கரடு முரடான கருமத்தம்பட்டி சாலை- பொதுமக்கள் அவதி

கோவை மாவட்டத்தின் முக்கிய கிராமப்புற பகுதியான கருமத்தம்பட்டி சாலையில் சில தனியார் நிறுவனங்களின் கனரக வாகனங்களினால் சாலை பழுதடைந்து தற்போது மக்கள் பயன்படுத்த முடியாத நிலை நிலவிவருகிறது.



கருமத்தம்பட்டி நகராட்சிக்கு உட்பட்ட சாலையில் தனியார் நிறுவனங்களின் கனரக வாகனங்கள் அதிகப்படியாக இயக்கப்படுவதால் அப்பகுதியில் சாலைகள் முற்றிலும் சேதமடைந்து காணப்படுகின்றன. குண்டும் குழியுமாக உள்ள அந்த சாலைகளில் தற்போது பெய்து வரும் மழை நீர் தேங்கி குளம்போல் காட்சியளிக்கிறது.

இதனால், அப்பகுதி பொதுமக்கள், வாகன ஓட்டிகள் அந்த சாலையினை கடந்து செல்ல மிகவும் சிரமத்திற்கு உள்ளாகியுள்ளனர். மேலும், சில சமயங்களில் அந்த சாலையில் புழுதிகள் ஏற்பட்டு அருகில் உள்ள கடைகள், குடியிருப்புகளில் தேங்குவதும் நிலவிவருகிறது.

இதுகுறித்து நகராட்சி நிர்வாகத்திடம் புகார் அளித்த நிலையில் அரசு அலுவலர்கள் நடவடிக்கை மேற்கொள்ளாத காரணத்தினால் அப்பகுதி மக்களே அந்த சாலையில் தேங்கியுள்ள கழிவுகளையும், தனியார் நிறுவனங்களின் கழிவுகளையும் அகற்றி வருகின்றனர். 

இதன் நடவடிக்கை குறித்து தகவல் பெற நகரசபை அதிகாரிகளுக்கு தொடர்புகொண்ட நிலையில், அதிகாரிகள் அழைப்பை துண்டிக்கவே செய்தனர்.

Newsletter

கோவை பீளமேடு வார்டு 27-ல் நியாய விலை கடை மற்றும் தூய்மை பணி ஆய்வு

சிங்காநல்லூர் தொகுதி வார்டு 27-ல் கவுன்சிலர் அம்பிகா தனபால் இன்று நியாய விலை கடை, சாலை சுத்தம் மற்றும் குப்பை அகற்றும் ப...

சுதந்திரப் போராட்ட வீரர்களை அறிவது அனைவரின் கடமை - அமைச்சர் சம்பத்குமார்

வ.உ.சிதம்பரனாரின் 155வது பிறந்தநாளையொட்டி கோவையில் அமைச்சர் சம்பத்குமார் மரியாதை செலுத்தினார். சுதந்திரப் போராட்ட வீரர்க...

கோவை மாநகராட்சி: கோவையில் தனியார் நிலங்களில் சீமைக் கருவேலம் மரங்களை அகற்ற 10 நாள் அவகாசம்

கோவை மாநகராட்சி எல்லைக்குள் உள்ள தனியார் நிலங்களில் சீமைக் கருவேல மரங்களை 10 நாட்களுக்குள் நில உரிமையாளர்கள் வேருடன் அகற...

கோவை மாநகராட்சி: தனியார் நிலங்களில் சீமைக் கருவேலம் கப் அகற்ற 10 நாள் அவகாசம்

கோவை மாநகராட்சி எல்லைக்குள் உள்ள தனியார் நிலங்களில் சீமைக் கருவேலமரங்களை 10 நாட்களுக்குள் நில உரிமையாளர்கள் வேருடன் அகற்...

மதுக்கரை ACC சிமெண்ட் ஆலைக்கு எதிராக பொதுமக்கள் ஆர்ப்பாட்டம்

கோவை மதுக்கரையில் செயல்படும் ACC சிமெண்ட் ஆலையிலிருந்து வெளியேறும் சிமெண்ட் துகள்களால் காற்று மாசடைந்து சுவாசக் கோளாறு ஏ...

கோவையில் சாலையோர வியாபாரிகளுக்கான லோக் கல்யாண் மேலா சிறப்பு முகாம் செப்டம்பர் 7ல் தொடக்கம்

கோவை மாநகராட்சி பகுதிகளில் சாலையோர வியாபாரிகளுக்கு வங்கி கடன் வழங்கும் லோக் கல்யாண் மேலா முகாம் செப்டம்பர் 7 முதல் 25 வர...