வேளாண் பல்கலையின் ஆதரவுடன் செயல்படும் மண்ணில்லா விவசாயப்பண்ணை

தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தில் வேளாண் வணிக மேம்பாட்டு இயக்ககம் 2007 ஆம் ஆண்டு துவக்கப்பட்டது.  இவ்வியக்ககம் வேளாண் தொழில் முனைவோர், வேளாண் சார் தொழில் புரிவோர் மற்றும் விவசாயிகள் ஆகியோரின் தேவைகளைப் பூர்த்தி செய்து வேளாண் வணிகத்தை மேம்படுத்தும் நோக்கத்தில் உருவாக்கப்பட்டுள்ளது. இந்திய அரசின் அறிவியல் மற்றும் தொழில் நுட்ப துறையின் உதவியுடன் தொழில்நுட்ப வணிக மேம்பாட்டு காப்பகத்தை நிறுவி வேளாண் வணிக காப்பக அமைப்பாக 2011ல் பதிவு செய்து வேளாண் சார்ந்த 182 தொழில் முனைவோருக்கு வேண்டிய ஆலோசனைகள் வழங்கி வழி நடத்துதல் மூலம் அவர்களின் தொழில் வளர்ச்சிக்கு உதவுகின்றது.



வேளாண் வணிக மேம்பாட்டு காப்பக உறுப்பினர் பிரபு சங்கர் புனேவில் வேளாண் துறையில் பி.டெக் படிப்பு முடித்துவிட்டு ஏரோபோனிக்ஸ் அடிப்படையிலான தானியாஸ் ஆர்கானிக் என்ற பெயரில் 30 ஆயிரம் சதுர அடியில் ஏரோபோனிக்ஸ் கூடம் ஒன்றை பல்லடத்தில் உள்ள செங்கோடம்பாளையம் கிராமத்தில் நிறுவி உள்ளார். இம்முறையின் மூலம் பயனற்ற விவசாய நிலங்களையும் பயன்படுத்த இயலும். தனித்துவம் வாய்ந்த இத்தொழில் நுட்ப முறையில் கட்டுப்படுத்தப்பட்ட சூழலில்  மண்ணின் துணையில்லாமல் நுண் நீர் தெளிப்பான் மற்றும் ஈரக்காற்றின் உதவியுடன் பெரும்பாண்மையான சமவெளி மற்றும் மலை பிரதேச காய்கறிகள் பயரிடப்படுகின்றன. முழுவதுமாக கட்டுபடுத்தப்பட்ட பசுமை குடில் 40 சதவிகிதம் சூரிய ஒளி ஊடுருவல் மற்றும் 60 சதவிகிதம் சூரிய ஒளி பரவுதலை அனுமதிக்கிறது. “கோடக” வடிவிலான ஏரோபோனிக்ஸ் கட்டமைப்புகள், தானியங்கி பாசன முறை, சீதோஷ்ண நிலைக்கு ஏற்றாற் போல் மாறிக் கொள்ளும் தானியங்கி சூழல் ஆகியவை ஏரோபோனிக்ஸ் முறையின் சிறப்பம்சமாகும். 



இந்த ஏரோபோனிக்ஸ் முறையில் நாளொன்றுக்கு 900 கிலோ காய்கறி உற்பத்தி செய்வதற்கு சுமார் 6000 லிட்டர் தண்ணீரே போதுமானது. நாள் முழுவதும் நிர்ணயிக்கப்பட்ட கால இடைவெளியில் தண்ணீர் தொடர்ச்சியாக செடியின் வேர் பகுதிக்கு தெளிக்கப்படுகிறது. பயிர்கள் சுமார் 2000 லிட்டர் தண்ணீரை மட்டுமே எடுத்துக்கொள்கிறது. மீதமுள்ள தண்ணீர் மறு சுழற்சி செய்யப்படுகிறது.

இம்முறையின் மூலம் கேரட், பாகற்காய், காலிபிளவர், பீட்ரூட், தக்காளி, மிளகாய், கொத்தமல்லி, புதினா மற்றும் கீரை வகைகள் போன்ற அனைத்து முக்கிய காய்கறிகளும் எளிதாக பயிரிடலாம்.



