கோவையில் போலி மருத்துவர்கள் இருவர் கைது


கோவையில் கடந்த 20 ஆண்டுகளாக உரிய சான்றிதழ் இல்லாமல் மருத்துவம் பார்த்து வந்த போலி மருத்துவர்கள் இருவரை காவல்துறையினர் இன்று கைது செய்தனர்.

கோவை மாவட்டம், ஆலாந்துரை பகுதியில் மருத்துவத்தில் நுட்பம் பயின்ற சான்றிதழைக் கொண்டு கடந்த 20 ஆண்டுகளாக பொதுமக்களுக்கு சிகிச்சையளித்து வந்த ஆறுமுகராஜ் என்பவரை ஆலாந்துறை காவல்துறையினர் கைது செய்துள்ளனர். 



பொதுமக்களிடமிருந்து வந்த புகாரை அடுத்து மாவட்ட சுகாதாரத்துறை இணை இயக்குனர் கண்ணன் தலைமையிலான அதிகாரிகள் மேற்கொண்ட சோதனையில், ஆறுமுகராஜிடம் உரிய சான்றிதழ்கள் இல்லாதது தெரியவந்தது. இதனை அடுத்து கைது நடவடிக்கை மேற்கொண்டுள்ளனர்.

இவர் மீது Ipc 419, 468,471 மற்றும் இந்திய மருத்துவ கவுன்சில் சட்டம் பிரிவு 15, இந்திய மருந்துகள் மத்திய கவுன்சில் சட்ட பிரிவு 17 ஆகிய ஐந்து பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட்டு நீதிமன்றத்தில் ஆஜர் படுத்தப்பட்டார். வழக்கை விசாரித்த நீதிபதி, ஆறுமுகராஜை 15 நாட்கள் நீதிமன்ற காவலில் வைக்க உத்தரவிட்டதன் அடிப்படையில் கோவை மத்திய சிறையில் அடைக்கப்பட்டார்.



இதேப்போல், தொண்டாமுத்தூர் அடுத்த உலியம்பாளையம் பகுதியில் கலைவாணி கிளீனிக் என்ற பெயரில் கடந்த இரண்டு ஆண்டுகளாக மருத்துவம் பார்த்து வந்த கலைவாணி என்ற பெண்ணின் மீது சந்தேகத்தின் அடிப்படையில் அவருடைய கிளீனிக்கில் சோதனை மேற்கொள்ளப்பட்டது. அப்போது, தன்னிடம் உரிய ஆவணம் உள்ளதாக கலைவாணி தெரிவித்ததை அடுத்து அவரை காவல் நிலையத்தில் ஆவணங்களுடன் ஆஜராக காவல்துறையினர் அறிவுறுத்தினர்.



ஆனால், அவர் சான்றிதழ்களை ஒப்படைக்காததால் தொண்டாமுத்தூர் காவல்நிலைய போலீசார் வசம் பதிவு செய்து மோசடி பெண்ணான கலைவாணியை கைது செய்துள்ளனர். தொடர்ந்து இன்று மாலை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டு சிறையில் அடைக்கப்படுவார் என காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.

Newsletter

கோவை பீளமேடு வார்டு 27-ல் நியாய விலை கடை மற்றும் தூய்மை பணி ஆய்வு

சிங்காநல்லூர் தொகுதி வார்டு 27-ல் கவுன்சிலர் அம்பிகா தனபால் இன்று நியாய விலை கடை, சாலை சுத்தம் மற்றும் குப்பை அகற்றும் ப...

சுதந்திரப் போராட்ட வீரர்களை அறிவது அனைவரின் கடமை - அமைச்சர் சம்பத்குமார்

வ.உ.சிதம்பரனாரின் 155வது பிறந்தநாளையொட்டி கோவையில் அமைச்சர் சம்பத்குமார் மரியாதை செலுத்தினார். சுதந்திரப் போராட்ட வீரர்க...

கோவை மாநகராட்சி: கோவையில் தனியார் நிலங்களில் சீமைக் கருவேலம் மரங்களை அகற்ற 10 நாள் அவகாசம்

கோவை மாநகராட்சி எல்லைக்குள் உள்ள தனியார் நிலங்களில் சீமைக் கருவேல மரங்களை 10 நாட்களுக்குள் நில உரிமையாளர்கள் வேருடன் அகற...

கோவை மாநகராட்சி: தனியார் நிலங்களில் சீமைக் கருவேலம் கப் அகற்ற 10 நாள் அவகாசம்

கோவை மாநகராட்சி எல்லைக்குள் உள்ள தனியார் நிலங்களில் சீமைக் கருவேலமரங்களை 10 நாட்களுக்குள் நில உரிமையாளர்கள் வேருடன் அகற்...

மதுக்கரை ACC சிமெண்ட் ஆலைக்கு எதிராக பொதுமக்கள் ஆர்ப்பாட்டம்

கோவை மதுக்கரையில் செயல்படும் ACC சிமெண்ட் ஆலையிலிருந்து வெளியேறும் சிமெண்ட் துகள்களால் காற்று மாசடைந்து சுவாசக் கோளாறு ஏ...

கோவையில் சாலையோர வியாபாரிகளுக்கான லோக் கல்யாண் மேலா சிறப்பு முகாம் செப்டம்பர் 7ல் தொடக்கம்

கோவை மாநகராட்சி பகுதிகளில் சாலையோர வியாபாரிகளுக்கு வங்கி கடன் வழங்கும் லோக் கல்யாண் மேலா முகாம் செப்டம்பர் 7 முதல் 25 வர...