மதுக்கரையில் முறைகேடாக விற்கப்படும் மதுபானங்கள்- பொதுமக்கள் அவதி

இந்தியா முழுவதும் தேசிய மற்றும் மாநில நெடுஞ்சாலைகளில் உள்ள மதுக்கடைகளையும், பார்களையும் கடந்த மார்ச் 31-ஆம் தேதிக்குள் அகற்ற வேண்டும் என்று உச்ச நீதிமன்றம் தீர்ப்பளித்தது. ஏப்ரல் 1-ம் தேதிக்குப் பிறகு புதிய மதுக்கடைகளை திறக்க அனுமதிக்கக்கூடாது என்றும் மாநில அரசுகளுக்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.

இதனைத்தொடர்ந்து, கோவை மாவட்டத்தில் இவ்வாறாக செயல்பட்டு வந்த நூற்றுக்கும் மேற்பட்ட மதுபானக் கடைகள் மூடப்பட்டன. மேலும், பல கடைகள் இடமாற்றம் செய்யப்பட்டு குடியிருப்பு பகுதிகளில் மாற்றப்பட்டன. இந்நிலையில், சிலர் மதுபானங்களை முறைகேடாக விற்பனை செய்துவருவதாக பொதுமக்கள் குற்றஞ்சாட்டி வருகின்றனர்.

குறிப்பாக, கோவை மாவட்டம், மதுக்கரைக்கு உட்பட்ட பகுதியில் நீதிமன்ற தீர்ப்பை அடுத்து மூடப்பட்ட டாஸ்மாக் கடை, அதன் எதிரே உள்ள பெட்டிக் கடை உள்ளிட்டவற்றில் மதுபானங்கள் தற்போது அதிக விலைக்கு விற்பனை செய்யப்பட்டு வருகிறது.

முன்புறம் மூடிய நிலையில் உள்ள இந்த டாஸ்மாக் கடையின் பின் வாசல் பகுதியிலும், அருகிலும் சிலர் முறைகேடாக மதுபானங்களை விற்பனை செய்து வருகின்றனர். இந்த மதுக்கடையின் எதிரே உள்ள பெட்டிக் கடையிலும், சிலர் குடியிருப்பு பகுதிகளுக்குச் செல்லும் சாலையிலும் அமர்ந்து மதுபானங்களை விற்பனை செய்து வருவதாக அப்பகுதி மக்கள் குற்றஞ்சாட்டியுள்ளனர். மேலும், காலை 6 மணி முதல் இரவு 10 மணி, அதற்கு மேலும் விற்பனை நடைபெறுவதாகவும், மதுக்கடையினை விட வெளியில் கூடுதலாக விலை வைத்து விற்பனை செய்து வருவதாகவும் கூறப்படுகிறது.

இதுகுறித்து அப்பகுதி மக்கள் கூறுகையில், இப்பகுதியில் மதுகுடிக்க வருவோரால் அன்றாடம் பெண்கள், பள்ளி செல்லும் குழந்தைகள் பெரிதும் பாதிக்கப்பட்டு வருகின்றனர். இதுகுறித்து மதுக்கரை காவல்நிலையத்தில் புகார் அளிக்கப்பட்டுள்ளது. அனால், எவ்வித நடவடிக்கையும் மேற்கொள்ளப்படுவதில்லை. தொடர்ந்து, இதுபோன்ற முறைகேடான மதுபான விற்பனை நடைபெற்றால் அடுத்தகட்டமாக மாவட்ட காவல்துறை ஆணையரிடம் புகார் அளிக்கப்படும்' என தெரிவித்தனர்.

Newsletter

கோவை பீளமேடு வார்டு 27-ல் நியாய விலை கடை மற்றும் தூய்மை பணி ஆய்வு

சிங்காநல்லூர் தொகுதி வார்டு 27-ல் கவுன்சிலர் அம்பிகா தனபால் இன்று நியாய விலை கடை, சாலை சுத்தம் மற்றும் குப்பை அகற்றும் ப...

சுதந்திரப் போராட்ட வீரர்களை அறிவது அனைவரின் கடமை - அமைச்சர் சம்பத்குமார்

வ.உ.சிதம்பரனாரின் 155வது பிறந்தநாளையொட்டி கோவையில் அமைச்சர் சம்பத்குமார் மரியாதை செலுத்தினார். சுதந்திரப் போராட்ட வீரர்க...

கோவை மாநகராட்சி: கோவையில் தனியார் நிலங்களில் சீமைக் கருவேலம் மரங்களை அகற்ற 10 நாள் அவகாசம்

கோவை மாநகராட்சி எல்லைக்குள் உள்ள தனியார் நிலங்களில் சீமைக் கருவேல மரங்களை 10 நாட்களுக்குள் நில உரிமையாளர்கள் வேருடன் அகற...

கோவை மாநகராட்சி: தனியார் நிலங்களில் சீமைக் கருவேலம் கப் அகற்ற 10 நாள் அவகாசம்

கோவை மாநகராட்சி எல்லைக்குள் உள்ள தனியார் நிலங்களில் சீமைக் கருவேலமரங்களை 10 நாட்களுக்குள் நில உரிமையாளர்கள் வேருடன் அகற்...

மதுக்கரை ACC சிமெண்ட் ஆலைக்கு எதிராக பொதுமக்கள் ஆர்ப்பாட்டம்

கோவை மதுக்கரையில் செயல்படும் ACC சிமெண்ட் ஆலையிலிருந்து வெளியேறும் சிமெண்ட் துகள்களால் காற்று மாசடைந்து சுவாசக் கோளாறு ஏ...

கோவையில் சாலையோர வியாபாரிகளுக்கான லோக் கல்யாண் மேலா சிறப்பு முகாம் செப்டம்பர் 7ல் தொடக்கம்

கோவை மாநகராட்சி பகுதிகளில் சாலையோர வியாபாரிகளுக்கு வங்கி கடன் வழங்கும் லோக் கல்யாண் மேலா முகாம் செப்டம்பர் 7 முதல் 25 வர...