முன்னாள் நிதி அமைச்சர் ப.சிதம்பரம் பொருளாதாரத்தில் தலை சிறந்தவர் என்ற எண்ணம் கொண்டவர் - இல.கணேசன் பேட்டி

முன்னாள் நிதி அமைச்சர் ப.சிதம்பரம் தான் மட்டுமே பொருளாதாரத்தில் தலை சிறதவர் என்ற எண்ணம் கொண்டவர் என இல.கணேசன் விமர்சித்துள்ளார்.

கோவை கட்சி நிர்வாகி ஒருவரின் திருமண விழாவில் பங்கேற்க விமானம் மூலம் வந்த பா.ஜ.க மாநிலங்களவை உறுப்பினர் இல.கணேசன் செய்தியாளர்களுக்கு பேட்டியளித்தார்.

அப்போது, பா.ஜ.க அரசு அனைத்து கட்சிகளுடன் கலந்து பேசியே ஜி.எஸ்.டியினை அமல்படுத்தியது எனவும் பா.ஜ.க விற்கு பெருமை சேர்ந்து விட கூடாது என்பதற்காகவே காங்கிரஸ் கட்சியும், கம்யூனிஸ்ட் கட்சியும் நாடாளுமன்ற கூட்டத்தை புறக்கணித்ததாக தெரிவித்தார்.

முன்னாள் நிதி அமைச்சர் ப.சிதம்பரம்  பொருளாதாரத்தில் தான்  மட்டுமே தலைசிறந்தவர் என்ற எண்ணம் கொண்டவர் எனவும்  ஜி.எஸ்.டி குறித்து விவாதிக்க விரும்பி இருந்தால் அவர் நாடாளுமன்றத்திற்கு வந்திருக்க வேண்டும் என ஜி.எஸ்.டி குறித்து சிதம்பரம் கூறய கருத்தை விமர்சித்தார்.

மேலும், சிதம்பரம் உள்ளிட்ட எதிர்கட்சிகள், பொதுமக்கள் போன்றவர்களின் விமர்சனங்களை, கருத்துகளை, ஆலோசனைகளை பா.ஜ.க வரவேற்பதாக தெரிவித்தார். தமிழக அரசு தற்போது ஆட்சியில் கவனம் செலுத்த துவங்கி உள்ளது என கூறியவர் கல்வி துறை சிறப்பாக செயல்பட துவங்கியது போல மற்ற துறைகளிலும் தமிழக அரசு கவனம் செலுத்த வேண்டும் எனறார்.

அதிமுக ஆட்சி கலையும் சூழல் தமிழகத்திற்கு வரக்கூடாது என தெரிவித்தவர் தமிழகத்தில் ஆட்சி கலைய வேண்டும் என்பது திமுக செயல் தலைவர் ஸ்டாலினின் எதிர்பார்ப்பு எனவும் ஆனால தமிழ்நாட்டில் திமுக ஆட்சிக்கு வராது எனவும் இல.ணேசன் தெரிவித்தார்.

Newsletter

கோவை பீளமேடு வார்டு 27-ல் நியாய விலை கடை மற்றும் தூய்மை பணி ஆய்வு

சிங்காநல்லூர் தொகுதி வார்டு 27-ல் கவுன்சிலர் அம்பிகா தனபால் இன்று நியாய விலை கடை, சாலை சுத்தம் மற்றும் குப்பை அகற்றும் ப...

சுதந்திரப் போராட்ட வீரர்களை அறிவது அனைவரின் கடமை - அமைச்சர் சம்பத்குமார்

வ.உ.சிதம்பரனாரின் 155வது பிறந்தநாளையொட்டி கோவையில் அமைச்சர் சம்பத்குமார் மரியாதை செலுத்தினார். சுதந்திரப் போராட்ட வீரர்க...

கோவை மாநகராட்சி: கோவையில் தனியார் நிலங்களில் சீமைக் கருவேலம் மரங்களை அகற்ற 10 நாள் அவகாசம்

கோவை மாநகராட்சி எல்லைக்குள் உள்ள தனியார் நிலங்களில் சீமைக் கருவேல மரங்களை 10 நாட்களுக்குள் நில உரிமையாளர்கள் வேருடன் அகற...

கோவை மாநகராட்சி: தனியார் நிலங்களில் சீமைக் கருவேலம் கப் அகற்ற 10 நாள் அவகாசம்

கோவை மாநகராட்சி எல்லைக்குள் உள்ள தனியார் நிலங்களில் சீமைக் கருவேலமரங்களை 10 நாட்களுக்குள் நில உரிமையாளர்கள் வேருடன் அகற்...

மதுக்கரை ACC சிமெண்ட் ஆலைக்கு எதிராக பொதுமக்கள் ஆர்ப்பாட்டம்

கோவை மதுக்கரையில் செயல்படும் ACC சிமெண்ட் ஆலையிலிருந்து வெளியேறும் சிமெண்ட் துகள்களால் காற்று மாசடைந்து சுவாசக் கோளாறு ஏ...

கோவையில் சாலையோர வியாபாரிகளுக்கான லோக் கல்யாண் மேலா சிறப்பு முகாம் செப்டம்பர் 7ல் தொடக்கம்

கோவை மாநகராட்சி பகுதிகளில் சாலையோர வியாபாரிகளுக்கு வங்கி கடன் வழங்கும் லோக் கல்யாண் மேலா முகாம் செப்டம்பர் 7 முதல் 25 வர...