சிறுமுகை வனப்பகுதியில் தண்ணீர் குடிக்க வந்த பெண் யானை உடல்நலக்குறைவால் பலி

கோவை மாவட்டம், சிறுமுகை வனப்பகுதியில் யானைகள் அதிகளவில் காணப்படுகின்றன.  இந்த காட்டு யானைகள் அவ்வப்போது உணவு மற்றும் தண்ணீருக்காக சுற்றுவட்டார குடியிருப்பு, விவசாய பகுதிகளில் நுழைவது வழக்கம். 

இந்த நிலையில், சிறுமுகை வனச்சரக வனத்துறையினர் கூத்தம் மண்டி பகுதியில் ரோந்து சென்றனர். அப்போது அணையின் நீர்த்தேக்க பகுதி அருகே ஒரு காட்டு யானை கீழே விழுந்து எழும்ப முடியாமல் போராடிக் கொண்டிருந்துள்ளது. இதுகுறித்து சிறுமுகை வனச்சரக அதிகாரி மனோகரனுக்கு தகவல் கொடுக்கப்பட்டதைத் தொடர்ந்து, வனத்துறையினர், கால்நடை மருத்துவர் ஆகியோர் சம்பவ இடத்துக்கு வந்தனர்.

கீழே விழுந்த யானை 50 வயது மதிக்கத்தக்க பெண் யானை என தெரிய வந்தது. வயதானதால் தண்ணீர் குடிக்க வந்த இடத்தில் யானை தவறி கீழே விழுந்திருப்பதும் தெரிய வந்தது.

இதனைத்தொடர்ந்து, வனத்துறையினர் மற்றும் கால்நடை மருத்துவர்கள் யானைக்கு சிகிச்சை அழித்து வந்தனனர். இதில், நேற்று சிறிது முன்னேற்றம் ஏற்பட்ட நிலையில் வனத்துறையில் தொடர்ந்து அந்த யானையினை கண்காணித்து வந்தனர்.

இந்நிலையில், இன்று காலை அந்த யானை உடல்நலக் குறைவின் காரணமாக உயிரிழந்தது. தொடர்ந்து, யானையின் உடல் பிரேத பரிசோதனைக்கு உட்படுத்தப்பட்ட பின் அதேப் பகுதியில் அடக்கம் செய்யப்படும் என வனத்துறையினர் தெரிவித்துள்ளனர்.

Newsletter

கோவை பீளமேடு வார்டு 27-ல் நியாய விலை கடை மற்றும் தூய்மை பணி ஆய்வு

சிங்காநல்லூர் தொகுதி வார்டு 27-ல் கவுன்சிலர் அம்பிகா தனபால் இன்று நியாய விலை கடை, சாலை சுத்தம் மற்றும் குப்பை அகற்றும் ப...

சுதந்திரப் போராட்ட வீரர்களை அறிவது அனைவரின் கடமை - அமைச்சர் சம்பத்குமார்

வ.உ.சிதம்பரனாரின் 155வது பிறந்தநாளையொட்டி கோவையில் அமைச்சர் சம்பத்குமார் மரியாதை செலுத்தினார். சுதந்திரப் போராட்ட வீரர்க...

கோவை மாநகராட்சி: கோவையில் தனியார் நிலங்களில் சீமைக் கருவேலம் மரங்களை அகற்ற 10 நாள் அவகாசம்

கோவை மாநகராட்சி எல்லைக்குள் உள்ள தனியார் நிலங்களில் சீமைக் கருவேல மரங்களை 10 நாட்களுக்குள் நில உரிமையாளர்கள் வேருடன் அகற...

கோவை மாநகராட்சி: தனியார் நிலங்களில் சீமைக் கருவேலம் கப் அகற்ற 10 நாள் அவகாசம்

கோவை மாநகராட்சி எல்லைக்குள் உள்ள தனியார் நிலங்களில் சீமைக் கருவேலமரங்களை 10 நாட்களுக்குள் நில உரிமையாளர்கள் வேருடன் அகற்...

மதுக்கரை ACC சிமெண்ட் ஆலைக்கு எதிராக பொதுமக்கள் ஆர்ப்பாட்டம்

கோவை மதுக்கரையில் செயல்படும் ACC சிமெண்ட் ஆலையிலிருந்து வெளியேறும் சிமெண்ட் துகள்களால் காற்று மாசடைந்து சுவாசக் கோளாறு ஏ...

கோவையில் சாலையோர வியாபாரிகளுக்கான லோக் கல்யாண் மேலா சிறப்பு முகாம் செப்டம்பர் 7ல் தொடக்கம்

கோவை மாநகராட்சி பகுதிகளில் சாலையோர வியாபாரிகளுக்கு வங்கி கடன் வழங்கும் லோக் கல்யாண் மேலா முகாம் செப்டம்பர் 7 முதல் 25 வர...