கோவையில் பல மாதங்களாக மூடிக்கிடக்கும் மாற்றுத்திறனாளிகளுக்கான டாய்லெட்

உக்கடம் பேருந்து நிலையத்தில் உள்ள, மாற்றுத்திறனாளிகளுக்கான டாய்லெட் பல மாதங்களாக செயல்படாமல் இருந்து வருகிறது. கோவை மாநகராட்சியில் முக்கியமான பேருந்து நிலையங்கள், பொதுமக்கள் அதிகமாக கூடும் இடங்களில் பொதுக்கழிப்பறைகள் கட்டப்பட்டு உள்ளன. இதில், சிலவை கட்டண கழிப்பறையாகவும், சில இலவச கழிப்பறையாகவும் உள்ளன. கட்டண கழிப்பிடங்களில் ஒப்பந்ததாரர் பராமரிப்பில் உள்ள கழிப்பறையாக இருந்தாலும் சிறுநீர் கழிக்க ஒரு ரூபாய், மலம் கழிக்க 3 ரூபாய், குளிக்க 5 ரூபாய் வசூலிக்க வேண்டும். ஆனால், நிர்ணயித்த கட்டணத்தை விட கூடுதலாக வசூலிப்பது வழக்கமாகியுள்ளது.

மாநகராட்சி பராமரிப்பில் நகர்ப்பகுதியில் 370 கழிப்பறைகள் உள்ளன. 'தூய்மை பாரதம்' திட்டத்தில் பல லட்சம் ரூபாய் செலவு செய்து சமீபத்தில் இக்கழிப்பறைகள் புதுப்பிக்கப்பட்டன. அழகாக வர்ணம் பூசப்பட்டது. 'டைல்ஸ்' கற்கள் பதிக்கப்பட்டன. புதிதாக குழாய் இணைப்பு, தண்ணீர் வசதி, வாளி என அனைத்து பொருட்களும் வாங்கப்பட்டன. இலவச கழிப்பறைகளை சுத்தம் செய்யும் பணி தனியார் நிறுவனத்திடம் வழங்கப்பட்டு உள்ளது. இந்நிறுவனத்துக்கு ஆண்டுக்கு ஒருமுறை பெருந்தொகை மாநகராட்சியில் இருந்து வழங்கப்படுகிறது. இதுபோன்ற திட்டங்கள் செயல்படுத்தினாலும் மாற்றுத்திறனாளிகள் பயன்படுத்தும் டாய்லெட் செயல்படுவதில்லை.

இது குறித்து மாற்றுத்திறனாளி ஒருவரிடம் பேசுகையில்; கோவையில் முக்கிய இடங்களில் மாற்றுத்திறனாளிகளுக்கான இலவச கழிப்பறைகள் உள்ளன. ஆனால் பெரும்பாலான பகுதிகளில் கழிப்பறை செயல்படாமல் மூடிக்கிடக்கின்றன. இதனால் அவசர காலங்களில் எங்களால்  பயன்படுத்த முடியாத சூழ்நிலையே நிலவுகிறது.

குறிப்பாக, உக்கடம் கழிப்பறை, கோவை மத்திய மண்டலத்தில் உள்ள கழிப்பறை என முக்கிய இடங்களில் உள்ள பெரும்பாலானவை இவ்வாறு செயல்படாமல் உள்ளது. மாற்றுத்திறனாளிகள் சிலர் தவழ்ந்து வருபவர்கள் இந்த கழிப்பறைகளை உபயோகிப்பது சிரமமாக உள்ளது. வீல் சேர் மூலம் கழிப்பறைக்கு செல்வதற்கு எங்களுக்கு வசதியாக உள்ளது. ஆனால், செல்லும் அனைத்து இடத்திற்கும் வீல் சேர் கொண்டு செல்ல எங்களால் முடிவதில்லை. எனவே, எங்களது சிரமத்தை போக்க வீல் சேர்களை மாற்றுத்திறனாளிகள் உபயோகிக்கும் அனைத்து கழிவறைக்கும் வைப்பதற்கு மாநகராட்சி உதவ முன்வர வேண்டும்' என்றார்.

இது குறித்து, சம்மந்தப்பட்ட மாநகராட்சி அதிகாரியிடம் பேசுகையில், மௌனம் மட்டுமே அவர்களது நிரந்தர பதிலாக உள்ளது. இதனை உயரதிகாரிகள் கவனித்து, கழிப்பறையை மூடாமல் மாற்றுத்திறனாளிகள் உபயோகிப்பதற்கு நடவடிக்கை எடுக்க வேண்டும் என பல்வேறு தரப்பினரும் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Newsletter

கோவை பீளமேடு வார்டு 27-ல் நியாய விலை கடை மற்றும் தூய்மை பணி ஆய்வு

சிங்காநல்லூர் தொகுதி வார்டு 27-ல் கவுன்சிலர் அம்பிகா தனபால் இன்று நியாய விலை கடை, சாலை சுத்தம் மற்றும் குப்பை அகற்றும் ப...

சுதந்திரப் போராட்ட வீரர்களை அறிவது அனைவரின் கடமை - அமைச்சர் சம்பத்குமார்

வ.உ.சிதம்பரனாரின் 155வது பிறந்தநாளையொட்டி கோவையில் அமைச்சர் சம்பத்குமார் மரியாதை செலுத்தினார். சுதந்திரப் போராட்ட வீரர்க...

கோவை மாநகராட்சி: கோவையில் தனியார் நிலங்களில் சீமைக் கருவேலம் மரங்களை அகற்ற 10 நாள் அவகாசம்

கோவை மாநகராட்சி எல்லைக்குள் உள்ள தனியார் நிலங்களில் சீமைக் கருவேல மரங்களை 10 நாட்களுக்குள் நில உரிமையாளர்கள் வேருடன் அகற...

கோவை மாநகராட்சி: தனியார் நிலங்களில் சீமைக் கருவேலம் கப் அகற்ற 10 நாள் அவகாசம்

கோவை மாநகராட்சி எல்லைக்குள் உள்ள தனியார் நிலங்களில் சீமைக் கருவேலமரங்களை 10 நாட்களுக்குள் நில உரிமையாளர்கள் வேருடன் அகற்...

மதுக்கரை ACC சிமெண்ட் ஆலைக்கு எதிராக பொதுமக்கள் ஆர்ப்பாட்டம்

கோவை மதுக்கரையில் செயல்படும் ACC சிமெண்ட் ஆலையிலிருந்து வெளியேறும் சிமெண்ட் துகள்களால் காற்று மாசடைந்து சுவாசக் கோளாறு ஏ...

கோவையில் சாலையோர வியாபாரிகளுக்கான லோக் கல்யாண் மேலா சிறப்பு முகாம் செப்டம்பர் 7ல் தொடக்கம்

கோவை மாநகராட்சி பகுதிகளில் சாலையோர வியாபாரிகளுக்கு வங்கி கடன் வழங்கும் லோக் கல்யாண் மேலா முகாம் செப்டம்பர் 7 முதல் 25 வர...