புதிதாய் பிறந்த குழந்தைக்கு அரிய வகை சிக்கல் - ஆபரேஷனில் சரி செய்தது ஸ்ரீராமகிருஷ்ணா மருத்துவமனை

லட்சுமி, சேர்வை தம்பதியினருக்கு செயற்கை முறை கருத்தரிப்பில் இரண்டு கிலோ எடையில், இரட்டை குழந்தை பிறந்தது. இதில், ஒரு குழந்தைக்கு அரிய வகை சிக்கல் இருப்பது கண்றியப்பட்டது.

இதனைத்தொடர்ந்து, ஸ்ரீராமகிருஷ்ணா மருத்துவமனை குழந்தைகள் நல நிபுணர் டாக்டர் தேவபிரசாத், பாதிக்கப்பட்ட குழந்தைகக்கு இருதய துடிப்பு வரைபடமும், சிடி ஸ்கேன் செய்து பார்த்தனர். அப்போது, இருதயத்தின் நிலை மோசமாக இருந்தது. ரத்தத்தை எடுத்துச் செல்லும் முக்கிய ரத்த நாளம், இடது புறமாக திரும்பி, உடல் முழுவதும் ஆக்ஸிஜன் நிரம்பிய ரத்தத்தை கொடுத்து வந்தது. இது தான் வழக்கமாக இருக்கும் முறை.



ஆனால், இந்த குழந்தைக்கு ரத்த நாளக்குழாய் ஒன்றுக்கு பதிலாக, இரட்டையாக ஒட்டியிருந்தது. இது மிகவும் அரிதான ஒன்று. இருதய குறையுடன் பிறக்கும் குழந்தைகளிலும் இந்த வகைக்கு 0.5 -1% தான் வாய்ப்பு உள்ளது. பல லட்சத்தில் ஒன்று மட்டுமே இவ்வாறு அமைய வாய்ப்பு உள்ளது.

இந்த குழந்தைக்கு இடது ரத்த நாளம் மட்டுமின்றி, வலது புறத்திலிருந்தும் ஒரு ரத்த நாளம் உருவாகி வட்ட வடிவத்தில் இருந்தது. இது, முச்சு குழலுக்கும், இரப்பை குழலுக்கும் இடையே அழுத்திக் கொண்டிருந்தது. இந்த அழுத்தம் காரணமாக குழந்தைக்கு முச்சு திணறலும், உணவுக்குழாயில் உணவு செல்ல வழியின்றியும் தவித்தது. குழந்தையின் எடை குறைந்து வந்தது.

தொடர்ந்து, அறுவை சிகிச்சை நிபுணர்கள் கொண்ட குழுவில் குழந்தைகள் இருதய அறுவை சிகிச்சை நிபுணர் டாக்டர் விஜய் சதாசிவம், டாக்டர் சுஜித், டாக்டர் ரீனுாஸ் ஆகியோர் டாக்டர் தியாகராஜ முர்த்தியுடன் இணைந்து, அறுவை சிகிச்சை செய்தனர்.

சிறிய குழந்தையாக இருந்ததால் அறுவை சிகிச்சைக்குப்பின்னும் சிக்கல்கள் நீடிக்கும். இந்த கவனிப்பை சிசுவியில் நிபுணர் டாக்டர் சித்தார்த்த புத்தவராஜூ மற்றும் டாக்டர் சுஜா மரியம் ஆகியோர் சரியான முறையில் மேற்கொண்டனர். ஒரு வாரத்தில் இவர்கள் நலமுடன் வீடு திரும்பினர்.

தற்போது, நலமடைந்த குழந்தையின் எடை அதிகரிக்க துவங்கியுள்ளதால் பெற்றோர் மகிழ்ச்சியடைந்துள்ளனர்.

Newsletter

கோவை பீளமேடு வார்டு 27-ல் நியாய விலை கடை மற்றும் தூய்மை பணி ஆய்வு

சிங்காநல்லூர் தொகுதி வார்டு 27-ல் கவுன்சிலர் அம்பிகா தனபால் இன்று நியாய விலை கடை, சாலை சுத்தம் மற்றும் குப்பை அகற்றும் ப...

சுதந்திரப் போராட்ட வீரர்களை அறிவது அனைவரின் கடமை - அமைச்சர் சம்பத்குமார்

வ.உ.சிதம்பரனாரின் 155வது பிறந்தநாளையொட்டி கோவையில் அமைச்சர் சம்பத்குமார் மரியாதை செலுத்தினார். சுதந்திரப் போராட்ட வீரர்க...

கோவை மாநகராட்சி: கோவையில் தனியார் நிலங்களில் சீமைக் கருவேலம் மரங்களை அகற்ற 10 நாள் அவகாசம்

கோவை மாநகராட்சி எல்லைக்குள் உள்ள தனியார் நிலங்களில் சீமைக் கருவேல மரங்களை 10 நாட்களுக்குள் நில உரிமையாளர்கள் வேருடன் அகற...

கோவை மாநகராட்சி: தனியார் நிலங்களில் சீமைக் கருவேலம் கப் அகற்ற 10 நாள் அவகாசம்

கோவை மாநகராட்சி எல்லைக்குள் உள்ள தனியார் நிலங்களில் சீமைக் கருவேலமரங்களை 10 நாட்களுக்குள் நில உரிமையாளர்கள் வேருடன் அகற்...

மதுக்கரை ACC சிமெண்ட் ஆலைக்கு எதிராக பொதுமக்கள் ஆர்ப்பாட்டம்

கோவை மதுக்கரையில் செயல்படும் ACC சிமெண்ட் ஆலையிலிருந்து வெளியேறும் சிமெண்ட் துகள்களால் காற்று மாசடைந்து சுவாசக் கோளாறு ஏ...

கோவையில் சாலையோர வியாபாரிகளுக்கான லோக் கல்யாண் மேலா சிறப்பு முகாம் செப்டம்பர் 7ல் தொடக்கம்

கோவை மாநகராட்சி பகுதிகளில் சாலையோர வியாபாரிகளுக்கு வங்கி கடன் வழங்கும் லோக் கல்யாண் மேலா முகாம் செப்டம்பர் 7 முதல் 25 வர...