நோட்டிஸ் இன்றி கட்டிடத்தை அகற்ற வந்ததாக அதிகாரிகளிடம் வாக்குவாதம் செய்த திருச்சபையினர்


கோவை சித்ரா பகுதியில் தென்னிந்திய திருச்சபை நடத்தும் பெண்கள் மேம்பாட்டு வாழ்வியல் கல்லூரி செயல்பட்டு வருகிறது. கடந்த 1992-ம் ஆண்டு முதல் செயல்பட்டு வரும் இந்த கல்லூரி அமைந்துள்ள இடம் தொழில் வணிகத்துறைக்கு சொந்தமானது.



இந்த நிலையில், சாலை மேம்பாட்டுக்காக இந்த கட்டிடத்தை அகற்ற வேண்டும் என்று கூறி நெடுஞ்சாலைத் துறை அதிகாரிகள், தொழில் வணிகத்துறையினர் மற்றும் போலீசார் திரண்டனர். அப்போது, முறையான நோட்டீஸ் வழங்காமல் கட்டிடத்தை இடிக்க அனுமதிக்க மாட்டோம் எனக்கூறி திருச்சபையை சேர்ந்த 30-க்கும் மேற்பட்டோர் அதிகாரிகளுடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். இதை தொடர்ந்து, 2 நாட்கள் அவகாசம் தருவதாக அதிகாரிகள் கூறிச்சென்றனர்.



இதனிடையே, கட்டிடத்தை நெடுஞ்சாலைத்துறை கையகப்படுத்தும் நேரத்தில் எங்களுக்கு முழுமையான இழப்பீடு வழங்கப்பட வேண்டும் என்று திருச்சபையினர் கோரிக்கை விடுத்தனர்.



இது குறித்து நெடுஞ்சாலைத்துறை அதிகாரி ஒருவர் கூறுகையில், 'திருச்சபையினர் இந்த இடத்தில் தொழில் நிறுவனம் தொடங்குவதாக அரசிடமிருந்து நிலத்தை பெற்றுள்ளனர். ஆனால், தொழில் நிறுவனம் நடத்தாமல் பூட்டி இருந்ததால் தொழில் வணிகத்துறையினர் அந்த இடத்தை கேட்டு நோட்டீஸ் கொடுத்துள்ளனர். அதன் பேரில் தான் இன்று நெடுஞ்சாலைத்துறையினர் அந்த இடத்தை கையகப்படுத்த சென்றோம். குறிப்பிட்ட இடத்தில் ரவுண்டான அமைக்க அரசு ரூ.50 லட்சம் நிதி ஒதுக்கியுள்ளது' என்றார்.

Newsletter

கோவை பீளமேடு வார்டு 27-ல் நியாய விலை கடை மற்றும் தூய்மை பணி ஆய்வு

சிங்காநல்லூர் தொகுதி வார்டு 27-ல் கவுன்சிலர் அம்பிகா தனபால் இன்று நியாய விலை கடை, சாலை சுத்தம் மற்றும் குப்பை அகற்றும் ப...

சுதந்திரப் போராட்ட வீரர்களை அறிவது அனைவரின் கடமை - அமைச்சர் சம்பத்குமார்

வ.உ.சிதம்பரனாரின் 155வது பிறந்தநாளையொட்டி கோவையில் அமைச்சர் சம்பத்குமார் மரியாதை செலுத்தினார். சுதந்திரப் போராட்ட வீரர்க...

கோவை மாநகராட்சி: கோவையில் தனியார் நிலங்களில் சீமைக் கருவேலம் மரங்களை அகற்ற 10 நாள் அவகாசம்

கோவை மாநகராட்சி எல்லைக்குள் உள்ள தனியார் நிலங்களில் சீமைக் கருவேல மரங்களை 10 நாட்களுக்குள் நில உரிமையாளர்கள் வேருடன் அகற...

கோவை மாநகராட்சி: தனியார் நிலங்களில் சீமைக் கருவேலம் கப் அகற்ற 10 நாள் அவகாசம்

கோவை மாநகராட்சி எல்லைக்குள் உள்ள தனியார் நிலங்களில் சீமைக் கருவேலமரங்களை 10 நாட்களுக்குள் நில உரிமையாளர்கள் வேருடன் அகற்...

மதுக்கரை ACC சிமெண்ட் ஆலைக்கு எதிராக பொதுமக்கள் ஆர்ப்பாட்டம்

கோவை மதுக்கரையில் செயல்படும் ACC சிமெண்ட் ஆலையிலிருந்து வெளியேறும் சிமெண்ட் துகள்களால் காற்று மாசடைந்து சுவாசக் கோளாறு ஏ...

கோவையில் சாலையோர வியாபாரிகளுக்கான லோக் கல்யாண் மேலா சிறப்பு முகாம் செப்டம்பர் 7ல் தொடக்கம்

கோவை மாநகராட்சி பகுதிகளில் சாலையோர வியாபாரிகளுக்கு வங்கி கடன் வழங்கும் லோக் கல்யாண் மேலா முகாம் செப்டம்பர் 7 முதல் 25 வர...