கோவையில் கி.பி 12ஆம் நூற்றாண்டில் கொங்கு சோழர்களால் கட்டப்பட்ட தேவிசிறை அணைக்கட்டை பாதுகாக்க வாரீர்!

கோவை குளங்கள் பாதுகாப்பு அமைப்பு கோவையில் உள்ள குளங்கள், அணைக்கட்டுகள் மற்றும் வரலாற்று மிக்க கல்வெட்டுக்கள் போன்றவற்றை மீட்டு அடுத்த தலைமுறைக்கு கொடுக்கும் முயற்சியில் தொடர்ந்து ஈடுபட்டு வருகிறது. இதுவரை கோவையில் உள்ள பேரூர் பெரியகுளம், செல்வசிந்தாமணி குளம், வெள்ளலூர் குளம், செங்குளம், சுண்டக்காமுத்தூர் வரலாற்று சிறப்பு மிக்க கிணறு, குனியமுத்தூர் வாய்க்கால், மலுமிச்சம்பட்டி குட்டை என அனைத்திலும் அதிகம் காணப்பட்ட குப்பை, சீமைகருவேல மரங்கள், புதர்கள், பிளாஸ்டிக் பொருட்களை அகற்றியும், குளங்களை தூர்வாரியும் வருகின்றனர். இதில் இதுவரை வாரந்தோறும் அதிக அளவிலாக 500க்கும் மேற்பட்ட தனார்வலர்கள் கலந்து கொண்டு இப்பணியை செய்து வருகின்றனர். மேலும், இப்பணிகளில் நமது கோவை நமது பசுமை, இ.எஸ்.ஐ அமைப்பு, தமிழ் பவுண்டேஷன் கனடா, கேமரூன் உற்பத்தி இந்தியா நிறுவனம் மற்றும் பொதுமக்கள் இணைந்து தூய்மை பணியை செய்து வருகின்றனர். 



இதனை தொடர்ந்து, இருபதாவது வார களப்பணியாக பேரூர் தமிழ் கல்லூரி அருகில் உள்ள நொய்யல் ஆற்று பாலத்தில் கி.பி 12ஆம் நூற்றாண்டில் கொங்கு சோழர்களால் கட்டப்பட்ட தேவிசிறை எனும் அணையை மீட்டெடுக்கும் முயற்சியில் கோவை குளங்கள் பாதுகாப்பு அமைப்பு களம் காண உள்ளனர். கோயமுத்தூர் திருப்பணையின் மூலமாக உக்கடம் குளத்திற்கு நீர் வரும் அணைகளில் முக்கிய அணையாகும். இவ்வணை சுமார் 530 அடி கொண்டது தற்போது 200 அடி வரை அணை முழுவதும் புதர் மண்டி நிரம்பி உள்ளது. அதனை சுத்தம் செய்யும் பணியினை மேற்கொண்டு அணைக்கட்டை பாதுகாக்க வாரீர்! 



இடம்:பேரூர் தமிழ் கல்லூரி அருகில், நொய்யல் ஆற்று பாலம்.

நாள்:25/06/2017

நேரம்:காலை 7.00 முதல் 9.00வரை

ஒருங்கிணைப்பு:கோவை குளங்கள் பாதுகாப்பு அமைப்பு

தொடர்புக்கு:8015714790, 94432 37422, 9789143103, email:[email protected]

குறிப்பு: 

முழுவதும் புதர்மண்டி இருப்பதால் தன்னார்வலர்கள் தாங்கள் வரும்பொழுது கொத்து,மண்வெட்டி, அருவாள் கொண்டு வரவும்.

Newsletter

கோவை அரசு மருத்துவமனையில் இருந்து கைதி தப்பியோட்டம்: ஆந்திரா போலீசாரை ஏமாற்றிய மோசடி நபர் மீண்டும் எஸ்கேப்

கோவை அரசு மருத்துவமனையின் கைதிகள் வார்டில் சிகிச்சை பெற்று வந்த மோசடி வழக்கில் கைதான ஆந்திராவைச் சேர்ந்த பிம்முடு அஜித்க...

“மின்தேவைக்கு ஏற்ப கட்டமைப்பபை உருவாக்க தவறிய திமுக” - கோவையில் அமைச்சர் செங்கோட்டையன் குற்றச்சாட்டு.

ரூ.7,000 கோடிக்கும் மேல் செலவிடப்பட்டதாக கூறப்பட்டாலும், மின்கட்டமைப்பு மேம்பாட்டு பணிகளுக்காக வெறும் ரூ.627 கோடி மட்டும...

கோவையில் மாணவர்களுக்கு ஆபாச பதிவுகள் அனுப்பிய ஆசிரியர் போக்சோவில் கைது

கோவையில் உள்ள தனியார் பள்ளியில் மாணவர்களுக்கு வாட்ஸ்-அப் மூலம் ஆபாச புகைப்படங்கள், வீடியோக்கள் அனுப்பியதாக குற்றம்சாட்டப...

சாமானியர்களை வாட்டும் எரிவாயு விலை உயர்வு; காங்கிரஸ் சார்பில் திருப்பூரில் தெருமுனைப் பிரச்சாரம்..!

பெட்ரோல், டீசல் மற்றும் சமையல் எரிவாயு விலை உயர்வை கண்டித்து திருப்பூரில் காங்கிரஸ் கட்சியினர் தெருமுனைப் பிரச்சாரம் நடத...

வெளிநாட்டு பறவைகள் வருகையை முன்னிட்டு பெரியகுளம், வாலாங்குளத்தில் ஆகாயத்தாமரை அகற்றும் பணி தீவிரம்

ஜூலையில் வெளிநாட்டுப் பறவைகள் வருகை மற்றும் தென்மேற்குப் பருவமழையை முன்னிட்டு, கோவையின் பெரியகுளம் மற்றும் வாலாங்குளத்தி...

ரூ.50 லட்சம் கேட்டு கோவையை சேர்ந்த இருவர் கடத்தல்: 2 காவலர்கள் பணியிடை நீக்கம்; மேலும் ஒருவர் கைது

கோவையை சேர்ந்த இருவரை ரூ.50 லட்சம் கேட்டு கடத்தப்பட்ட வழக்கில் கைதான தலைமை காவலர்களான ஆனந்தன் மற்றும் மோகன் ஆகிய இருவரைய...