தேடப்படும் குற்றவாளிகள் மற்றும் திருடு போன வாகனங்களை கண்டுபிடிக்க நவீன சிசிடிவி காமிராக்கள்: கோவை மாநகர காவல்துறை துணை ஆணையர் தகவல்

காவல்துறையால் தேடப்படும் நபர்களை கண்டுபிடிப்பதற்கும், திருடு போன வாகனங்களை அடையாளம் கண்டு மீட்கும் வகையில் கோவை மாநகரில் நவீன சிசிடிவி காமிராக்கள் பொருத்தப்பட உள்ளதாக கோவை மாநகர காவல்துறை (போக்குவரத்து) துணை ஆணையர் துரை தெரிவித்துள்ளார்.

இது குறித்து அவர் சிம்ப்ளிசிட்டி-க்கு அளித்த பேட்டியில் கூறியதாவது:-

கோவை மாநகரில் விபத்துக்களை தடுக்கவும், போக்குவரத்து நெரிசலை கட்டுப்படுத்தவும் காவல்துறை சார்பில் பல்வேறு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. உதவி ஆணையர்கள் மற்றும் காவல்துறை ஆய்வாளர்கள் பள்ளி மற்றும் கல்லூரிகளுக்கு சென்று மாணவர்களிடம் போக்குவரத்து விழிப்புணர்வு நிகழ்ச்சிகளை நடத்தி வருகின்றனர்.

இந்த நிலையில், காவல்துறையினர் தேடிவரும் குற்றவாளிகளையும், திருடப்பட்ட வாகனங்களை அடையாளம் காணும் வகையிலும் நவீன சிசிடிவி காமிராக்கள் கோவையில் 15 இடங்களில் பொருத்தப்பட உள்ளது.

இந்த காமிரா 24 மணி நேரமும் கண்காணிப்பில் இருக்கும். காவல்துறையினரால் தேடப்பட்டு வரும் நபரின் புகைப்படம் காவல் கட்டுப்பாட்டு அறையில் உள்ளீடு செய்யப்பட்டிருக்கும். அந்த நபர் காமிரா பொருத்தப்பட்டிருக்கும் வழியாக செல்லும் போது, அவரின் முகம் பதிவாவதோடு, அவரின் புகைப்படத்தையும் காவல்துறை கட்டுப்பாட்டு அறைக்கு அனுப்பி வைக்கும்.

மேலும், நகரில் திருப்பட்ட வாகனங்களின் பதிவெண்களை உள்ளீடு செய்து வைத்திருப்பதன் மூலம், அந்த வாகனம் காமிராவில் பதிவானால், உடனடியாக அந்த தகவல் காவல்துறை கட்டுப்பட்டு அறைக்கு அனுப்பப்படும். இதனால், குற்றவாளிகளை மிக எளிதாக பிடிக்க முடியும்.

முதற்கட்டமாக மேட்டுப்பாளையம் சாலையில் உள்ள ‘செக் போஸ்ட்’ல்  அடுத்த வாரத்தின் தொடக்கத்தில் இந்த நவீன காமிரா பொருத்தப்பட உள்ளது." இவ்வாறு அவர் கூறினார்.

Newsletter

வடகோவையில் ஓடும் ரயிலில் இருந்து விழுந்த பயணி உயிரிழப்பு

வடகோவை ரயில் நிலையம் அருகே கன்னியாகுமரி செல்லும் எக்ஸ்பிரஸ் ரயிலில் இருந்து தவறி விழுந்த பயணி, கோவை அரசு மருத்துவமனையில்...

கோவையில் UPSC முதற்கட்ட தேர்வு: 6,526 பேர் பங்கேற்பு

இந்தியாவின் மிக முக்கியமான போட்டித் தேர்வான UPSC முதற்கட்ட தேர்வு கோவையில் 15க்கும் மேற்பட்ட மையங்களில் நடைபெற்றது. IAS,...

பெருந்துறை ரயில் நிலையத்தில் பராமரிப்பு: கோவை ரயில்கள் பகுதியாக ரத்து

ஈரோடு - திருப்பூர் இடையே பெருந்துறை ரயில் நிலையத்தில் பராமரிப்புப் பணிகள் மேற்கொள்ளப்படுவதால், மே 24ஆம் தேதி திருச்சி -...

கோடை விடுமுறையையொட்டி கோவை  போத்தனூரிலிருந்து கரக்பூருக்கு வாராந்திரச் சிறப்பு ரயில் இயக்கம்

கோடை விடுமுறையையொட்டி கோவை  போத்தனூரில் இருந்து மேற்கு வங்க மாநிலம் கரக்பூருக்கு வாராந்திர சிறப்பு ரயில் இயக்கப்பட உள்ளத...

கோவை பீளமேடு 27வது வார்டில் தூய்மை இந்தியா 2.0 திருவிழா மற்றும் பல்வேறு தூய்மை பணிகள் ஆய்வு

சிங்காநல்லூர் தொகுதி பீளமேடு வார்டு 27ல் தூய்மை இந்தியா திட்டம் 2.0 விழா நடைபெற்றது. கவுன்சிலர் அம்பிகா தனபால் குப்பை பி...

கோவை பிள்ளையார்புரத்தில் மரப்பராமரிப்பு பணிக்கு  தன்னார்வலர்களுக்கு அழைப்பு

கோவை மதுக்கரை வனச்சரகத்திற்கு உட்பட்ட பிள்ளையார்புரத்தில் கோவை குளங்கள் பாதுகாப்பு அமைப்பு சார்பில் 444-வது வார மரப்பராம...