திமுக சார்பில் வழக்கறிஞர்களுக்கான பயிற்சி பட்டறை துவக்கம்

கோவை திமுக சார்பில் வழக்கறிஞர்களுக்கான பயிற்சி பட்டறை கவுண்டம்பாளையத்தில் உள்ள கல்பனா திருமண மண்டபத்தில் இன்று நடைபெற்றது. இதில் சிறப்பு விருந்தினராக திமுக அமைப்புச் செயலாளரும், பாராளுமன்ற நியமனக்குழு உறுப்பினருமான எஸ்.ஆர் பாரதி கலந்து கொண்டு நிகழ்ச்சியை துவக்கி வைத்தார்.

பின்னர், செய்தியாளர்களிடம் பேசிய அவர், தமிழ்நாட்டில் விரைவில் உள்ளாட்சி தேர்தல் மற்றும் சட்டமன்ற தேர்தல் நடைபெறும் எனவும், மத்தியில் ஆளும் பாரத ஜனதா கட்சி எப்போது வேண்டுமானாலும் தமிழகத்தில் தற்போது நடைபெற்று வரும் ஆட்சியை கலைக்க நேரிடலாம் எனக் கூறினார். மேலும் தற்போது தமிழ்நாட்டில் நடைபெற்றுவரும் அஇஅதிமுக ஆட்சியை பாரத ஜனதா கட்சி கட்டுபாட்டுடன் நடைபெற்று வருவதாக குற்றம்சாட்டயுள்ளார். முன்னாள் தமிழக முதலமைச்சர் ஜெயலலிதாவின் மறைவிற்கு பின்னர் கொடநாட்டில் நடைபெற்ற சம்பவங்களை மறைப்பதற்காக பாரத ஜனதா கட்சி தமிழகத்தில் டி.ஜி.பி ராஜேந்திரனை பணிநீக்கம் செய்யப்பட்டதாக கூறினார். இதற்கு எதிராக திமுக சார்பில் உயர்தீதி மன்றத்தில் வழக்கு தொடரப்படும் எனவும் கூறினார்.

இந்நிகழ்ச்சியில், திமுக உயர்நிலை செயல் திட்டக்குழு உறுப்பினர் கண்ணப்பன், முன்னாள் அமைச்சர் பொங்கலூர் பழனிச்சாமி, முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் விடுதலை விரும்பி, கோவை மாநகர வடக்கு மாவட்ட வழக்கறிஞர் அணி மற்றும் திமுக உறுப்பினர்கள் பலர் கலந்து கொண்டனர்.

Newsletter

கோவை பீளமேடு வார்டு 27-ல் நியாய விலை கடை மற்றும் தூய்மை பணி ஆய்வு

சிங்காநல்லூர் தொகுதி வார்டு 27-ல் கவுன்சிலர் அம்பிகா தனபால் இன்று நியாய விலை கடை, சாலை சுத்தம் மற்றும் குப்பை அகற்றும் ப...

சுதந்திரப் போராட்ட வீரர்களை அறிவது அனைவரின் கடமை - அமைச்சர் சம்பத்குமார்

வ.உ.சிதம்பரனாரின் 155வது பிறந்தநாளையொட்டி கோவையில் அமைச்சர் சம்பத்குமார் மரியாதை செலுத்தினார். சுதந்திரப் போராட்ட வீரர்க...

கோவை மாநகராட்சி: கோவையில் தனியார் நிலங்களில் சீமைக் கருவேலம் மரங்களை அகற்ற 10 நாள் அவகாசம்

கோவை மாநகராட்சி எல்லைக்குள் உள்ள தனியார் நிலங்களில் சீமைக் கருவேல மரங்களை 10 நாட்களுக்குள் நில உரிமையாளர்கள் வேருடன் அகற...

கோவை மாநகராட்சி: தனியார் நிலங்களில் சீமைக் கருவேலம் கப் அகற்ற 10 நாள் அவகாசம்

கோவை மாநகராட்சி எல்லைக்குள் உள்ள தனியார் நிலங்களில் சீமைக் கருவேலமரங்களை 10 நாட்களுக்குள் நில உரிமையாளர்கள் வேருடன் அகற்...

மதுக்கரை ACC சிமெண்ட் ஆலைக்கு எதிராக பொதுமக்கள் ஆர்ப்பாட்டம்

கோவை மதுக்கரையில் செயல்படும் ACC சிமெண்ட் ஆலையிலிருந்து வெளியேறும் சிமெண்ட் துகள்களால் காற்று மாசடைந்து சுவாசக் கோளாறு ஏ...

கோவையில் சாலையோர வியாபாரிகளுக்கான லோக் கல்யாண் மேலா சிறப்பு முகாம் செப்டம்பர் 7ல் தொடக்கம்

கோவை மாநகராட்சி பகுதிகளில் சாலையோர வியாபாரிகளுக்கு வங்கி கடன் வழங்கும் லோக் கல்யாண் மேலா முகாம் செப்டம்பர் 7 முதல் 25 வர...