ஏரோபோனிக்ஸ் முறையில் மண் இல்லாமல், சுத்திகரிக்கப்பட்ட தண்ணீரே பாசனத்திற்கு உபயோகிப்பதால் மண் மற்றும் நீரின் மூலம் பரவக் கூடிய பூச்சிகள் மற்றும் நோய் தொற்றுகள் கட்டுப்படுத்தப்பட்டுள்ளது. மண்ணிற்கு பதிலாக நுரை பஞ்சு உபயோகிக்கப்படுகிறது. செடிகள் ஓரளவு வளர்ந்தவுடன் ஆதரவிற்காக மேலே உள்ள கம்பிகளில் கட்டப்படுகிறது. இந்த ஏரோபோனிக்ஸ் கூடத்திற்கு தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழக துணைவேந்தர் கு. இராமசாமி, தேசிய வேளாண் மற்றும் கிராமப்புற மேம்பாட்டு வங்கியின் முதன்மை பொது மேலாளர் எஸ்.என்.ஏ.ஜின்னா, வேளாண் வணிக மேம்பாட்டு இயக்ககத்தின் இயக்குநர் இரா. முருகேசன் ஆகியோர் வருகை புரிந்தனர். அவர்களுடன் தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழக அதிகாரிகள் மற்றும் நபார்ட் வங்கி அதிகாரிகள் உடனிருந்தனர்.

Newsletter

ஈமு கோழி மோசடி வழக்கு: இருவருக்கு தலா 10 ஆண்டு சிறை - கோவை டான்பிட் நீதிமன்றம் தீர்ப்பு.

ஈமு கோழி பண்ணை முதலீட்டு மோசடி வழக்கில் 115 பேரிடம் ரூ.2.37 கோடி மோசடி செய்ததாக குற்றம் நிரூபணமான நிலையில், இருவருக்கு த...

கோவையில் 1.03 லட்சம் தெருவிளக்குகள் ஆய்வு

கோயம்புத்தூர் மாநகராட்சிக்குட்பட்ட 100 வார்டுகளில் உள்ள 1,03,755 தெருவிளக்குகளின் செயல்பாடு குறித்து சிறப்பு ஆய்வு மேற்க...

கல்வி உதவித்தொகை மோசடி: கோவை போலீஸ் எச்சரிக்கை

கல்வி உதவித்தொகை வழங்குவதாக கூறி மாணவர்கள் மற்றும் பெற்றோர்களிடம் வங்கி விவரங்கள், OTP எண்கள் மற்றும் முன்பணம் கேட்டு மோ...

கோவையில் கோவில் சிலை திருட்டில் ஈடுபட்ட நபரை கையும், களவுமாகப் பிடித்து போலீசாரிடம் ஒப்படைப்பு

கோவை பெரியநாயக்கன்பாளையம் மகாமாரியம்மன் கோவிலில் ரூ.50,000 மதிப்புள்ள வெண்கல விநாயகர் சிலையை திருடிச் செல்ல முயன்ற நபரை...

குறுந்தொழில்களின் வளர்ச்சிக்காக மானிய நிபந்தனைகளை பரிசீலிக்க அமைச்சர்களிடம் FOCIA மனு

கோவையில் குறுந்தொழில் முனைவோர் மானியம் பெறுவதில் உள்ள தடைகள் மற்றும் தொழில் அமைப்புகளின் பதிவு, புதுப்பிப்பு சிக்கல்களுக...

ஈரான்-இஸ்ரேல் போர் எதிரொலி: 70 டூ 50 டன் - கோவை–ஷார்ஜா சரக்கு கையாளுதலில் சரிவு..!

ஈரான்-இஸ்ரேல் போர் காரணமாக விமானங்கள் கூடுதல் எரிபொருளுடன் இயக்கப்படுவதால், கோவை–ஷார்ஜா விமானங்களில் சரக்கு ஏற்றும் திறன...