நீர் தேக்கத்தை ஆக்கிரமித்து கோவில் கட்டுவதை தடுக்கக் கோரி மாவட்ட ஆட்சியரிடம் தபெதிக-வினர் மனு

கோவை மாவட்டம், சரவணம்பட்டி அருகே உள்ள நீர்த்தேக்கக் குட்டையை ஆக்கிரமித்து சிலர் கோவில் கட்ட முயற்சிப்பதாக இன்று காலை கோவை மாவட்ட ஆட்சியரிடம் தந்தை பெரியார் திராவிடர் கழகத்தினர் புகார் மனு அளித்தனர்.

இது தொடர்பாக, அம்மனுவில் கூறியிருப்பதாவது:-

கோவை-சத்தி சாலையில் சரவணம்பட்டி அருகே அமைந்துள்ளது வண்ணன் குட்டை. இந்த குட்டை கடந்த 80 ஆண்டுகாலமாக அப்பகுதியின் முக்கிய நிலத்தடி நீராதாரமாக விளங்கி வருகிறது. சமீபகாலமாக கோவையில் குடிநீர் தட்டுப்பாடு நிலவி வரும் நிலையில், வண்ணன் குட்டையை ஆக்கிரமித்து சிலர் கோவில்கட்டும் முயற்சியில் ஈடுபட்டு வருகின்றனர்.



நீர் வழித்தடங்களை ஆக்கிரமித்து எந்தவொரு கட்டிடமும் கட்டக்கூடாது என்று உயர்நீதிமன்றம் தடையாணை பிறப்பித்துள்ளது. அவ்வழக்கு நிலுவையில் உள்ள நிலையில் சிலர் கோவில்கட்டும் பணியை நடத்தி வருவது கண்டிக்கத்தக்கது.

மாவட்ட ஆட்சியர் இப்பிரச்சனையில் தலையிட்டு தீர்வுகாண வேண்டும். தொடர்ந்து, இந்த பணிகள் நடைபெற்றால் தந்தை பெரியார் திராவிடர் கழகத்தின் சார்பில் பெரும் போராட்டம் நடத்தப்படும்.

இவ்வாறு அம்மனுவில் கூறப்பட்டுள்ளது.

Newsletter

தொண்டாமுத்தூர் அருகே வீட்டின் மீது மண்ணெண்ணெய் பாட்டில் வீச்சு; ரவுடி உட்பட 4 பேரை போலீசார் தேடி வருகின்றனர்.

கோவை தொண்டாமுத்தூரில் காதலிக்க மறுத்த இளம்பெண் வீட்டின் மீது மண்ணெண்ணெய் பாட்டில்கள் வீசி கொலை மிரட்டல் விடுத்த சம்பவத்த...

கோவை சிறுமி கொலை வழக்கு: ஈரநெஞ்சம் காப்பக முதியோர்கள் மெழுகுவர்த்தி ஏந்தி மௌன அஞ்சலி

கோவை சூலூர் அருகே 10 வயது சிறுமி பாலியல் வன்கொடுமைக்கு உள்ளாக்கப்பட்டு படுகொலை செய்யப்பட்ட சம்பவத்திற்கு நீதி கேட்டு ஈரந...

காய்ச்சலால் கோவை தனியார் மருத்துவமனையில் அமைச்சர் செங்கோட்டையன் அனுமதி

லேசான காய்ச்சல் காரணமாக தமிழக வருவாய்த்துறை அமைச்சர் செங்கோட்டையன் கோவையில் உள்ள KMCH தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப...

ஆனைமலை புலிகள் காப்பகம்: காண்டூர் கால்வாயில் சிக்கி ஆண் யானை உயிரிழப்பு

பொள்ளாச்சி வனக்கோட்டம் காண்டூர் கால்வாயில் 20 அடி ஆழத்தில் சிக்கிய ஆண் யானையை மீட்க முயற்சி மேற்கொள்ளப்பட்ட நிலையில், நீ...

வடகோவையில் ஓடும் ரயிலில் இருந்து விழுந்த பயணி உயிரிழப்பு

வடகோவை ரயில் நிலையம் அருகே கன்னியாகுமரி செல்லும் எக்ஸ்பிரஸ் ரயிலில் இருந்து தவறி விழுந்த பயணி, கோவை அரசு மருத்துவமனையில்...

கோவையில் UPSC முதற்கட்ட தேர்வு: 6,526 பேர் பங்கேற்பு

இந்தியாவின் மிக முக்கியமான போட்டித் தேர்வான UPSC முதற்கட்ட தேர்வு கோவையில் 15க்கும் மேற்பட்ட மையங்களில் நடைபெற்றது. IAS,...