ஒவ்வொரு ஓவியத்திலும் ஒரு தகவல்சொல்லும் கோவை வனக் கல்லூரியின் சுற்றுச்சுவர்

கோவை மாவட்டம், தடாகம் சாலையில் அமைந்துள்ளது வனக்கல்லூரி. அன்றாடம் கல்லூரி மாணவர்கள், பொதுமக்கள் என பல்லாயிரக் கணக்கானோர் பயணிக்கும் இந்த சாலையில் வனக்கல்லூரியின் சுற்றுச்சுவர் அசுத்தம் நிறைந்ததாகக் காணப்பட்டது.



இதனைத்தொடர்ந்து, தமிழக அரசு தொழில்நுட்பக் கல்லூரி (ஜிசிடி) ரோட்டரி கிளப் மாணவர்கள் இணைந்து ஜிசிடி கல்லூரி முதல் வனக்கல்லூரி வரையிலான சுற்றுச்சுவற்றில் சமூக விழிப்புணர்வுமிக்க ஓவியங்களை வரைய முன்வந்தனர்.



அதன்படி, இத்திட்டத்திற்கு ரவுண்டு டேபில் 31 அமைப்பின் நிதி உதவியுடன் இக்கல்லூரியின் சுற்றுச்சுவற்றில் ஓவியங்கள் வரையும் பணி துவங்கப்பட்டு தற்போது முடியும் தருவாயினை எட்டியுள்ளது.



இதுகுறித்து ஜிசிடி கல்லூரி மாணவரும், அக்கல்லூரி ரோட்டரி கிளப் தலைவருமாகிய அனக்ஸ் கூறுகையில், பெரும்பாலான மக்கள் சாலையின் ஓரத்தில் உள்ள நடைபாதையினை பயன்படுத்த மறுத்து வருகின்றனர். காரணம், அவை மிகவும் சுகாதாரமற்ற நிலையில் உள்ளதே ஆகும். அதுபோன்றுள்ள ஜிசிடி முதல் வனக்கல்லூரி வரையிலான நடைபாதை அருகே உள்ள சுற்றுசுவற்றில் ஓவியங்கள் வரைய திட்டமிட்டோம்.



இதில், நமது கலாச்சாரம், கலை, பெண்கள் முன்னேற்றம், வனவிலங்குகள், இரத்த தானம், மாசுபாடுகள் உள்ளிட்ட பயனுள்ள தகவல்கள் கொண்ட ஓவியங்கள் வரையப்பட்டு வருகின்றன.



இதனைக்காணும் போது, அவ்வழியாக செல்லும் மக்கள் மகிழ்ச்சி அடைவர். நடைபாதையும் சுகாதாரமாக இருக்கும். இதற்கான அனைத்து உதவிகளையும் ரவுண்டு டேபில் 31 அமைப்பு வழங்கி வருகிறது.



பொதுமக்களும், இந்த சுவற்றில் ஓவியங்கள் வரைய விரும்பினால் அதற்கான உபகரணங்கள் அனைத்தும் நாங்கள் வழங்குகிறோம். உங்களது ஓவியங்களை வரைந்து சுற்றுச்சூழலை தூய்மையாக வைத்துக்கொள்ள முன் வாருங்கள்' என்றார்.

Newsletter

கோவை பீளமேடு வார்டு 27-ல் நியாய விலை கடை மற்றும் தூய்மை பணி ஆய்வு

சிங்காநல்லூர் தொகுதி வார்டு 27-ல் கவுன்சிலர் அம்பிகா தனபால் இன்று நியாய விலை கடை, சாலை சுத்தம் மற்றும் குப்பை அகற்றும் ப...

சுதந்திரப் போராட்ட வீரர்களை அறிவது அனைவரின் கடமை - அமைச்சர் சம்பத்குமார்

வ.உ.சிதம்பரனாரின் 155வது பிறந்தநாளையொட்டி கோவையில் அமைச்சர் சம்பத்குமார் மரியாதை செலுத்தினார். சுதந்திரப் போராட்ட வீரர்க...

கோவை மாநகராட்சி: கோவையில் தனியார் நிலங்களில் சீமைக் கருவேலம் மரங்களை அகற்ற 10 நாள் அவகாசம்

கோவை மாநகராட்சி எல்லைக்குள் உள்ள தனியார் நிலங்களில் சீமைக் கருவேல மரங்களை 10 நாட்களுக்குள் நில உரிமையாளர்கள் வேருடன் அகற...

கோவை மாநகராட்சி: தனியார் நிலங்களில் சீமைக் கருவேலம் கப் அகற்ற 10 நாள் அவகாசம்

கோவை மாநகராட்சி எல்லைக்குள் உள்ள தனியார் நிலங்களில் சீமைக் கருவேலமரங்களை 10 நாட்களுக்குள் நில உரிமையாளர்கள் வேருடன் அகற்...

மதுக்கரை ACC சிமெண்ட் ஆலைக்கு எதிராக பொதுமக்கள் ஆர்ப்பாட்டம்

கோவை மதுக்கரையில் செயல்படும் ACC சிமெண்ட் ஆலையிலிருந்து வெளியேறும் சிமெண்ட் துகள்களால் காற்று மாசடைந்து சுவாசக் கோளாறு ஏ...

கோவையில் சாலையோர வியாபாரிகளுக்கான லோக் கல்யாண் மேலா சிறப்பு முகாம் செப்டம்பர் 7ல் தொடக்கம்

கோவை மாநகராட்சி பகுதிகளில் சாலையோர வியாபாரிகளுக்கு வங்கி கடன் வழங்கும் லோக் கல்யாண் மேலா முகாம் செப்டம்பர் 7 முதல் 25 வர...