இயற்கை விவசாயத்தின் நுழைவாயில் - ஈஷா விவசாய இயக்கம் சார்பாக இயற்கை இடுபொருட்கள் தயாரிப்பு பயிற்சி

ஈஷா விவசாய இயக்கம் சார்பாக மேற்கு மண்டல இயற்கை விவசாய தன்னார்வத் தொண்டர்களுக்கான "இயற்கை விவசாயத்தின் நுழைவாயில்" என்ற இயற்கை இடுபொருட்கள் தயாரிப்பு பயிற்சி, கோவை மாவட்டம் சூலூர் வட்டம் செங்கத்துறையில் உள்ள ஜிஜே அங்கக வேளாண்பண்ணையில் நடைபெற்றது.



இப்பயிற்சி ஈஷா பசுமை கரங்கள் திட்டதின் இயற்கை விவசாய நிபுணர்களால் பயிற்று விக்கப்பட்டது. இதில் சிறப்பு விருந்தினர்களாக எழுத்தாளர் தூரன்நம்பி, மண்ணியல் நிபுணர் சரவணன் ஆகியோர் பங்கேற்றனர். இயற்கை விவசாயத்தை தமிழகம் முழுவதும் கொண்டு செல்லும் நோக்கத்தில், இரசாயன உரங்களுக்கு மாற்றாக இயற்கை இடுபொருட்கள் செய்யும் வழிமுறைகள், பயன்படுத்தும் வழிகள், சேமிக்கும் முறைகள், அவற்றின் பலன்கள் போன்றவை பயிற்றுவிக்கப்பட்டது. 

இரசாயன விவசாயத்திற்கு மாற்றுதேடும் முயற்சியில் இருக்கும் விவசாயிகளுக்கு இப்பயிற்சி மிகவும் உகந்ததாக இருந்தது. இதில் 40-க்கும் மேற்பட்ட விவசாயிகள் கலந்துகொண்டு பயனடைந்தனர்.



பயிற்சியில் கலந்துகொண்ட விவசாயிகளுக்கு ஜீவாமிர்தம், பீஜாமிர்தம், கனஜீவாமிர்தம், பத்துஇலை கஷாயம், அக்னிஅஸ்திரம், நீம்அஸ்திரம், புளித்தமோர்கரைசல், மூங்கில் இஎம், பழ இஎம், மீன்அமிலம், வேப்பங்கொட்டை கரைசல், மூலிகை பூச்சி விரட்டி, திராட்சைரசம், தேமோர் கரைசல் போன்ற 12 வகையான இடுபொருட்கள் செய்வதற்கு நேரடி செய்முறை பயிற்சியும் களப்பயிற்சியும் அளிக்கப்பட்டது. இந்த இடுபொருட்களில் அடிஉரம், மேலுரம், வளர்ச்சியூக்கி, செயலூக்கி, பூச்சி விரட்டி போன்றவையும் அடங்கும்.

இதுவரை கிழக்கு, வடக்கு, தெற்கு மற்றும் மத்திய மண்டலங்களில் இந்த பயிற்சி நடைபெற்றுள்ளது. ஒவ்வொரு பயிற்சியிலும் 40-க்கும் மேற்பட்ட விவசாயிகள் பங்கேற்றுள்ளனர்.

இப்பயிற்சியை பெற்ற விவசாயிகள் அவரவர் பகுதியில் உள்ள விவசாயிகளுக்கு இந்த பயிற்சியை அளிக்கும் தன்னார்வத் தொண்டராக செயல்படுவர். இதனால் இயற்கை விவசாயம் வேகமாக வளர்வதோடு விவசாயிகள் பொருளாதார நன்மைகளையும் பெறுவர். இரசாயன விவசாயத்திற்கு மாற்றுதேடும் முயற்சியில் இருக்கும் விவசாயிகளுக்கு இதுஒரு வரப்பிரசாதமாக அமையும்.

இயற்கை இடுபொருள்களை பண்ணையில் உள்ள பொருட்களை வைத்தே விவசாயிகள் தாங்களாகவே தயாரித்துக்கொள்ள முடியும், அதனால் இடுபொருள் செலவு இல்லாமல் நிகர வருமானம் நிச்சயம் அதிகரிக்கும் இதனால் விவசாயி சுயசார்போடு வாழ்வதற்கு வழிவகுக்கும்.

இயற்கை இடுபொருட்களை பயன்படுத்துவதால் மண்வளம் தொடர்ந்து அதிகரிக்கும். மேலும் நீர்மாசுபடுதல் தடுக்கப்பட்டு சுற்றுச்சூழல் மாசடைதலும் தடுக்கப்படும், நஞ்சில்லாத உணவுப்பொருட்கள் மக்களுக்கு கிடைக்கும். நாடு நலமாகும் என்று ஈஷா பசுமை கரங்கள் திட்ட ஒருங்கிணைப்பாளர் கூறினார்.

Newsletter

கோவை சிறுமி கொலை வழக்கு: ஈரநெஞ்சம் காப்பக முதியோர்கள் மெழுகுவர்த்தி ஏந்தி மௌன அஞ்சலி

கோவை சூலூர் அருகே 10 வயது சிறுமி பாலியல் வன்கொடுமைக்கு உள்ளாக்கப்பட்டு படுகொலை செய்யப்பட்ட சம்பவத்திற்கு நீதி கேட்டு ஈரந...

காய்ச்சலால் கோவை தனியார் மருத்துவமனையில் அமைச்சர் செங்கோட்டையன் அனுமதி

லேசான காய்ச்சல் காரணமாக தமிழக வருவாய்த்துறை அமைச்சர் செங்கோட்டையன் கோவையில் உள்ள KMCH தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப...

ஆனைமலை புலிகள் காப்பகம்: காண்டூர் கால்வாயில் சிக்கி ஆண் யானை உயிரிழப்பு

பொள்ளாச்சி வனக்கோட்டம் காண்டூர் கால்வாயில் 20 அடி ஆழத்தில் சிக்கிய ஆண் யானையை மீட்க முயற்சி மேற்கொள்ளப்பட்ட நிலையில், நீ...

வடகோவையில் ஓடும் ரயிலில் இருந்து விழுந்த பயணி உயிரிழப்பு

வடகோவை ரயில் நிலையம் அருகே கன்னியாகுமரி செல்லும் எக்ஸ்பிரஸ் ரயிலில் இருந்து தவறி விழுந்த பயணி, கோவை அரசு மருத்துவமனையில்...

கோவையில் UPSC முதற்கட்ட தேர்வு: 6,526 பேர் பங்கேற்பு

இந்தியாவின் மிக முக்கியமான போட்டித் தேர்வான UPSC முதற்கட்ட தேர்வு கோவையில் 15க்கும் மேற்பட்ட மையங்களில் நடைபெற்றது. IAS,...

பெருந்துறை ரயில் நிலையத்தில் பராமரிப்பு: கோவை ரயில்கள் பகுதியாக ரத்து

ஈரோடு - திருப்பூர் இடையே பெருந்துறை ரயில் நிலையத்தில் பராமரிப்புப் பணிகள் மேற்கொள்ளப்படுவதால், மே 24ஆம் தேதி திருச்சி -...