கோவையில் தொழில்நெறி வழிகாட்டி விழிப்புணர்வு பேரணியை மாவட்ட ஆட்சியர் துவக்கி வைத்தார்

கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாகத்தில் மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலகத்தின் மூலம் இன்று (ஜூலை 3) தொழில்நெறி வழிகாட்டி விழிப்புணர்வு பேரணியை மாவட்ட ஆட்சியர் ஹரிஹரன் கொடியசைத்து துவக்கிவைத்தார்.

இதனைத்தொடர்ந்து, மாவட்ட ஆட்சியர் தெரிவித்ததாவது:-

கோவை மாவட்டத்தில் தொழில்நெறி வழிகாட்டி விழிப்புணர்வு வாரத்தையொட்டி ஜூலை முதல் வாரத்தில் இதுபோன்ற விழிப்புணர்வு நிகழ்ச்சிகள் நடத்தப்பட்டு வருகிறது. இந்த பேரணியானது வேலைவாய்ப்பு குறித்த விழிப்புணர்வுகளை மாணவ, மாணவியர்கள் மற்றும் பொதுமக்களுக்கு சென்றடைந்திடும் வகையில் நடைபெற்று வருகிறது. பேரணியானது அரசினர் தொழிற்பயிற்சி நிலையத்தின் மாணவ மாணவியர்கள் சுமார் 200 பேர் கலந்துகொண்டனர். 

இப்பேரணியில் போட்டி தேர்வை எழுதுங்கள்!!! அரசுப்பணியில் சேருங்கள்!!! மற்றும் எஸ்சி, எஸ்டி பிரிவினருக்கான வழிகாட்டும் மையம் கோவை அலுவலகத்திற்கு வாருங்கள்!!! என்ற பல்வேறு விழிப்புணர்வு குறித்த விளம்பர பதாகைகளை மாணவ, மாணவியர்கள் கையில் ஏந்திய வண்ணம் மாவட்ட ஆட்சியர் வளாகத்திலிருந்து புறப்பட்டு மாநகர காவல் ஆணையர் அலுவலகம் வழியாக அரசு கலை கல்லூரியை சென்றடைந்தனர்.

தொழில்நெறி வழிகாட்டி விழிப்புணர்வு பேரணி மற்றும் கருத்தரங்கம் இன்று (ஜூலை 3) முதல் (ஜூலை 7) வரை தொடர்ந்து 5 நாட்கள் நடைபெறவுள்ளது. நாளை (ஜூலை 4) தொழில்நெறி வழிகாட்டு கண்காட்சி மற்றும் கருத்தரங்கம் ஸ்ரீ இராமகிருஷ்ணா மகளிர் கலை மற்றும் அறிவியல் கல்லூரியிலும், புதன் கிழமை (ஜூலை 5) டிஇஎல்சி ஜூனியர் பெர்ஜன்டல் பெண்கள் மேல்நிலைப்பள்ளி கிணத்துக்கடவிலும், வியாழன் கிழமை (ஜூலை 6) கொங்குநாடு கலை மற்றும் அறிவியல் கல்லூரியிலும், வெள்ளி கிழமை (ஜூலை 7) ஆர்விஎஸ் கலை மற்றும் அறிவியல் கல்லூரியிலும் நடைபெறவுள்ளது. இந்த கண்காட்சி மற்றும் கருத்தரங்குகளில் பங்குபெற்று பயனைய வேண்டும்.

மேலும், தொழில்நெறி வழிகாட்டி விழிப்புணர்வு குறித்த அரங்கு மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் அமைக்கப்பட்டுள்ளது. இவ்வரங்கில் இந்திய பிரதமரின் திறன் மிகு இந்தியா திட்டம், வேலைவாய்ப்பற்றோருக்கான உதவித்தொகை வழங்கும் திட்டம், தனியார் துறை வேலைவாய்ப்பு ஒவ்வொரு வாரம் வெள்ளிக்கிழமைகளிலும் நடைபெறுவது குறித்த விளக்கங்கள் வழங்கப்பட்டு வருகின்றது என மாவட்ட ஆட்சியர் ஹரிஹரன் தெரிவித்தார்.

இந்நிகழ்ச்சியில் மண்டல இணை இயக்குநர் (வேலைவாய்ப்பு) வெ.மீனாட்சி, துணை இயக்குநர் (வேலைவாய்ப்பு) ஒ.எஸ்.ஞானதேசிகன், கஸ்தூரி மற்றும் அரசு அலுவலர் உட்பட பலர் கலந்து கொண்டனர்.

Newsletter

கோவை சிறுமி கொலை வழக்கு: ஈரநெஞ்சம் காப்பக முதியோர்கள் மெழுகுவர்த்தி ஏந்தி மௌன அஞ்சலி

கோவை சூலூர் அருகே 10 வயது சிறுமி பாலியல் வன்கொடுமைக்கு உள்ளாக்கப்பட்டு படுகொலை செய்யப்பட்ட சம்பவத்திற்கு நீதி கேட்டு ஈரந...

காய்ச்சலால் கோவை தனியார் மருத்துவமனையில் அமைச்சர் செங்கோட்டையன் அனுமதி

லேசான காய்ச்சல் காரணமாக தமிழக வருவாய்த்துறை அமைச்சர் செங்கோட்டையன் கோவையில் உள்ள KMCH தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப...

ஆனைமலை புலிகள் காப்பகம்: காண்டூர் கால்வாயில் சிக்கி ஆண் யானை உயிரிழப்பு

பொள்ளாச்சி வனக்கோட்டம் காண்டூர் கால்வாயில் 20 அடி ஆழத்தில் சிக்கிய ஆண் யானையை மீட்க முயற்சி மேற்கொள்ளப்பட்ட நிலையில், நீ...

வடகோவையில் ஓடும் ரயிலில் இருந்து விழுந்த பயணி உயிரிழப்பு

வடகோவை ரயில் நிலையம் அருகே கன்னியாகுமரி செல்லும் எக்ஸ்பிரஸ் ரயிலில் இருந்து தவறி விழுந்த பயணி, கோவை அரசு மருத்துவமனையில்...

கோவையில் UPSC முதற்கட்ட தேர்வு: 6,526 பேர் பங்கேற்பு

இந்தியாவின் மிக முக்கியமான போட்டித் தேர்வான UPSC முதற்கட்ட தேர்வு கோவையில் 15க்கும் மேற்பட்ட மையங்களில் நடைபெற்றது. IAS,...

பெருந்துறை ரயில் நிலையத்தில் பராமரிப்பு: கோவை ரயில்கள் பகுதியாக ரத்து

ஈரோடு - திருப்பூர் இடையே பெருந்துறை ரயில் நிலையத்தில் பராமரிப்புப் பணிகள் மேற்கொள்ளப்படுவதால், மே 24ஆம் தேதி திருச்சி -...