கோவையில் சிறந்த மாநகராட்சி பள்ளி மாணவர்களை தேர்ந்தெடுக்கும் 'பாலஜனக்ராஹா' திட்டம்

அறம் பவுண்டேஷன் மற்றும் கோவை மாநகராட்சி இணைத்து பாலஜனக்ராஹா திட்டத்தை கோவையில் இரண்டாம் ஆண்டாக நடத்தி வருகிறது. பெங்களூரை தலைமையிடமாகக் கொண்டு செயல்பட்டு வரும் தன்னார்வ நிறுவனமான 'பாலஜனக்ராஹா' இந்தியாவில் உள்ள பல்வேறு அரசு பள்ளியில் பயிலும் மாணவர்களை ஊக்குப்படுத்தி வருகிறது. தமிழ்நாட்டில் சென்னை மற்றும் கோவையில் சமூக ஆர்வலர்கள் மூலமாக இத்திட்டம் சிறப்பாக செயல்பட்டு வருகிறது. 

இத்திட்டம் குறித்து அறம் பவுண்டேஷன் சேரிட்டபிள் டிரஸ்ட் நிறுவன அறங்காவலர் லதா சுந்தரம் கூறுகையில்; இரண்டாம் ஆண்டாக கோவையில் இத்திட்டம் பள்ளி மாணவர்களுக்கு வெற்றிகரமாக செயல்படுத்தி வருகிறோம். ஆண்டுதோறும் கோவை மாநகராட்சி சார்பில் செயல்பட்டு வரும் 6 மாநகராட்சி பள்ளிகளை தேர்ந்தெடுத்து மாநகராட்சி பள்ளியில் 8ம் வகுப்பு படிக்கும் மாணவர்களுக்கு குடிமையியல் பாடம் குறித்து சிறப்பு பயிற்சி வழங்கப்படுகிறது.



இந்த பாடத்திட்டத்தின் மூலம் பள்ளி மாணவர்கள் சமுதாயத்தில் நடைமுறையில் நடக்கும் செயல்களை எதிர்கொள்கின்றனர். இந்த சிறப்பு பயிற்சி வகுப்பில் மாணவர்கள் வருங்காலத்தில் தெரிந்து கொள்ள வேண்டிய விசயங்களைப் பற்றி புரிந்து நடந்து கொள்ளவும் உதவுகிறது. வீடு, பொருளாதாரம், நகரம், மனித வளம், அடிப்படை தேவைகள் உரிமைகள் போன்றவற்றை தெரிந்து கொள்ளவும், அரசுத்துறை அதிகாரிகளை எவ்வாறு அணுகுவது, பேரிடர் காலங்களில் உதவுவது உள்ளிட்ட சமுதாயப் பணிகள் செய்தல் போன்றவை குறித்து மாணவர்களுக்கு பயிற்சி வழங்கப்படுகிறது. இந்த பயிற்சியின் மூலம் மாணவர்கள் நகரத்தில் உள்ள குறை, நிறைகளை அறிந்து அதன் திட்ட அறிக்கையை மாநகராட்சி ஆணையரிடம் வழங்குவர். இதன் மூலம் அவர்களுக்கு மதிப்பீடு வழங்கப்படும்.

இந்த பயிற்சியினை வழங்கிட, பெங்களூரில் இருந்து சிறப்பு பயிற்சியாளர்களான சோபனா, சரத்குமார் மற்றும் ஆனந்த் போன்ற சிறந்த ஆசிரியர்கள் மூலம் பள்ளி மாணவர்களுக்கு பயிற்சி வழங்கப்படுகிறது. இரண்டு மணி நேர பயிற்சி வகுப்பில் வாரத்திற்கு இருமுறை என மூன்று மாதம் வரை மாணவர்களுக்கு பயிற்சி வழங்கப்படுகிறது.



சென்ற வருடம் நடைபெற்ற பயிற்சி வகுப்பில் புலியகுளம் மாநகராட்சி பள்ளி மாணவர்கள் நகரங்களில் நடக்கும் பல்வேறு செயல்பாடுகளை குறித்த திட்ட அறிக்கையை தயார்படுத்தி மாநகராட்சி ஆணையரிடம் வழங்கினார். இதன் மூலம் தேர்ந்தெடுக்கப்பட்ட சிறந்த மாணவர்கள் குழுவை பெங்களூரில் உள்ள தன்னார்வ நிறுவனமான பாலஜனக்ராஹாவில் அழைத்து மாணவர்களுக்கு பாராட்டு மற்றும் சான்றிதழ்கள் வழங்கப்படுகிறது.

இந்த ஆண்டில் கோவை மாநகராட்சி பள்ளிகளான கே.கே புதூர், ராமசாமி நகர், செல்வபுரம் ஆண்கள் உயர்நிலைப்பள்ளி, செல்வபுரம் பெண்கள் உயர்நிலைப்பள்ளி மற்றும் அம்மனியம்மாள் மாநகராட்சி பள்ளிகளில் மாணவர்களுக்கு பயிற்சிகள் வழங்கப்பட்டு வருகிறது என்றார்.

Newsletter

தொண்டாமுத்தூர் அருகே வீட்டின் மீது மண்ணெண்ணெய் பாட்டில் வீச்சு; ரவுடி உட்பட 4 பேரை போலீசார் தேடி வருகின்றனர்.

கோவை தொண்டாமுத்தூரில் காதலிக்க மறுத்த இளம்பெண் வீட்டின் மீது மண்ணெண்ணெய் பாட்டில்கள் வீசி கொலை மிரட்டல் விடுத்த சம்பவத்த...

கோவை சிறுமி கொலை வழக்கு: ஈரநெஞ்சம் காப்பக முதியோர்கள் மெழுகுவர்த்தி ஏந்தி மௌன அஞ்சலி

கோவை சூலூர் அருகே 10 வயது சிறுமி பாலியல் வன்கொடுமைக்கு உள்ளாக்கப்பட்டு படுகொலை செய்யப்பட்ட சம்பவத்திற்கு நீதி கேட்டு ஈரந...

காய்ச்சலால் கோவை தனியார் மருத்துவமனையில் அமைச்சர் செங்கோட்டையன் அனுமதி

லேசான காய்ச்சல் காரணமாக தமிழக வருவாய்த்துறை அமைச்சர் செங்கோட்டையன் கோவையில் உள்ள KMCH தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப...

ஆனைமலை புலிகள் காப்பகம்: காண்டூர் கால்வாயில் சிக்கி ஆண் யானை உயிரிழப்பு

பொள்ளாச்சி வனக்கோட்டம் காண்டூர் கால்வாயில் 20 அடி ஆழத்தில் சிக்கிய ஆண் யானையை மீட்க முயற்சி மேற்கொள்ளப்பட்ட நிலையில், நீ...

வடகோவையில் ஓடும் ரயிலில் இருந்து விழுந்த பயணி உயிரிழப்பு

வடகோவை ரயில் நிலையம் அருகே கன்னியாகுமரி செல்லும் எக்ஸ்பிரஸ் ரயிலில் இருந்து தவறி விழுந்த பயணி, கோவை அரசு மருத்துவமனையில்...

கோவையில் UPSC முதற்கட்ட தேர்வு: 6,526 பேர் பங்கேற்பு

இந்தியாவின் மிக முக்கியமான போட்டித் தேர்வான UPSC முதற்கட்ட தேர்வு கோவையில் 15க்கும் மேற்பட்ட மையங்களில் நடைபெற்றது. IAS,...