கோவையில் தொழிலாளர்களின் போராட்டம் தொடர்ந்தால் பிரிக்கால் நிறுவனம் மூடப்படும்- பிரிக்கால் நிர்வாக இயக்குனர் பேட்டி

கோவையை தலைமையிடமாகக் கொண்டு செயல்பட்டு வரும் ஆட்டோ மோட்டிவ் மற்றும் வாகனங்களுக்கான உதிரிபாகங்கள் உற்பத்தி தொழிற்சாலை நிறுவனமான பிரிக்கால் நிறுவனத்தில் தொழிலாளர்கள் மேற்கொண்டுள்ள போராட்டம் தொடருமேயானால் வாடிக்கையாளர்கள் சேவையை கருத்தில் கொண்டு கோவையில் பிரிக்கால் நிறுவனம் மூடும் சூழல் ஏற்படும் என அந்நிறுவனத்தின் நிர்வாக இயக்குனர் விக்ரம் மோகன் தெரிவித்துள்ளார்.



கோவை மாவட்டம், பெரியநாயக்கன் பாளையம் பகுதியில் செயல்பட்டு வரும் பிரிக்கால் நிறுவனம் கடந்த 1982 ஆம் ஆண்டு கோவையில் துவங்கப்பட்டது. சர்வதேச அளவில் இருசக்கர, நான்கு சக்கர வாகன உதிரிபாகங்கள் மற்றும் இஞ்சினியரிங் பாகங்களை உற்பத்தி செய்யும் தொழிற்சாலைகளுக்கு ஏற்றுமதி செய்து வரும் இந்நிறுவனத்தில் ஆயிரக்கணக்கான தொழிலாளர்கள் பணியாற்றி வருகின்றனர்.

இந்நிலையில், கடந்த சில மாதத்திற்கு முன்பு விவசாயிகளுக்கு ஆதரவாக நடைபெற்ற முழு அடைப்புப் போராட்டத்தின் போது பிரிக்கால் தொழிலாளர்கள் எவ்வித முன் அறிவிப்புமின்றி தன்னிச்சையாக வேலைக்கு விடுமுறை எடுத்ததாக கூறி சுமார் 809 பேருக்கு எட்டு நாள் சம்பளம் பிடித்தம் செய்யப்பட்டது. இதனைக்கண்டித்து, அந்நிறுவன தொழிலாளர்கள் பல்வேறு கட்ட போராட்டங்களில் ஈடுபட்டு வருகின்றனர்.

இப்பிரச்சனை தொடர்பாக நீதிமன்ற உத்தரவிற்கு கட்டுப்படுவதாக இருதரப்பிலும் முடிவு எட்டப்பட்டுள்ள நிலையில் இன்று அந்நிறுவனத்தின் நிர்வாக இயக்குனர் விக்ரம் மோகன் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர் கூறுகையில், பிரிக்கால் நிறுவனத்தில் பிரச்சனைகள் தொடர்ந்தால் வாடிக்கையாளர்களின் நலன் கருதி கோவை பிரிக்கால் யூனிட்டை இடமாற்றம் செய்வதை தவிர வேறு வழியில்லை என தெரிவித்தார்.

கோவையை தலைமையிடமாகக் கொண்டு 45 ஆண்டுகளாக  இந்தியா மட்டுமல்லாது பல நாடுகளில் தொழிற்சாலை அமைத்து செயல்பட்டு வரும் பிரிக்கால் நிறுவனத்தின் இந்த அறிவிப்பு தொழிற்துறையினர் மத்தியில் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது.

Newsletter

கோவை பீளமேடு வார்டு 27-ல் நியாய விலை கடை மற்றும் தூய்மை பணி ஆய்வு

சிங்காநல்லூர் தொகுதி வார்டு 27-ல் கவுன்சிலர் அம்பிகா தனபால் இன்று நியாய விலை கடை, சாலை சுத்தம் மற்றும் குப்பை அகற்றும் ப...

சுதந்திரப் போராட்ட வீரர்களை அறிவது அனைவரின் கடமை - அமைச்சர் சம்பத்குமார்

வ.உ.சிதம்பரனாரின் 155வது பிறந்தநாளையொட்டி கோவையில் அமைச்சர் சம்பத்குமார் மரியாதை செலுத்தினார். சுதந்திரப் போராட்ட வீரர்க...

கோவை மாநகராட்சி: கோவையில் தனியார் நிலங்களில் சீமைக் கருவேலம் மரங்களை அகற்ற 10 நாள் அவகாசம்

கோவை மாநகராட்சி எல்லைக்குள் உள்ள தனியார் நிலங்களில் சீமைக் கருவேல மரங்களை 10 நாட்களுக்குள் நில உரிமையாளர்கள் வேருடன் அகற...

கோவை மாநகராட்சி: தனியார் நிலங்களில் சீமைக் கருவேலம் கப் அகற்ற 10 நாள் அவகாசம்

கோவை மாநகராட்சி எல்லைக்குள் உள்ள தனியார் நிலங்களில் சீமைக் கருவேலமரங்களை 10 நாட்களுக்குள் நில உரிமையாளர்கள் வேருடன் அகற்...

மதுக்கரை ACC சிமெண்ட் ஆலைக்கு எதிராக பொதுமக்கள் ஆர்ப்பாட்டம்

கோவை மதுக்கரையில் செயல்படும் ACC சிமெண்ட் ஆலையிலிருந்து வெளியேறும் சிமெண்ட் துகள்களால் காற்று மாசடைந்து சுவாசக் கோளாறு ஏ...

கோவையில் சாலையோர வியாபாரிகளுக்கான லோக் கல்யாண் மேலா சிறப்பு முகாம் செப்டம்பர் 7ல் தொடக்கம்

கோவை மாநகராட்சி பகுதிகளில் சாலையோர வியாபாரிகளுக்கு வங்கி கடன் வழங்கும் லோக் கல்யாண் மேலா முகாம் செப்டம்பர் 7 முதல் 25 வர...