கோவை மாநகராட்சியில் திறந்த வெளியினை கழிப்பிடமாக பயன்படுத்தியதற்காக அபராதம் விதிப்பு

கோவை மாநகராட்ச்சியை திறந்தவெளி கழிப்பிடம் இல்லாத மாநகரமாக உருவாக்க மாநகராட்சி ஆணையர் மற்றும் தனி அலுவலர் க.விஜயகார்த்திகேயன் உத்தரவின் பேரில் ஐந்து மண்டலங்களுக்கு உட்பட்ட பகுதிகளில் திறந்தவெளியினை கழிப்பிடமாக பயன்படுத்துவது தொடர்பாக ஆய்வு நடத்தப்பட்டதில் ரூ.4,550 அபராதம் விதிக்கப்பட்டது.

இதுகுறித்து கோவை மாநகராட்சி ஆணையர் மற்றுத் தனி அலுவலர் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் தெரிவித்துள்ளதாவது:-

கோவை மாநகராட்சியில் திறந்த வெளியில் மலம் கழிப்பதை தவிர்ப்பது தொடர்பான பல்வேறு நடவடிக்கைகளும், பொது மக்களுக்கு பல்வேறு விழிப்புணர்வு பிரச்சாரங்களும் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. மேலும், கோவை மாநகராட்சியும் தூய்மை பாரத இயக்கமும் இணைந்து திறந்த வெளியில் மலம் கழிப்பதை தடுக்கும் விதமாக தனி நபர் கழிப்பறைகள் கட்டப்பட்டு வருகிறது.

அதனைத்தொடர்ந்து, கோவை மாநகராட்சிக்கு உட்பட்ட 5 மண்டலங்களிலும் ஆய்வு மேற்கொள்ளப்பட்டதில் திறந்தவெளியினை கழிப்பிடமாக பயன்படுத்துவது தொடர்பாக ரூ.4,550 அபராதம் விதிக்கப்பட்டது.

மேலும், கோவை மாநகரை திறந்தவெளி கழிப்பிடமில்லா நகரமாக அறிவிக்க காரணமாக இருந்து, ஒத்துழைப்பு நல்கிய அனைத்து பொதுமக்களுக்கும் மாநகராட்சி சார்பாக நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன். மேலும், கோவை மாநகராட்சிப் பகுதிகளில் வருங்காலங்களில் பொது மக்கள் திறந்த வெளியில் மலம் கழிக்காமல் இருக்குமாறு கேட்டுக்கொள்கிறேன். குறிப்பாக பொது மக்கள் வீட்டிலுள்ள தனிநபர் கழிப்பிடங்கள், பொது கழிப்பிடங்கள் மற்றும் சமுதாயக் கழிப்பிடங்கள் மட்டுமே பயன்படுத்த வேண்டும்.

மேலும், பொது மக்கள் தங்கள் பகுதிகளில் அல்லது அவர்களுடைய வீடுகளில் கழிப்பிட வசதி இல்லாமல் இருந்தால் சம்பந்தப்பட்ட மாநகராட்சி மண்டல அலுவலகத்தை தொடர்பு கொண்டால், மாநகராட்சி மூலம் உடனடியாக கழிப்பிடங்கள் கட்ட ஏற்பாடு செய்து தரப்படும். மேலும், பொது மக்கள் திறந்த வெளியில் மலம் கழித்தால் மாநகராட்சி மூலம் அபராதம் விதிக்கப்படும்.

ஆகவே, பொது மக்கள் இனி வரும் காலங்களில் கழிப்பிடங்களை மட்டுமே பயன்படுத்தி, கோவை மாநகரை திறந்த வெளி கழிப்பிடமில்லா மாநகரமாகவும், தூய்மையான மாநகரமாகவும் திகழ பொது மக்கள் ஒத்துழைப்பு தருமாறு கேட்டுக்கொள்கிறேன. இவ்வாறு மாநகராட்சி ஆணையர் மற்றும் தனி அலுவலர் க.விஜயகார்த்திகேயன் தெரிவித்துள்ளார்.

Newsletter

கோவை பீளமேடு வார்டு 27-ல் நியாய விலை கடை மற்றும் தூய்மை பணி ஆய்வு

சிங்காநல்லூர் தொகுதி வார்டு 27-ல் கவுன்சிலர் அம்பிகா தனபால் இன்று நியாய விலை கடை, சாலை சுத்தம் மற்றும் குப்பை அகற்றும் ப...

சுதந்திரப் போராட்ட வீரர்களை அறிவது அனைவரின் கடமை - அமைச்சர் சம்பத்குமார்

வ.உ.சிதம்பரனாரின் 155வது பிறந்தநாளையொட்டி கோவையில் அமைச்சர் சம்பத்குமார் மரியாதை செலுத்தினார். சுதந்திரப் போராட்ட வீரர்க...

கோவை மாநகராட்சி: கோவையில் தனியார் நிலங்களில் சீமைக் கருவேலம் மரங்களை அகற்ற 10 நாள் அவகாசம்

கோவை மாநகராட்சி எல்லைக்குள் உள்ள தனியார் நிலங்களில் சீமைக் கருவேல மரங்களை 10 நாட்களுக்குள் நில உரிமையாளர்கள் வேருடன் அகற...

கோவை மாநகராட்சி: தனியார் நிலங்களில் சீமைக் கருவேலம் கப் அகற்ற 10 நாள் அவகாசம்

கோவை மாநகராட்சி எல்லைக்குள் உள்ள தனியார் நிலங்களில் சீமைக் கருவேலமரங்களை 10 நாட்களுக்குள் நில உரிமையாளர்கள் வேருடன் அகற்...

மதுக்கரை ACC சிமெண்ட் ஆலைக்கு எதிராக பொதுமக்கள் ஆர்ப்பாட்டம்

கோவை மதுக்கரையில் செயல்படும் ACC சிமெண்ட் ஆலையிலிருந்து வெளியேறும் சிமெண்ட் துகள்களால் காற்று மாசடைந்து சுவாசக் கோளாறு ஏ...

கோவையில் சாலையோர வியாபாரிகளுக்கான லோக் கல்யாண் மேலா சிறப்பு முகாம் செப்டம்பர் 7ல் தொடக்கம்

கோவை மாநகராட்சி பகுதிகளில் சாலையோர வியாபாரிகளுக்கு வங்கி கடன் வழங்கும் லோக் கல்யாண் மேலா முகாம் செப்டம்பர் 7 முதல் 25 வர...