சூலூர் ஒன்றிய மகளிர் அணித் தலைவியை தாக்கிய பேரூராட்சி முன்னாள் தலைவர் தலைமறைவு

சூலூர் பேரூராட்சியின் முன்னாள் தலைவர் சண்முகம். தமிழக இடைக்கால முதலமைச்சராக செயல்பட்ட ஓ.பன்னீர் செல்வம் அணியினை சேர்ந்த இவர் சூலூர் பேரூராட்சி பணிகளுக்காக சேகரிக்கப்படும் மணல்களை முறைகேடாக எடுத்து விற்பனை செய்துவந்துள்ளார். இதனைக் கண்டித்து அனைத்துக் கட்சிகள் சார்பில் கண்டன போராட்டங்கள் நடைபெற்றன.

இந்நிலையில் சூலூர் ஒன்றியத்தின் மகளிர் அணித் தலைவி ராதாமணியின் தூண்டுதளின் பெயரிலேயே அனைத்துக் கட்சிகள் இப்பிரச்சனையில் தலையிடுவதாகக் கூறி சூலூர் பேரூராட்சி முன்னாள் தலைவர் சண்முகம், அவரது மகன் மற்றும் கார் ஓட்டுநர் இணைந்து ராதாமணியை கண்மூடித்தனமாக தாக்கியுள்ளனர்.

இதில் படுகாயமடைந்த ராதாமணி காவல்நிலையத்தில் புகார் அளித்த நிலையில் தற்போது தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார்.

இதுகுறித்து வழக்கு பதிவு செய்த காவல்துறையினர் கொலைவெறித் தாக்குதலில் ஈடுபட்டு தற்போது தலைமறைவாக உள்ள சூலூர் பேரூராட்சி முன்னாள் தலைவர் சண்முகம், அவரது மகன் மற்றும் கார் ஓட்டுநரை தேடிவருகின்றனர்.

முன்னதாக, சூலூர் ஒன்றிய மகளிர் அணித் தலைவி ராதாமணி கடந்த வாரம் ஓ.பன்னீர் செல்வம் அணியில் இருந்து தமிழக முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி அணிக்கு மாறியது குறிப்பிடத்தக்கது.

Newsletter

கோவை சிறுமி கொலை வழக்கு: ஈரநெஞ்சம் காப்பக முதியோர்கள் மெழுகுவர்த்தி ஏந்தி மௌன அஞ்சலி

கோவை சூலூர் அருகே 10 வயது சிறுமி பாலியல் வன்கொடுமைக்கு உள்ளாக்கப்பட்டு படுகொலை செய்யப்பட்ட சம்பவத்திற்கு நீதி கேட்டு ஈரந...

காய்ச்சலால் கோவை தனியார் மருத்துவமனையில் அமைச்சர் செங்கோட்டையன் அனுமதி

லேசான காய்ச்சல் காரணமாக தமிழக வருவாய்த்துறை அமைச்சர் செங்கோட்டையன் கோவையில் உள்ள KMCH தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப...

ஆனைமலை புலிகள் காப்பகம்: காண்டூர் கால்வாயில் சிக்கி ஆண் யானை உயிரிழப்பு

பொள்ளாச்சி வனக்கோட்டம் காண்டூர் கால்வாயில் 20 அடி ஆழத்தில் சிக்கிய ஆண் யானையை மீட்க முயற்சி மேற்கொள்ளப்பட்ட நிலையில், நீ...

வடகோவையில் ஓடும் ரயிலில் இருந்து விழுந்த பயணி உயிரிழப்பு

வடகோவை ரயில் நிலையம் அருகே கன்னியாகுமரி செல்லும் எக்ஸ்பிரஸ் ரயிலில் இருந்து தவறி விழுந்த பயணி, கோவை அரசு மருத்துவமனையில்...

கோவையில் UPSC முதற்கட்ட தேர்வு: 6,526 பேர் பங்கேற்பு

இந்தியாவின் மிக முக்கியமான போட்டித் தேர்வான UPSC முதற்கட்ட தேர்வு கோவையில் 15க்கும் மேற்பட்ட மையங்களில் நடைபெற்றது. IAS,...

பெருந்துறை ரயில் நிலையத்தில் பராமரிப்பு: கோவை ரயில்கள் பகுதியாக ரத்து

ஈரோடு - திருப்பூர் இடையே பெருந்துறை ரயில் நிலையத்தில் பராமரிப்புப் பணிகள் மேற்கொள்ளப்படுவதால், மே 24ஆம் தேதி திருச்சி -...