மருத்துவ படிப்புகளுக்கான மாணவர் சேர்க்கைக்கு கோவையில் விண்ணப்ப வநியோகம் துவக்கம்

கோவையில் மருத்துவ படிப்புகளுக்கான மாணவர் சேர்க்கை விண்ணப்பங்கள் விநியோகத்தை, கோவை அரசு மருத்துவக்கல்லூரி முதல்வர் அசோகன் துவக்கி வைத்தார். மாணவர் சேர்க்கைக்கு நீட் மதிப்பெண்களுடன் 12-ம் வகுப்பு மதிப்பெண்ணையும் கணக்கில் எடுத்துக் கொள்ள வேண்டுமென பெற்றோர்கள் வலியுறுத்தியுள்ளனர்.

கோவை ஹோப்காலேஷ் பகுதியில் செயல்பட்டு வரும் கோவை அரசு மருத்துவக் கல்லூரியில் மருத்துவம் மற்றும் பல் மருத்துவ படிப்பிற்கான விண்ணப்பங்கள் விநியோகத்தை, அக்கல்லூரி முதல்வர் அசோகன் துவக்கி வைத்தார்.

இந்த விண்ணப்பங்களை வாங்குவதற்காக ஆயிரத்துக்கும் மேற்பட்ட மாணவ, மாணவிகள் ஆர்வத்துடன் இன்று மருத்துவக் கல்லூரி வளாகத்தில் குவிந்துள்ளனர்.

முதல் நாளில் மருத்துவ படிப்பிற்கான 750 விண்ணப்பங்கள் வழங்கப்படுவதாகவும், அதற்கு பின்னர் அரசு அனுப்பும் விண்ணப்பங்களை பொறுத்து வரும் ஜூலை 7-ம் தேதி விண்ணப்பங்கள் வழங்க உள்ளதாகவும் மருத்துவக் கல்லூரி முதல்வர் அசோகன் தெரிவித்தார்.

மேலும் தாழ்த்தப்பட்ட மற்றும் பழங்குடியின மாணவர்களுக்கு விண்ணப்பங்கள் இலவசமாக வழங்கப்படுவதாகவும், மாணவர்கள் மற்றும் பெற்றோர்களுக்கு தேவையான அடிப்படை வசதிகள் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளதாகவும் அவர் தெரிவித்தார்.

இதனிடையே, நீட் தேர்வு மாணவர்கள் மற்றும் பெற்றோர்களுக்கு மன வேதனை அளித்து இருப்பதாகவும், பலரின் மருத்துவ கனவை நீட் தேர்வு பறித்து இருப்பதாகவும் பெற்றோர்கள் வேதனை தெரிவித்தனர்.

பனிரெண்டாம் வகுப்பில் 1180 மதிப்பெண்களுடன், 198 கட் ஆப் மதிப்பெண் வாங்கிய மாணவர், நீட் தேர்வில் வெறும் 204 மதிப்பெண்கள் மட்டுமே வாங்கி இருப்பதாக கூறிய நிர்மலா என்ற பெற்றோர், நீட் தேர்விற்கு போதிய கால அவகாசம் அளிக்காததே இதற்கு காரணமெனவும், மாணவர் சேர்க்கைக்கு நீட் மதிப்பெண்களுடன் 12-ம் வகுப்பு மதிப்பெண்ணையும் கணக்கில் எடுத்துக் கொள்ள வேண்டுமென வலியுறுத்தினார்.

Newsletter

கோவை பீளமேடு வார்டு 27-ல் நியாய விலை கடை மற்றும் தூய்மை பணி ஆய்வு

சிங்காநல்லூர் தொகுதி வார்டு 27-ல் கவுன்சிலர் அம்பிகா தனபால் இன்று நியாய விலை கடை, சாலை சுத்தம் மற்றும் குப்பை அகற்றும் ப...

சுதந்திரப் போராட்ட வீரர்களை அறிவது அனைவரின் கடமை - அமைச்சர் சம்பத்குமார்

வ.உ.சிதம்பரனாரின் 155வது பிறந்தநாளையொட்டி கோவையில் அமைச்சர் சம்பத்குமார் மரியாதை செலுத்தினார். சுதந்திரப் போராட்ட வீரர்க...

கோவை மாநகராட்சி: கோவையில் தனியார் நிலங்களில் சீமைக் கருவேலம் மரங்களை அகற்ற 10 நாள் அவகாசம்

கோவை மாநகராட்சி எல்லைக்குள் உள்ள தனியார் நிலங்களில் சீமைக் கருவேல மரங்களை 10 நாட்களுக்குள் நில உரிமையாளர்கள் வேருடன் அகற...

கோவை மாநகராட்சி: தனியார் நிலங்களில் சீமைக் கருவேலம் கப் அகற்ற 10 நாள் அவகாசம்

கோவை மாநகராட்சி எல்லைக்குள் உள்ள தனியார் நிலங்களில் சீமைக் கருவேலமரங்களை 10 நாட்களுக்குள் நில உரிமையாளர்கள் வேருடன் அகற்...

மதுக்கரை ACC சிமெண்ட் ஆலைக்கு எதிராக பொதுமக்கள் ஆர்ப்பாட்டம்

கோவை மதுக்கரையில் செயல்படும் ACC சிமெண்ட் ஆலையிலிருந்து வெளியேறும் சிமெண்ட் துகள்களால் காற்று மாசடைந்து சுவாசக் கோளாறு ஏ...

கோவையில் சாலையோர வியாபாரிகளுக்கான லோக் கல்யாண் மேலா சிறப்பு முகாம் செப்டம்பர் 7ல் தொடக்கம்

கோவை மாநகராட்சி பகுதிகளில் சாலையோர வியாபாரிகளுக்கு வங்கி கடன் வழங்கும் லோக் கல்யாண் மேலா முகாம் செப்டம்பர் 7 முதல் 25 வர...