முன்னறிவிப்பின்றி பணி நீக்கம் செய்த தனியார் நிறுவனத்தைக் கண்டித்து ஊழியர்கள் உள்ளிருப்பு போராட்டம்

முன்னறிவிப்பின்றி பணி நீக்கம் செய்யப்பட்டதால் கோவையில் தனியார் நிறுவன ஊழியர்கள் 50-க்கும் மேற்பட்டோர் நிறுவனத்தில் உள்ளிருப்பு போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.

கோவை மாவட்டம், ஈச்சனாரி அடுத்த செட்டிபாளையம் பகுதியில் கில்பர் கோ வீடர் ரூட் இந்தியன் பிரைவேட் லிமிடட் என்ற தனியார் எம்.என்.சி நிறுவனம் செயல்பட்டு வருகிறது. இங்கு இந்திய அரசின் பெட்ரோலிய துறையின் ஒப்பந்தத்தின் பேரில் பெட்ரோல் பம்புகள் தயாரிக்கப்பட்டு வருகிறது. இந்நிறுவனத்தில் 100 நிரந்தர ஊழியர்களும், 150-க்கும் மேற்பட்ட ஒப்பந்த ஊழியர்களும் என 250-க்கும் மேற்பட்டோர் பணியாற்றி வருகின்றனர்.



இந்நிலையில் ஒப்பந்த அடிப்படையில் பணியாற்றும் 50-க்கும் மேற்பட்ட ஊழியர்களை திங்கட்கிழமை முதல் பணிக்கு வரவேண்டாம் என நிர்வாகம் அறிவித்துள்ளது. இதனால் அதிர்ச்சி அடைந்த ஒப்பந்த ஊழியர்கள் நிறுவனத்தில் உள்ளிருப்பு போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.

இதுகுறித்து கில்பர் கோ வீடர் ரூட் இந்தியன் பிரைவேட் லிமிடட் நிர்வாகத் தரப்பில், அரசின் ஒப்பந்தம் காலாவதியாகிவிட்டதாகவும் இதனால் தொழிலாளர்களுக்கு வேலை வழங்க இயலாது என விளக்கம் அளித்துள்ளது.

இதுகுறித்து அந்நிறுவன ஊழியர்கள் கூறுகையில், திடீரென ஒப்பந்த ஊழியர்களை பணி நீக்கம் செய்வது இந்நிறுவனத்தின் வாடிக்கையாக உள்ளது. இதனை தடுக்கவே உள்ளிருப்பு போராட்டத்தில் ஈடுபட்டு வருகிறோம். 

எந்த ஒரு முன் அறிவிப்பும் இல்லாமல் திடீரென பணிக்கு வர வேண்டாம் என நிர்வாகம் தரப்பில் கூறப்பட்டுள்ளது. இதனை நம்பி உள்ள தொழிலாளர்களின் குடும்பங்கள் பொருளாதார ரீதியாக கடுமையாக பாதிக்கப்படக் கூடும்.

மூன்று மாத கால அவகாசம் வழங்க வேண்டும் அல்லது மூன்று மாத ஊதியத்தை வழங்க வேண்டும் என வலியுறுத்தினர். மேலும், தங்கள் கோரிக்கை நிறைவேறும் வரை உள்ளிருப்பு போராட்டம் தொடரும் எனவும் தெரிவித்துள்ளனர்.

Newsletter

கோவை பீளமேடு வார்டு 27-ல் நியாய விலை கடை மற்றும் தூய்மை பணி ஆய்வு

சிங்காநல்லூர் தொகுதி வார்டு 27-ல் கவுன்சிலர் அம்பிகா தனபால் இன்று நியாய விலை கடை, சாலை சுத்தம் மற்றும் குப்பை அகற்றும் ப...

சுதந்திரப் போராட்ட வீரர்களை அறிவது அனைவரின் கடமை - அமைச்சர் சம்பத்குமார்

வ.உ.சிதம்பரனாரின் 155வது பிறந்தநாளையொட்டி கோவையில் அமைச்சர் சம்பத்குமார் மரியாதை செலுத்தினார். சுதந்திரப் போராட்ட வீரர்க...

கோவை மாநகராட்சி: கோவையில் தனியார் நிலங்களில் சீமைக் கருவேலம் மரங்களை அகற்ற 10 நாள் அவகாசம்

கோவை மாநகராட்சி எல்லைக்குள் உள்ள தனியார் நிலங்களில் சீமைக் கருவேல மரங்களை 10 நாட்களுக்குள் நில உரிமையாளர்கள் வேருடன் அகற...

கோவை மாநகராட்சி: தனியார் நிலங்களில் சீமைக் கருவேலம் கப் அகற்ற 10 நாள் அவகாசம்

கோவை மாநகராட்சி எல்லைக்குள் உள்ள தனியார் நிலங்களில் சீமைக் கருவேலமரங்களை 10 நாட்களுக்குள் நில உரிமையாளர்கள் வேருடன் அகற்...

மதுக்கரை ACC சிமெண்ட் ஆலைக்கு எதிராக பொதுமக்கள் ஆர்ப்பாட்டம்

கோவை மதுக்கரையில் செயல்படும் ACC சிமெண்ட் ஆலையிலிருந்து வெளியேறும் சிமெண்ட் துகள்களால் காற்று மாசடைந்து சுவாசக் கோளாறு ஏ...

கோவையில் சாலையோர வியாபாரிகளுக்கான லோக் கல்யாண் மேலா சிறப்பு முகாம் செப்டம்பர் 7ல் தொடக்கம்

கோவை மாநகராட்சி பகுதிகளில் சாலையோர வியாபாரிகளுக்கு வங்கி கடன் வழங்கும் லோக் கல்யாண் மேலா முகாம் செப்டம்பர் 7 முதல் 25 வர...