கடினமான அறுவை சிகிச்சையை முதலமைச்சர் காப்பீட்டில் செய்து சாதனை படைத்த பிஎஸ்ஜி மருத்துவமனை மருத்துவர்கள்

பொள்ளாச்சியைச் சேர்ந்த 55 வயது நபர் ஒருவர் மூச்சுக் கோளாறு காரணமாக கடந்த ஜூன் 28ம் தேதியன்று கோவை பிஎஸ்ஜி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அப்போது அவரை பரிசோதித்த மருத்துவர்கள் அவரது இரத்தக் குழாயில் இரத்தம் வெளியேறிவருவதை கண்டறிந்தனர்.

பின், அந்த இரத்தக் குழாயினை மாற்ற வேண்டும் என முடிவு செய்யப்பட்டது. இதில், இரண்டு குழாயில் ஒரு குழாய் மட்டுமே செயல்பட்டு வந்தது. மற்றொரு குழாய் செயல்படாமல் இருந்துள்ளது. பின், இரத்தம் வெளியேறிவந்த குழாய் சிகிச்சை மூலம் மாற்றப்பட்டது. 

பெண்டல் எனப்படும் இந்த சிகிச்சை பிஎஸ்ஜி மருத்துவமனையின் சிடிவிஎஸ் குழுவினர் தமிழக முதலமைச்சரின் மருத்துவக் காப்பிட்டுத் திட்டத்தின் கீழ் செய்து சாதனை படைத்துள்ளனர். 5 மணி நேரம் நடைபெற்ற இந்த சிகிச்சைக்குப் பின் அந்த நபர் பூரண குணமடைந்தார். 

தொடர்ந்து, ஒருவாரகாலம் மருத்துவக் கண்காணிப்பில் இருந்த நபர் இன்று நல்ல நிலையில் வீடுதிரும்பினார்.

இந்த பெண்டல் சிகிச்சை 500-யில் இருந்து ஆயிரம் இதய சிகிச்சையில் ஏதேனும் ஒன்றே வரும். இதுபோன்று 10-க்கும் மேற்பட்ட சிகிச்சைகள் பிஎஸ்ஜி மருத்துவர்களால் செய்யப்பட்டுள்ளது. அவர்கள் தொடர்ந்து கண்காணிப்பிலும் இருந்து வருகின்றனர். 

இந்த சிகிச்சை குறித்து மேலும், தகவலுக்கு பிஎஸ்ஜி மருத்துவமனை, சிடிவிஎஸ் துறை பேராசிரியர், தலைவர் மருத்துவர் பி.ஆர்.முருகேசன் என்பவரை அணுகலாம்.

Newsletter

கோவை பீளமேடு வார்டு 27-ல் நியாய விலை கடை மற்றும் தூய்மை பணி ஆய்வு

சிங்காநல்லூர் தொகுதி வார்டு 27-ல் கவுன்சிலர் அம்பிகா தனபால் இன்று நியாய விலை கடை, சாலை சுத்தம் மற்றும் குப்பை அகற்றும் ப...

சுதந்திரப் போராட்ட வீரர்களை அறிவது அனைவரின் கடமை - அமைச்சர் சம்பத்குமார்

வ.உ.சிதம்பரனாரின் 155வது பிறந்தநாளையொட்டி கோவையில் அமைச்சர் சம்பத்குமார் மரியாதை செலுத்தினார். சுதந்திரப் போராட்ட வீரர்க...

கோவை மாநகராட்சி: கோவையில் தனியார் நிலங்களில் சீமைக் கருவேலம் மரங்களை அகற்ற 10 நாள் அவகாசம்

கோவை மாநகராட்சி எல்லைக்குள் உள்ள தனியார் நிலங்களில் சீமைக் கருவேல மரங்களை 10 நாட்களுக்குள் நில உரிமையாளர்கள் வேருடன் அகற...

கோவை மாநகராட்சி: தனியார் நிலங்களில் சீமைக் கருவேலம் கப் அகற்ற 10 நாள் அவகாசம்

கோவை மாநகராட்சி எல்லைக்குள் உள்ள தனியார் நிலங்களில் சீமைக் கருவேலமரங்களை 10 நாட்களுக்குள் நில உரிமையாளர்கள் வேருடன் அகற்...

மதுக்கரை ACC சிமெண்ட் ஆலைக்கு எதிராக பொதுமக்கள் ஆர்ப்பாட்டம்

கோவை மதுக்கரையில் செயல்படும் ACC சிமெண்ட் ஆலையிலிருந்து வெளியேறும் சிமெண்ட் துகள்களால் காற்று மாசடைந்து சுவாசக் கோளாறு ஏ...

கோவையில் சாலையோர வியாபாரிகளுக்கான லோக் கல்யாண் மேலா சிறப்பு முகாம் செப்டம்பர் 7ல் தொடக்கம்

கோவை மாநகராட்சி பகுதிகளில் சாலையோர வியாபாரிகளுக்கு வங்கி கடன் வழங்கும் லோக் கல்யாண் மேலா முகாம் செப்டம்பர் 7 முதல் 25 வர...