கோவை மாநகராட்சி உள்ளாட்சித் தேர்தல் வாக்காளர் பட்டியல் வெளியீடு

கோவை மாநகராட்சியில் சாதாரண உள்ளாட்சித் தேர்தல் 2017-க்கான புகைப்படத்துடன் கூடிய வாக்காளர் பட்டியல் இன்று கோவை மாநகராட்சி உள்ளாட்சி தேர்தல் வாக்காளர் பதிவு அலுவலரும் மாநகராட்சி ஆணையர் மற்றும் தனி அலுவலருமான க.விஜயகார்த்திகேயன் அவர்களால் வெளியிடப்பட்டது.

கோவை மாநகராட்சியின் 100 வார்டுகளுக்கான மொதத் வாக்காளர்கள் 1414312, அவற்றுள் ஆண் வாக்காளர்களின் எண்ணிக்கை 710127, பெண் வாக்காளர்களின் எண்ணிக்கை 704022 மற்றும் பிற வாக்காளர்கள் எண்ணிக்கை 163 ஆகும். கோவை மாநகராட்சி 100 வார்டுகளுக்கான வாக்காளர் பட்டியலின் மொத்த பகுதிகள் 1187, இந்த பகுதிகளுக்கான வாக்குசாவடி விவரங்கள் வருவமாறு, அனைத்து வாக்காளர் வாக்குசாவடிகளின் எண்ணிக்கை 1177, அவற்றுள் பிரத்யேகமாக ஆண் வாக்காளர்களின் வாக்குசாவடிகளின் எண்ணிக்கை - 10, பிரத்யேகமாக பெண் வாக்காளர்களின் வாக்குசாவடிகளின் எண்ணிக்கை - 10, மொத்த வாக்குச்சாவடி மையங்களின் எண்ணிக்கை - 1197 ஆகும்.

கோவை மாநகராட்சி உள்ளாட்சி அமைப்புகளுக்கான வாக்காளர் பட்டியல் பொது மக்கள் பார்வைக்காக கோவை மாநகராட்சி பிரதான அலுவலக வளாகம், அனைதது; மண்டலங்களின் உதவி ஆணையர் அலுவலகங்கள், கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலகங்கள் ஆகியவற்றுள் வைக்கப்பட்டுள்ளது.

இந்நிகழ்வின் போது மாநகராட்சி துணை ஆணையர் ப.காந்திமதி, மாமன்ற செயலாளர் ஆ.அமுல்ராஜ் ஆகியோர் உள்ளனர்.

Newsletter

கோவை சிறுமி கொலை வழக்கு: ஈரநெஞ்சம் காப்பக முதியோர்கள் மெழுகுவர்த்தி ஏந்தி மௌன அஞ்சலி

கோவை சூலூர் அருகே 10 வயது சிறுமி பாலியல் வன்கொடுமைக்கு உள்ளாக்கப்பட்டு படுகொலை செய்யப்பட்ட சம்பவத்திற்கு நீதி கேட்டு ஈரந...

காய்ச்சலால் கோவை தனியார் மருத்துவமனையில் அமைச்சர் செங்கோட்டையன் அனுமதி

லேசான காய்ச்சல் காரணமாக தமிழக வருவாய்த்துறை அமைச்சர் செங்கோட்டையன் கோவையில் உள்ள KMCH தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப...

ஆனைமலை புலிகள் காப்பகம்: காண்டூர் கால்வாயில் சிக்கி ஆண் யானை உயிரிழப்பு

பொள்ளாச்சி வனக்கோட்டம் காண்டூர் கால்வாயில் 20 அடி ஆழத்தில் சிக்கிய ஆண் யானையை மீட்க முயற்சி மேற்கொள்ளப்பட்ட நிலையில், நீ...

வடகோவையில் ஓடும் ரயிலில் இருந்து விழுந்த பயணி உயிரிழப்பு

வடகோவை ரயில் நிலையம் அருகே கன்னியாகுமரி செல்லும் எக்ஸ்பிரஸ் ரயிலில் இருந்து தவறி விழுந்த பயணி, கோவை அரசு மருத்துவமனையில்...

கோவையில் UPSC முதற்கட்ட தேர்வு: 6,526 பேர் பங்கேற்பு

இந்தியாவின் மிக முக்கியமான போட்டித் தேர்வான UPSC முதற்கட்ட தேர்வு கோவையில் 15க்கும் மேற்பட்ட மையங்களில் நடைபெற்றது. IAS,...

பெருந்துறை ரயில் நிலையத்தில் பராமரிப்பு: கோவை ரயில்கள் பகுதியாக ரத்து

ஈரோடு - திருப்பூர் இடையே பெருந்துறை ரயில் நிலையத்தில் பராமரிப்புப் பணிகள் மேற்கொள்ளப்படுவதால், மே 24ஆம் தேதி திருச்சி -...