கோவை ஆட்சியர் தலைமையில் எரிவாயு முகவர்கள், விநியோகஸ்தர்கள் அமைப்புகளுடனான ஆலோசனைக் கூட்டம்

கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலக கூட்டரங்கில் இன்று மாவட்ட வழங்கல் துறையின் மூலம் எரிவாயு விநியோகம் செய்யும்போது நுகர்வோர்களின் குறைகளை களைவது தொடர்பாக எரிவாயு முகவர்கள், விநியோகஸ்தர்கள், எண்ணை நிறுவனங்கள் மற்றும் தன்னார்வ நுகர்வோர் அமைப்புகளுடனான ஆலோசனைக் கூட்டம் மாவட்ட ஆட்சியர் ஹரிஹரன் தலைமையில் இன்று நடைபெற்றது.



இக்கூட்டத்தில் மாவட்ட ஆட்சியர் பேசுகையில், நுகர்வோர்கள் சமையல் எரிவாயு பயன்படுத்தும்பொது பாதுகாப்பு காரணிகள் குறித்து விழிப்புணர்வு நிகழ்ச்சிகள் நடத்தப்பட வேண்டும். எரிவாயு உருளையின் எடை மற்றும் அதில் எரிவாயு கசிவு இல்லாமல் இருப்பதை பரிசோதிக்க வேண்டும். கிராமப்புறங்களில் எரிவாயு உருளைகள் வீடுகளுக்கு சென்று வழங்கப்படாமல், ஒரு பொதுவான இடத்தில் வைத்து விநியோகிக்கப்படுவதால், வீட்டு உபயோக எரிவாயு உருளைகள் முறைகேடாக பயன்படுத்துகிறார்கள். அதற்கு 5 எரிவாயு உருளைகள் வரை மற்றும் 100 கிலோ எடை வரையிலும் பொதுவான இடத்தில் வைத்து விநியோகிக்க வேண்டும்.

நகர்புறங்களில் உணவு விடுதிகள் மற்றும அடுமனைகளில் எரிவாயு உருளைகள் முறைகேடாக பயன்படுத்துவதை கண்காணித்து உரிய நடவடிக்கைகள் எடுக்கவேண்டுமென எண்ணெய் நிறுவனங்களுக்கும், எரிவாயு முகவர்களுக்கும் அறிவுறுத்துகிறேன். 

மேலும் எரிவாயு விநியோகம் செய்யும் போது எரிவாயு உருளையின் மதிப்பிற்கு மேல் தொகை வசூலிக்க கூடாது. அனைவரும் அடையாள அட்டை அணிய வேண்டும். ஆதார் அட்டை வங்கிக் கணக்குடன் இணைக்கப்பட்டிருப்பதால் ஒவ்வொரு மாதமும் சமையல் எரிவாயு மானியம் வெவ்வேறு கணக்குகளில் சேர்க்கப்படுவதாகத் தெரிவிக்கப்பட்ட புகாருக்கு சமீபத்தில் இணைக்கப்பட்ட வங்கிக் கணக்கில் மானியம் சேர்க்கப்பட வேண்டும்.

எரிவாயு உருளை வாங்கும்போது கேஸ் அடுப்பு, மிக்ஸி போன்ற பொருள்களையும் சேர்த்து வாங்க வேண்டும் என நுகர்வோர்கள் கட்டாயப்படுத்தப்படுவதாகத் தெரிவிக்கப்பட்ட புகாருக்கு, அதனை சரி செய்து கொள்ள வேண்டும். பல அடுக்குமாடி குடியிருப்புகளில் வசிப்போருக்கு மத்திய அரசின் விதிமுறைகளின்படி எரிவாயு உருளை விநியோகம் செய்யவேண்டும்" என்றார்.

இக்கூட்டத்தில், மாவட்ட வழங்கல் அலுவலர் சரவணமூர்த்தி, மாவட்ட வழங்கல் அலுவலரின் நேர்முக உதவியாளர் கணேசன், நுகர்வோர்கள், எரிவாயு முகவர்கள் உள்ளிட்ட பலரும் கலந்து கொண்டனர்.

Newsletter

கோவை பீளமேடு வார்டு 27-ல் நியாய விலை கடை மற்றும் தூய்மை பணி ஆய்வு

சிங்காநல்லூர் தொகுதி வார்டு 27-ல் கவுன்சிலர் அம்பிகா தனபால் இன்று நியாய விலை கடை, சாலை சுத்தம் மற்றும் குப்பை அகற்றும் ப...

சுதந்திரப் போராட்ட வீரர்களை அறிவது அனைவரின் கடமை - அமைச்சர் சம்பத்குமார்

வ.உ.சிதம்பரனாரின் 155வது பிறந்தநாளையொட்டி கோவையில் அமைச்சர் சம்பத்குமார் மரியாதை செலுத்தினார். சுதந்திரப் போராட்ட வீரர்க...

கோவை மாநகராட்சி: கோவையில் தனியார் நிலங்களில் சீமைக் கருவேலம் மரங்களை அகற்ற 10 நாள் அவகாசம்

கோவை மாநகராட்சி எல்லைக்குள் உள்ள தனியார் நிலங்களில் சீமைக் கருவேல மரங்களை 10 நாட்களுக்குள் நில உரிமையாளர்கள் வேருடன் அகற...

கோவை மாநகராட்சி: தனியார் நிலங்களில் சீமைக் கருவேலம் கப் அகற்ற 10 நாள் அவகாசம்

கோவை மாநகராட்சி எல்லைக்குள் உள்ள தனியார் நிலங்களில் சீமைக் கருவேலமரங்களை 10 நாட்களுக்குள் நில உரிமையாளர்கள் வேருடன் அகற்...

மதுக்கரை ACC சிமெண்ட் ஆலைக்கு எதிராக பொதுமக்கள் ஆர்ப்பாட்டம்

கோவை மதுக்கரையில் செயல்படும் ACC சிமெண்ட் ஆலையிலிருந்து வெளியேறும் சிமெண்ட் துகள்களால் காற்று மாசடைந்து சுவாசக் கோளாறு ஏ...

கோவையில் சாலையோர வியாபாரிகளுக்கான லோக் கல்யாண் மேலா சிறப்பு முகாம் செப்டம்பர் 7ல் தொடக்கம்

கோவை மாநகராட்சி பகுதிகளில் சாலையோர வியாபாரிகளுக்கு வங்கி கடன் வழங்கும் லோக் கல்யாண் மேலா முகாம் செப்டம்பர் 7 முதல் 25 வர...