அதிமுக-வின் மூன்று குழுவினரும் பாஜக-வை ஆதரிப்பதில் மக்களை பாதுகாக்க தவறிவிட்டனர்- சிபிஐஎம் ஜி.ராமகிருஷ்ணன்

அதிமுகவில் உள்ள மூன்று கோஷ்டிகளுக்கு இடையே பாஜக-வை ஆதரிப்பதில் நிலவும் போட்டியில், தமிழக மக்களின் நலனை பாதுகாக்க தவறிவிட்டனர் என மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில செயலாளர் ஜி.ராமகிருஷ்ணன் குற்றம்சாட்டியுள்ளார்.

கோவை, டவுன்ஹால் பகுதியில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில செயலாளர் ஜி.ராமகிருஷ்ணன் இன்று செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர் பேசியதாவது:-

கதிராமங்கலத்தில் விவசாயிகள் மற்றும் பொதுமக்கள் மீது காவல் துறையினர் நடத்திய காட்டுமிராண்டித்தனமான தாக்குதலுக்கு மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் சார்பில் கண்டனங்களை தெரிவித்துக்கொள்கிறேன். சம்மந்தப்பட்ட காவல்துறைனர் மீது மாநில அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும். 

ஜிஎஸ்டி-யினால் அனைத்துத் தரப்பு மக்களும் பாதிக்கப்பட்டுள்ளனர். ஜிஎஸ்டி கார்பரேட்களுக்கு சாதகமாக அவசர அவசரமாக கொண்டு வரப்பட்டதாகும். 

அதிமுகவில் உள்ள எடப்பாடி பழனிச்சாமி, ஓ.பன்னீர்செல்வம், தினகரன் ஆகிய மூன்று கோஷ்டிகளுக்கு இடையே பாஜகவை ஆதரிப்பதில் போட்டி நிலவி வருகிறது. இதில் தமிழக மக்களின் நலனை பாதுகாக்க அதிமுக ஆட்சி தவறிவிட்டது. 

பசு பாதுகாப்பு என்ற பெயரில் நாடு முழுவதும் நடக்கும் வன்முறை சம்பவங்களுக்கு பாஜக, ஆர்எஸ்எஸ் வெறுப்பு பிரச்சாரமே காரணம். சிபிஎம் கட்சியின் கோவை மாவட்ட அலுவலகம் மீது பெட்ரோல் குண்டு வீச்சு சம்பவத்தில் சங்பரிவார் அமைப்புகளே ஈடுபட்டுள்ளது. இச்சம்பவத்தில் ஈடுபட்ட குற்றவாளிகளை உடனடியாக கைது செய்ய வேண்டும். 

மேலும், பொய்யான கருத்துக்களை பரப்பி மத மோதல்களை உருவாக்க சங்பரிவார் அமைப்புகள் முயற்சித்து வருகிறது. தமிழக சட்டப்பேரவையில் சாதி ஆணவப்படுகொலைகளை தடுக்க தனிச்சட்டம் இயற்ற வேண்டும். லோக் ஆயுக்தா மசோதாவை இயற்ற வேண்டும். மத்திய அரசு தமிழகத்திற்கு கொடுக்க வேண்டிய 17 ஆயிரம் கோடி ரூபாயை பெற தமிழக அரசு அழுத்தம் தர வேண்டும்" இவ்வாறு மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில செயலாளர் ஜி.ராமகிருஷ்ணன் பேசினார்.

Newsletter

கோவை பீளமேடு வார்டு 27-ல் நியாய விலை கடை மற்றும் தூய்மை பணி ஆய்வு

சிங்காநல்லூர் தொகுதி வார்டு 27-ல் கவுன்சிலர் அம்பிகா தனபால் இன்று நியாய விலை கடை, சாலை சுத்தம் மற்றும் குப்பை அகற்றும் ப...

சுதந்திரப் போராட்ட வீரர்களை அறிவது அனைவரின் கடமை - அமைச்சர் சம்பத்குமார்

வ.உ.சிதம்பரனாரின் 155வது பிறந்தநாளையொட்டி கோவையில் அமைச்சர் சம்பத்குமார் மரியாதை செலுத்தினார். சுதந்திரப் போராட்ட வீரர்க...

கோவை மாநகராட்சி: கோவையில் தனியார் நிலங்களில் சீமைக் கருவேலம் மரங்களை அகற்ற 10 நாள் அவகாசம்

கோவை மாநகராட்சி எல்லைக்குள் உள்ள தனியார் நிலங்களில் சீமைக் கருவேல மரங்களை 10 நாட்களுக்குள் நில உரிமையாளர்கள் வேருடன் அகற...

கோவை மாநகராட்சி: தனியார் நிலங்களில் சீமைக் கருவேலம் கப் அகற்ற 10 நாள் அவகாசம்

கோவை மாநகராட்சி எல்லைக்குள் உள்ள தனியார் நிலங்களில் சீமைக் கருவேலமரங்களை 10 நாட்களுக்குள் நில உரிமையாளர்கள் வேருடன் அகற்...

மதுக்கரை ACC சிமெண்ட் ஆலைக்கு எதிராக பொதுமக்கள் ஆர்ப்பாட்டம்

கோவை மதுக்கரையில் செயல்படும் ACC சிமெண்ட் ஆலையிலிருந்து வெளியேறும் சிமெண்ட் துகள்களால் காற்று மாசடைந்து சுவாசக் கோளாறு ஏ...

கோவையில் சாலையோர வியாபாரிகளுக்கான லோக் கல்யாண் மேலா சிறப்பு முகாம் செப்டம்பர் 7ல் தொடக்கம்

கோவை மாநகராட்சி பகுதிகளில் சாலையோர வியாபாரிகளுக்கு வங்கி கடன் வழங்கும் லோக் கல்யாண் மேலா முகாம் செப்டம்பர் 7 முதல் 25 வர...