ஜிஎஸ்டி வரியால் தேயிலை தோட்ட தொழிலாளர்கள் பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளனர்- நீலகிரியில் தமாகா தலைவர் பேட்டி


நீலகிரி மாவட்டம் குன்னூரில் தமிழ் மாநில காங்கிரஸ் கட்சியின் சார்பில் கட்சி கொடியேற்று விழா நடைபெற்றது. குன்னூர்  நகர தலைவர் ஆனந்தகுமார் தலைமையில் நடைபெற்ற இவ்விழாவில் அக்கட்சியின் தலைவர் ஜி.கே.வாசன் பங்கேற்று கொடியேற்றி வைத்தார். 

இதனைத்தொடர்ந்து, செய்தியாளர்கள் சந்திப்பில் தமிழ் மாநில காங்கிரஸ் தலைவர் ஜி.கே.வாசன் கூறியதாவது:-

முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதா இறந்த பிறகு அதிமுக வட்டாரத்தில் கொலை மற்றும் கொள்ளைகள் அதிகரித்து வருகிறது. மர்மமான முறையிலும் தற்கொலைகள் நடைபெறுவதால் இதனை சிபிஜ விசாரணை மேற்கொள்ள வேண்டும். மேலும் ஜிஎஸ்டி வரியினால் தேயிலை தோட்ட தொழிலாளர்கள் மற்றும் பட்டாசு, ஜவுளி, ஓட்டல் தொழிலாளர்கள் பாதிக்கப்பட்டுள்ளனர். இது குறித்து அனைத்து மக்களிடையே கருத்து கேட்க வேண்டும்' என தெரிவித்தார்.

இதில் குன்னூர் நகர தலைவர் ஆனந்த குமார், மாநில துணைத் தலைவர் கோவை தங்கம், மாநில பொதுச் செயலாளர் விடியல் சேகர், மாநில இளைஞரணித் தலைவர் யுவராஜ் உட்பட பலர் கலந்து கொண்டனர்.

Newsletter

கோவை பீளமேடு வார்டு 27-ல் நியாய விலை கடை மற்றும் தூய்மை பணி ஆய்வு

சிங்காநல்லூர் தொகுதி வார்டு 27-ல் கவுன்சிலர் அம்பிகா தனபால் இன்று நியாய விலை கடை, சாலை சுத்தம் மற்றும் குப்பை அகற்றும் ப...

சுதந்திரப் போராட்ட வீரர்களை அறிவது அனைவரின் கடமை - அமைச்சர் சம்பத்குமார்

வ.உ.சிதம்பரனாரின் 155வது பிறந்தநாளையொட்டி கோவையில் அமைச்சர் சம்பத்குமார் மரியாதை செலுத்தினார். சுதந்திரப் போராட்ட வீரர்க...

கோவை மாநகராட்சி: கோவையில் தனியார் நிலங்களில் சீமைக் கருவேலம் மரங்களை அகற்ற 10 நாள் அவகாசம்

கோவை மாநகராட்சி எல்லைக்குள் உள்ள தனியார் நிலங்களில் சீமைக் கருவேல மரங்களை 10 நாட்களுக்குள் நில உரிமையாளர்கள் வேருடன் அகற...

கோவை மாநகராட்சி: தனியார் நிலங்களில் சீமைக் கருவேலம் கப் அகற்ற 10 நாள் அவகாசம்

கோவை மாநகராட்சி எல்லைக்குள் உள்ள தனியார் நிலங்களில் சீமைக் கருவேலமரங்களை 10 நாட்களுக்குள் நில உரிமையாளர்கள் வேருடன் அகற்...

மதுக்கரை ACC சிமெண்ட் ஆலைக்கு எதிராக பொதுமக்கள் ஆர்ப்பாட்டம்

கோவை மதுக்கரையில் செயல்படும் ACC சிமெண்ட் ஆலையிலிருந்து வெளியேறும் சிமெண்ட் துகள்களால் காற்று மாசடைந்து சுவாசக் கோளாறு ஏ...

கோவையில் சாலையோர வியாபாரிகளுக்கான லோக் கல்யாண் மேலா சிறப்பு முகாம் செப்டம்பர் 7ல் தொடக்கம்

கோவை மாநகராட்சி பகுதிகளில் சாலையோர வியாபாரிகளுக்கு வங்கி கடன் வழங்கும் லோக் கல்யாண் மேலா முகாம் செப்டம்பர் 7 முதல் 25 வர...