இணையதளம் மூலமாக வேலைவாய்ப்பு பதிவு வரவேற்பு

மாணவர்கள் தங்களது வேலைவாய்ப்பு பதிவினை வேலைவாய்ப்புத் துறையின் https://tnvelaivaaippu.gov.in என்ற இணைதளம் வாயிலாக பதிவு செய்து கொள்ளலாம். 

இவ்விணையதளத்தின் மூலம் பதிவு செய்தல், புதுபித்தல், கூடுதல் கல்வி பதிவு செய்தல் மற்றும் வேலைவாய்ப்பு அடையாள அட்டை பிரதி எடுத்தல் ஆகியவற்றையும் மேற்கொள்ளலாம்.

மேலும், பத்தாம் வகுப்பு மற்றும் 12 ஆம் வகுப்பு தேர்ச்சி பெற்று வேலைவாய்ப்பு பதிவு செய்ய விரும்பும் மாணவ, மாணவியர்கள் மதிப்பெண் சான்று வழங்கப்படும் பள்ளிகளிலேயே வேலைவாய்ப்பு பதிவு செய்து கொள்ளலாம்.

எனவே, 12 ஆம் வகுப்பு தேர்ச்சி பெற்ற மாணவர்கள் தங்களது 10 ஆம் வகுப்பு கல்வித் தகுதியினை பதிவு செய்த வேலைவாய்ப்பு அலுவலக அடையாள அட்டையுடனும், புதிதாக பதிவு செய்ய விரும்புவோர் குடும்ப அட்டை, ஆதார் அட்டை, பான் அட்டை, மாற்றுத் திறனாளிகளுக்கான அடையாள அட்டை, கடவுச் சீட்டு ஆகியவற்றில் ஏதேனும் ஒரு ஆவணத்தை மதிப்பெண் சான்று பெறும் போது எடுத்து வர வேண்டும்.

பள்ளிகளில் வேலைவாய்ப்பு பதிவுப் பணி நடைபெறும் 15 நாட்களுக்கும் மதிப்பெண் சான்று வழங்கப்படும் நாளையே பதிவு மூப்பு தேதியாக வழங்கப்படும்.

Newsletter

தொண்டாமுத்தூர் அருகே வீட்டின் மீது மண்ணெண்ணெய் பாட்டில் வீச்சு; ரவுடி உட்பட 4 பேரை போலீசார் தேடி வருகின்றனர்.

கோவை தொண்டாமுத்தூரில் காதலிக்க மறுத்த இளம்பெண் வீட்டின் மீது மண்ணெண்ணெய் பாட்டில்கள் வீசி கொலை மிரட்டல் விடுத்த சம்பவத்த...

கோவை சிறுமி கொலை வழக்கு: ஈரநெஞ்சம் காப்பக முதியோர்கள் மெழுகுவர்த்தி ஏந்தி மௌன அஞ்சலி

கோவை சூலூர் அருகே 10 வயது சிறுமி பாலியல் வன்கொடுமைக்கு உள்ளாக்கப்பட்டு படுகொலை செய்யப்பட்ட சம்பவத்திற்கு நீதி கேட்டு ஈரந...

காய்ச்சலால் கோவை தனியார் மருத்துவமனையில் அமைச்சர் செங்கோட்டையன் அனுமதி

லேசான காய்ச்சல் காரணமாக தமிழக வருவாய்த்துறை அமைச்சர் செங்கோட்டையன் கோவையில் உள்ள KMCH தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப...

ஆனைமலை புலிகள் காப்பகம்: காண்டூர் கால்வாயில் சிக்கி ஆண் யானை உயிரிழப்பு

பொள்ளாச்சி வனக்கோட்டம் காண்டூர் கால்வாயில் 20 அடி ஆழத்தில் சிக்கிய ஆண் யானையை மீட்க முயற்சி மேற்கொள்ளப்பட்ட நிலையில், நீ...

வடகோவையில் ஓடும் ரயிலில் இருந்து விழுந்த பயணி உயிரிழப்பு

வடகோவை ரயில் நிலையம் அருகே கன்னியாகுமரி செல்லும் எக்ஸ்பிரஸ் ரயிலில் இருந்து தவறி விழுந்த பயணி, கோவை அரசு மருத்துவமனையில்...

கோவையில் UPSC முதற்கட்ட தேர்வு: 6,526 பேர் பங்கேற்பு

இந்தியாவின் மிக முக்கியமான போட்டித் தேர்வான UPSC முதற்கட்ட தேர்வு கோவையில் 15க்கும் மேற்பட்ட மையங்களில் நடைபெற்றது. IAS,...