ஜிஎஸ்டி வரியை பூதம் என நினைத்து தொழில்துறையினர் பயப்படத் தேவையில்லை- நிர்மலா சீத்தாராமன்

ஜிஎஸ்டி வரியினை பூதம் என நினைத்து தொழில் துறையினர் பயப்படத் தேவையில்லை எனவும், ஆரம்ப காலங்களில் தவிர்க்க முடியாத சிரமங்களை ஏற்படுத்தினாலும் நாட்டிற்கு பயனளிக்கும் என மத்திய அமைச்சர் நிர்மலா சீதாராமன் தெரிவித்துள்ளார்.



கோவை சிட்ரா பகுதியில் உள்ள ஒரு தனியார் திருமண மண்டபத்தில் பாஜக சார்பில் ஜிஎஸ்டி வரி நடைமுறை குறித்த கருத்தரங்கம் நடத்தப்பட்டது. இதில் மத்திய வர்த்தக மற்றும் தொழில் துறை இணை அமைச்சர் நிர்மலா சீதாராமன், மத்திய கயிறு வாரிய தலைவர் சி.பி.ராதாகிருஷ்ணன், பாஜக மாநில பொதுச் செயலாளர் வானதி சீனிவாசன் உள்ளிட்டோர் மற்றும் தொழில்துறையினை சார்ந்தவர்களும் பங்கேற்றனர்.



இந்நிகழ்ச்சியில் ஜிஎஸ்டி தொடர்பான தொழில் துறையினரின் சந்தேகங்கள் மற்றும் கேள்விகளுக்கு விளக்கம் அளிக்கப்பட்டது.  இதையடுத்து நிர்மலா சீதாராமன் பேசுகையில், ஜிஎஸ்டி தொடர்பாக விழிப்புணர்வை ஏற்படுத்தும் வகையில் அனைத்து சந்தேகம் மற்றும் கேள்விகளுக்கு பதிலளிக்க அந்தந்த தொழில் வர்த்தக சபைகளில் ஏற்பாடு செய்ய வேண்டும். ஜிஎஸ்டி கீழ்மட்ட ஊழலை ஒழிக்க சிறந்த திட்டம்.இத்திட்டத்தை எதிர்ப்பது நாட்டுக்கு நல்லத்தல்ல. ஜிஎஸ்டி நிறைவேற்றப்பட்டாலும் இன்னும் இரு மாதங்களுக்கு அதில் தொழில் துறையினர் தவறாக தகவல்கள் பதிவு செய்தாலும் அபராதம் வசூலிக்கப்படாது. 

ஜிஎஸ்டி வரிவிதிப்பு என்பது பாஜக அரசு மட்டும் கொண்டு வந்ததல்ல. இது அனைத்துக் கட்சிகளின் ஒத்துழைப்புடன் நிறைவேற்றப்பட்டது. ஜிஎஸ்டி கவுன்சிலில் அனைத்து மாநில நிதி அமைச்சர்கள், தொழில்துறையினர் உள்ளிட்டோருடன் கலந்து பேசி வரி விதிப்பு முடிவு செய்யப்பட்டது. ஜிஎஸ்டியை பூதம் என நினைத்து தொழில் துறையினர் பயப்படத் தேவையில்லை. ஆரம்ப காலங்களில் தவிர்க்க முடியாத சிரமங்களை ஏற்படுத்தினாலும் நட்டிற்கு பயனளிக்கும்" என நிர்மலா சீதாராமன் தெரிவித்தார்.



தொடர்ந்து, செய்தியாளர்களிடம் பேசிய நிர்மலா சீத்தாராமன், நாடு முழுவதும் ஒரே வரி விதிப்பு முறையினால் சுங்கச்சாவடி மற்றும் சோதனைச் சாவடிகளில் காத்திருக்கும் நேரம் பாதியாக குறையும். ஜிஎஸ்டியினால் தொழில் துறையினருக்கு பாதிப்பு ஏற்படும் என்பது தவறான பிரச்சாரம்" என்றார். எனவும் தெரிவித்தார்.

Newsletter

கோவை பீளமேடு வார்டு 27-ல் நியாய விலை கடை மற்றும் தூய்மை பணி ஆய்வு

சிங்காநல்லூர் தொகுதி வார்டு 27-ல் கவுன்சிலர் அம்பிகா தனபால் இன்று நியாய விலை கடை, சாலை சுத்தம் மற்றும் குப்பை அகற்றும் ப...

சுதந்திரப் போராட்ட வீரர்களை அறிவது அனைவரின் கடமை - அமைச்சர் சம்பத்குமார்

வ.உ.சிதம்பரனாரின் 155வது பிறந்தநாளையொட்டி கோவையில் அமைச்சர் சம்பத்குமார் மரியாதை செலுத்தினார். சுதந்திரப் போராட்ட வீரர்க...

கோவை மாநகராட்சி: கோவையில் தனியார் நிலங்களில் சீமைக் கருவேலம் மரங்களை அகற்ற 10 நாள் அவகாசம்

கோவை மாநகராட்சி எல்லைக்குள் உள்ள தனியார் நிலங்களில் சீமைக் கருவேல மரங்களை 10 நாட்களுக்குள் நில உரிமையாளர்கள் வேருடன் அகற...

கோவை மாநகராட்சி: தனியார் நிலங்களில் சீமைக் கருவேலம் கப் அகற்ற 10 நாள் அவகாசம்

கோவை மாநகராட்சி எல்லைக்குள் உள்ள தனியார் நிலங்களில் சீமைக் கருவேலமரங்களை 10 நாட்களுக்குள் நில உரிமையாளர்கள் வேருடன் அகற்...

மதுக்கரை ACC சிமெண்ட் ஆலைக்கு எதிராக பொதுமக்கள் ஆர்ப்பாட்டம்

கோவை மதுக்கரையில் செயல்படும் ACC சிமெண்ட் ஆலையிலிருந்து வெளியேறும் சிமெண்ட் துகள்களால் காற்று மாசடைந்து சுவாசக் கோளாறு ஏ...

கோவையில் சாலையோர வியாபாரிகளுக்கான லோக் கல்யாண் மேலா சிறப்பு முகாம் செப்டம்பர் 7ல் தொடக்கம்

கோவை மாநகராட்சி பகுதிகளில் சாலையோர வியாபாரிகளுக்கு வங்கி கடன் வழங்கும் லோக் கல்யாண் மேலா முகாம் செப்டம்பர் 7 முதல் 25 வர...