பிற்படுத்தப்பட்டோர், மிகவும் பிற்படுத்தப்பட்டோர் பொருளாதார மேம்பாட்டுக் கடன் பெற விண்ணப்பங்கள் வரவேற்பு

கோவை மாவட்டத்தில் பிற்படுத்தப்பட்டோர், மிகவும் பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சீர்மரபினர் பொருளாதார மேம்பாட்டுக் கடன் பெற விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.

பிற்படுத்தப்பட்டோர், மிகவும் பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சீர்மரபினர் பொருளாதாரத்தில் மேம்பாடு அடையும் வகையில் சிறுவணிக கடன், மகளிர் தனிநபர் கடன், மகளிர் சுய உதவிக் குழு கடன், கறவை மாடுகள் கடன், சிறுவிவசாயக் கடன், மரபுசார் கலைஞர்கள் மற்றும் கைவினைஞர்களுக்கு சுய தொழில் கடன், தொழிற்கல்வி மற்றும் தொழில்நுட்ப கல்வி பயின்ற இளம் பட்டதாரிகளுக்கான சுய வேலை வாய்ப்பு கடன், விவசாய தொழில் கடன் உள்ளிட்ட பல்வேறு கடன் உதவித் திட்டங்களை பிற்படுத்தப்பட்டோர் பொருளாதார மேம்பாட்டுக் கழகம் செயல்படுத்தி வருகிறது.

கடனுதவி பெறுவதற்கு விண்ணப்பதாரரின் குடும்ப ஆண்டு வருமானம் கிராமப்புறத்தினருக்கு ரூ.98 ஆயிரமும், நகர்புறத்தினருக்கு ரூ.1.20 லட்சத்திற்கு மிகாமல் இருக்க வேண்டும்.

விண்ணப்பதாரர் 18 வயது பூர்த்தி அடைந்தவராகவும் 60 வயதிற்கு மேற்படாதவராகவும் இருக்க வேண்டும். ஒரு குடும்பத்தில் ஒருவருக்கு மட்டுமே கடனுதவி வழங்கப்படும். மேலும், துவங்கி ஆறு மாதங்கள் பூர்த்தியாகியிருக்கும் சுய உதவிக் குழுவினர் கடன்பெற திட்ட அலுவலரால் (மகளிர் திட்டம்) கிரேடிங் செய்யப்பட்டிருக்க வேண்டும்.

பிற்படுத்தப்பட்டோர், மிகவும் பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சீர்மரபினர் இனத்தைச் சேர்ந்த சிறு, குறு விவசாயிகளுக்கு மட்டும் புதிய ஆழ்துளைக் கிணறு அமைத்து மின் மோட்டார் வசதி ஏற்படுத்துவதற்கு மானியத்துடன் கூடிய கடன் திட்டம் செயல்படுத்தப்படுகிறது.

இக்கடனுதவி திட்டங்களைப் பயன்படுத்திக் கொள்ள மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் உள்ள மாவட்ட பிற்படுத்தப்பட்டோர் நல அலுவலகம், அனைத்து மாவட்ட கூட்டுறவு சங்கங்களின் மண்டல இணைப்பதிவாளர் அலுவலகம், அனைத்து மாவட்ட மத்திய கூட்டுறவு வங்கிகள், நகர கூட்டுறவு வங்கிகள் மற்றும் தொடக்க வேளாண்மை கூட்டுறவு சங்கங்களின் தொடர்பு கொண்டு பயன்பெறலாம்.

Newsletter

கோவை பீளமேடு வார்டு 27-ல் நியாய விலை கடை மற்றும் தூய்மை பணி ஆய்வு

சிங்காநல்லூர் தொகுதி வார்டு 27-ல் கவுன்சிலர் அம்பிகா தனபால் இன்று நியாய விலை கடை, சாலை சுத்தம் மற்றும் குப்பை அகற்றும் ப...

சுதந்திரப் போராட்ட வீரர்களை அறிவது அனைவரின் கடமை - அமைச்சர் சம்பத்குமார்

வ.உ.சிதம்பரனாரின் 155வது பிறந்தநாளையொட்டி கோவையில் அமைச்சர் சம்பத்குமார் மரியாதை செலுத்தினார். சுதந்திரப் போராட்ட வீரர்க...

கோவை மாநகராட்சி: கோவையில் தனியார் நிலங்களில் சீமைக் கருவேலம் மரங்களை அகற்ற 10 நாள் அவகாசம்

கோவை மாநகராட்சி எல்லைக்குள் உள்ள தனியார் நிலங்களில் சீமைக் கருவேல மரங்களை 10 நாட்களுக்குள் நில உரிமையாளர்கள் வேருடன் அகற...

கோவை மாநகராட்சி: தனியார் நிலங்களில் சீமைக் கருவேலம் கப் அகற்ற 10 நாள் அவகாசம்

கோவை மாநகராட்சி எல்லைக்குள் உள்ள தனியார் நிலங்களில் சீமைக் கருவேலமரங்களை 10 நாட்களுக்குள் நில உரிமையாளர்கள் வேருடன் அகற்...

மதுக்கரை ACC சிமெண்ட் ஆலைக்கு எதிராக பொதுமக்கள் ஆர்ப்பாட்டம்

கோவை மதுக்கரையில் செயல்படும் ACC சிமெண்ட் ஆலையிலிருந்து வெளியேறும் சிமெண்ட் துகள்களால் காற்று மாசடைந்து சுவாசக் கோளாறு ஏ...

கோவையில் சாலையோர வியாபாரிகளுக்கான லோக் கல்யாண் மேலா சிறப்பு முகாம் செப்டம்பர் 7ல் தொடக்கம்

கோவை மாநகராட்சி பகுதிகளில் சாலையோர வியாபாரிகளுக்கு வங்கி கடன் வழங்கும் லோக் கல்யாண் மேலா முகாம் செப்டம்பர் 7 முதல் 25 வர...