திருப்பூரில் கன்டெய்னரில் பிடிப்பட்ட 570 கோடி ரூபாய் வங்கிப் பணம்- சென்னை உயர்நீதிமன்றத்தில் சிபிஐ அறிக்கை

திருப்பூரில் கடந்த 2016 ஆம் ஆண்டு கன்டெய்னரில் பிடிப்பட்ட 570 கோடி ரூபாய் வங்கிப் பணம் என்று சென்னை உயர்நீதிமன்றத்தில் சிபிஐ இன்று அறிக்கை தாக்கல் செய்துள்ளது.



கடந்த 2016 ஆம் ஆண்டு தமிழக சட்டசபை தேர்தலுக்கு முன் திருப்பூர் அருகே மூன்று கன்டெய்னர் லாரிகளில் முறையான ஆவணங்களின்றி கொண்டு செல்லப்பட்ட 570 கோடி ரூபாய் பணத்தை தேர்தல் பறக்கும் படையினர் பறிமுதல் செய்தனர். அந்த பணம் கோவை ஸ்டேட் பாங்க் ரோட்டில் உள்ள எஸ்பிஐ வங்கி கிளையில் இருந்து ஆந்திரா மாநிலம், விசாகப்பட்டினம், ஸ்ரீபுரம் எஸ்பிஐ கிளைக்கு கொண்டு செல்வதாக அப்போது வங்கி அதிகாரிகள் உரிமை கோரினர். மேலும், அது குறித்தான ஆவணங்களையும் வருமானவரித்துறை அதிகாரிகளிடம் சமர்ப்பித்தனர். 

வருமான வரித்துறை உத்தரவை தொடர்ந்து, அந்த பணம் கோவை, ஸ்டேட் பாங்க் ஆப் இந்தியா கிளையில் பாதுகாப்பாக வைக்கப்பட்டிருந்தது. ஆனால், இந்த பண பரிவர்த்தனைகள் ஏதும் தங்களுக்கு தெரியாது என ரிசர்வ் வங்கி அறிவிப்பு வெளியிட்டது.



இதனால், பிடிபட்ட பணம் வங்கிக்கு சொந்தமானது அல்ல, தேர்தல் பணிக்கு அரசியல் கட்சியினரால் கடத்தி செல்லப்பட்டது என்ற புகார்களும் எழுந்தன. இது தொடர்பாக, திமுக தாக்கல் செய்த மனுவை விசாரித்த சென்னை உயர்நீதி மன்றம், 570 கோடி ரூபாய் பிடிபட்ட விவகாரத்தை சிபிஐ விசாரிக்க உத்தரவிட்டது.

இதையடுத்து, ஆரம்ப கட்ட விசாரணை நடத்திய சிபிஐ அதிகாரிகள், பணம் கொண்டு சென்று சிக்கிய லாரிகளின் பதிவு எண்கள் போலியானவை என ஐகோர்ட்டில் அறிக்கை சமர்ப்பித்தது. மேலும், முதல் தகவல் அறிக்கையை பதிவு செய்த சிபிஐ அடுத்த கட்ட விசாரணையை துவக்கியது.

அதனைத்தொடர்ந்து தற்போது, திருப்பூரில் கடந்த 2016 ஆம் ஆண்டு கன்டெய்னரில் பிடிப்பட்ட 570 கோடி ரூபாய் வங்கிப் பணம் தான் என்று சென்னை உயர்நீதிமன்றத்தில் சிபிஐ இன்று அறிக்கை தாக்கல் செய்துள்ளது.

Newsletter

கோவை சிறுமி கொலை வழக்கு: ஈரநெஞ்சம் காப்பக முதியோர்கள் மெழுகுவர்த்தி ஏந்தி மௌன அஞ்சலி

கோவை சூலூர் அருகே 10 வயது சிறுமி பாலியல் வன்கொடுமைக்கு உள்ளாக்கப்பட்டு படுகொலை செய்யப்பட்ட சம்பவத்திற்கு நீதி கேட்டு ஈரந...

காய்ச்சலால் கோவை தனியார் மருத்துவமனையில் அமைச்சர் செங்கோட்டையன் அனுமதி

லேசான காய்ச்சல் காரணமாக தமிழக வருவாய்த்துறை அமைச்சர் செங்கோட்டையன் கோவையில் உள்ள KMCH தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப...

ஆனைமலை புலிகள் காப்பகம்: காண்டூர் கால்வாயில் சிக்கி ஆண் யானை உயிரிழப்பு

பொள்ளாச்சி வனக்கோட்டம் காண்டூர் கால்வாயில் 20 அடி ஆழத்தில் சிக்கிய ஆண் யானையை மீட்க முயற்சி மேற்கொள்ளப்பட்ட நிலையில், நீ...

வடகோவையில் ஓடும் ரயிலில் இருந்து விழுந்த பயணி உயிரிழப்பு

வடகோவை ரயில் நிலையம் அருகே கன்னியாகுமரி செல்லும் எக்ஸ்பிரஸ் ரயிலில் இருந்து தவறி விழுந்த பயணி, கோவை அரசு மருத்துவமனையில்...

கோவையில் UPSC முதற்கட்ட தேர்வு: 6,526 பேர் பங்கேற்பு

இந்தியாவின் மிக முக்கியமான போட்டித் தேர்வான UPSC முதற்கட்ட தேர்வு கோவையில் 15க்கும் மேற்பட்ட மையங்களில் நடைபெற்றது. IAS,...

பெருந்துறை ரயில் நிலையத்தில் பராமரிப்பு: கோவை ரயில்கள் பகுதியாக ரத்து

ஈரோடு - திருப்பூர் இடையே பெருந்துறை ரயில் நிலையத்தில் பராமரிப்புப் பணிகள் மேற்கொள்ளப்படுவதால், மே 24ஆம் தேதி திருச்சி -...