புதிய டாஸ்மாக் கடை திறப்பதற்கு எதிர்ப்பு தெரிவித்து இரத்தினபுரி பகுதி பொதுமக்கள் மாவட்ட ஆட்சியரிடம் மனு

கோவை இரத்தினபுரி பகுதி 7ம் நெம்பர் பாலம் அருகே 1554-ம் எண் கொண்ட டாஸ்மாக் கடையும், புது பாலம் அருகே 1552 எண் கொண்ட இரண்டு மதுபான கடைகள் இயங்கி வரும் நிலையில் சுண்ணாம்பு கால்வாய் அருகில் மேலும் ஒரு டாஸ்மாக் கடை அமைக்க மாவட்ட நிர்வாகத்தால் பணிகள் நடைபெற்று வருகிறது. இதற்கு எதிர்ப்பு தெரிவித்து திமுக மாநில மகளிர் அணி பொதுச் செயலாளர் மீனா லோகு தலைமையில் அப்பகுதி மக்கள் மாவட்ட ஆட்சியரிடம் இன்று மனு அளித்தனர்.

இது குறித்து அவர்கள் கூறும்போது, இரத்தினபுரி பகுதி கொலை, கொள்ளை மற்றும் சமூக விரோத செயல்கள் நடைபெறும் பகுதியாக உள்ளது. மேலும் இப்பகுதியில் பள்ளி, கல்லூரி மற்றும் பணிக்கு செல்லும் பெண்கள் மதுபான கடையை அச்சத்துடன் தாண்டி செல்லும் நிலையே உள்ளது. தற்போது புதிதாக திறக்கப்படவுள்ள மதுபான கடை முன்னாள் மேயருக்கு சொந்தமானது.  ஏற்கனவே அப்பகுதியில் அமைந்துள்ள 2 மதுபான கடைகளை அகற்ற பொதுமக்கள் வலியுறுத்தி வரும் நிலையில் 3-வதாக மேலும் ஒரு கடை திறக்க மாவட்ட நிர்வாகம் அனுமதி அளிக்கக் கூடாது.

இவ்வாறு இரத்தினபுரி மக்கள் தெரிவித்னர்.

Newsletter

கோவை சிறுமி கொலை வழக்கு: ஈரநெஞ்சம் காப்பக முதியோர்கள் மெழுகுவர்த்தி ஏந்தி மௌன அஞ்சலி

கோவை சூலூர் அருகே 10 வயது சிறுமி பாலியல் வன்கொடுமைக்கு உள்ளாக்கப்பட்டு படுகொலை செய்யப்பட்ட சம்பவத்திற்கு நீதி கேட்டு ஈரந...

காய்ச்சலால் கோவை தனியார் மருத்துவமனையில் அமைச்சர் செங்கோட்டையன் அனுமதி

லேசான காய்ச்சல் காரணமாக தமிழக வருவாய்த்துறை அமைச்சர் செங்கோட்டையன் கோவையில் உள்ள KMCH தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப...

ஆனைமலை புலிகள் காப்பகம்: காண்டூர் கால்வாயில் சிக்கி ஆண் யானை உயிரிழப்பு

பொள்ளாச்சி வனக்கோட்டம் காண்டூர் கால்வாயில் 20 அடி ஆழத்தில் சிக்கிய ஆண் யானையை மீட்க முயற்சி மேற்கொள்ளப்பட்ட நிலையில், நீ...

வடகோவையில் ஓடும் ரயிலில் இருந்து விழுந்த பயணி உயிரிழப்பு

வடகோவை ரயில் நிலையம் அருகே கன்னியாகுமரி செல்லும் எக்ஸ்பிரஸ் ரயிலில் இருந்து தவறி விழுந்த பயணி, கோவை அரசு மருத்துவமனையில்...

கோவையில் UPSC முதற்கட்ட தேர்வு: 6,526 பேர் பங்கேற்பு

இந்தியாவின் மிக முக்கியமான போட்டித் தேர்வான UPSC முதற்கட்ட தேர்வு கோவையில் 15க்கும் மேற்பட்ட மையங்களில் நடைபெற்றது. IAS,...

பெருந்துறை ரயில் நிலையத்தில் பராமரிப்பு: கோவை ரயில்கள் பகுதியாக ரத்து

ஈரோடு - திருப்பூர் இடையே பெருந்துறை ரயில் நிலையத்தில் பராமரிப்புப் பணிகள் மேற்கொள்ளப்படுவதால், மே 24ஆம் தேதி திருச்சி -...