிவம் வாங்க 1.37 லட்சம் ரூபாயை ஆன்லைன் மூலம் பெற்ற அவர், மேலும் 2 லட்சம் ரூபாய் செலுத்துமாறும் மீதத்தை திருப்பி செலுத்தி விடுவதாகவும் உறுதியளித்துள்ளார். அது மட்டுமின்றி வைப்பு தொகையாக ரூ.3.50 லட்சம் கேட்டதால் சந்தேகமடைந்த ராஜவேலு ஆன்லைன் மூலம் கர்நாடக அரசை தொடர்பு கொண்டபோது, தன்னிடம் பணம் பெற்றது போலியான நபர் என தெரிய வந்தது.

இதையடுத்து கோவை மாநகர குற்றப்பிரிவு காவல்துறையில் கடந்த 2011-ம் ஆண்டு வழக்கு பதிவு செய்யப்பட்டது. அதில் முதல் குற்றவாளியாக சுகேஷின் தந்தை சந்திரசேகரும் இரண்டாவது குற்றவாளியாக சுகேஷும் சேர்க்கப்பட்டனர்.

இவ்வழக்கின் விசாரணைக்காக கடந்த 8-ம் தேதி சுகேஷ் கோவை நீதிமன்றத்தில் ஆஜர் படுத்தப்பட்டபோது அவரை 22-ம் தேதி வரை நீதிமன்ற காவலில் வைக்குமாறு நீதிபதி உத்தரவிட்டிருந்தார். அதன்படி இன்று அதிகாலை டெல்லியிலிருந்து பலத்த பாதுகாப்புடன் அவர் கோவை அழைத்து வரப்பட்டார்.

தொடர்ந்து கோவை 2-வது குற்றவியல் நடுவர் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தபட்ட அவரை வருகிற ஜூலை மாதம் 6-ம் தேதி வரை நீதிமன்ற காவலில் வைக்க நீதிபதி ராஜ்குமார் உத்தரவிட்டார். இதையடுத்து கோவையிலிருந்து ரயில் மூலம் கேரள மாநிலம் எர்ணாகுளத்திற்கு அழைத்து செல்லப்பட்டுள்ள சுகேஷ் அங்கிருந்து பலத்த பாதுகாப்புடன் டெல்லி அழைத்து செல்லபட இருக்கிறார்.

Newsletter

கோவை பீளமேடு வார்டு 27-ல் நியாய விலை கடை மற்றும் தூய்மை பணி ஆய்வு

சிங்காநல்லூர் தொகுதி வார்டு 27-ல் கவுன்சிலர் அம்பிகா தனபால் இன்று நியாய விலை கடை, சாலை சுத்தம் மற்றும் குப்பை அகற்றும் ப...

சுதந்திரப் போராட்ட வீரர்களை அறிவது அனைவரின் கடமை - அமைச்சர் சம்பத்குமார்

வ.உ.சிதம்பரனாரின் 155வது பிறந்தநாளையொட்டி கோவையில் அமைச்சர் சம்பத்குமார் மரியாதை செலுத்தினார். சுதந்திரப் போராட்ட வீரர்க...

கோவை மாநகராட்சி: கோவையில் தனியார் நிலங்களில் சீமைக் கருவேலம் மரங்களை அகற்ற 10 நாள் அவகாசம்

கோவை மாநகராட்சி எல்லைக்குள் உள்ள தனியார் நிலங்களில் சீமைக் கருவேல மரங்களை 10 நாட்களுக்குள் நில உரிமையாளர்கள் வேருடன் அகற...

கோவை மாநகராட்சி: தனியார் நிலங்களில் சீமைக் கருவேலம் கப் அகற்ற 10 நாள் அவகாசம்

கோவை மாநகராட்சி எல்லைக்குள் உள்ள தனியார் நிலங்களில் சீமைக் கருவேலமரங்களை 10 நாட்களுக்குள் நில உரிமையாளர்கள் வேருடன் அகற்...

மதுக்கரை ACC சிமெண்ட் ஆலைக்கு எதிராக பொதுமக்கள் ஆர்ப்பாட்டம்

கோவை மதுக்கரையில் செயல்படும் ACC சிமெண்ட் ஆலையிலிருந்து வெளியேறும் சிமெண்ட் துகள்களால் காற்று மாசடைந்து சுவாசக் கோளாறு ஏ...

கோவையில் சாலையோர வியாபாரிகளுக்கான லோக் கல்யாண் மேலா சிறப்பு முகாம் செப்டம்பர் 7ல் தொடக்கம்

கோவை மாநகராட்சி பகுதிகளில் சாலையோர வியாபாரிகளுக்கு வங்கி கடன் வழங்கும் லோக் கல்யாண் மேலா முகாம் செப்டம்பர் 7 முதல் 25 வர...