தெற்கு ரயில்வே சேலம் கோட்டத்தில் இடைக்கால ஓய்வூதிய குறைதீர்ப்பு மன்றம்

தெற்கு ரயில்வே சேலம் கோட்டத்தில் ஓய்வூதியம் பெறும் ரயில்வே ஊழியர்களுக்கான 2017ம் ஆண்டுக்கான இடைக்கால ஓய்வூதிய குறைதீர்ப்பு மன்றம் இன்று (14.07.2017) நடைபெற்றது. இந்த மன்றத்திற்கு சேலம் ரயில்வே கோட்ட மேலாளர் ஹரிசங்கர் வர்மா தலைமை வகித்தார். 90 ரயில்வே ஓய்வூதியர்கள் மற்றும் பயனாளிகள் இந்த ஓய்வூதிய குறைதீர்ப்பு மன்றத்தில் கலந்து கொண்டு தங்கள் குறைகளை தெரிவித்தனர்.

இதில், 20 புதிய மனுக்கள் உள்பட மொத்தம் 98 மனுக்கள் சமர்ப்பிக்கப்பட்டன. அவற்றுள், 51 மனுக்களின் மீது முடிவுகள் எடுக்கப்பட்டு மொத்தம் ரூ. 1,15,44,748 வழங்க ஆணை பிறப்பிக்கப்பட்டது. மீதமுள்ள மனுக்களில், 27 மனுக்கள் போதிய ஆவணங்கள் இல்லாததால் தீர்க்கப்படவில்லை. புதியதாக தரப்பட்ட 20 மனுக்கள் மீது ஆய்வு செய்து விரைவில் ஆணை வழங்கப்படும் என அறிவிக்கப்பட்டது.

இந்த ஓய்வூதிய குறைதீர்ப்பு மன்றத்தில் சேலம் கோட்ட கூடுதல் ரயில்வே மேலாளர் சந்திரபால், சேலம் கோட்ட பணியாளர் அலுவலர் எஸ். திருமுருகன் மற்றும் இதர சேலம் கோட்ட அதிகாரிகள் கலந்து கொண்டனர்.

Newsletter

கோவை பீளமேடு வார்டு 27-ல் நியாய விலை கடை மற்றும் தூய்மை பணி ஆய்வு

சிங்காநல்லூர் தொகுதி வார்டு 27-ல் கவுன்சிலர் அம்பிகா தனபால் இன்று நியாய விலை கடை, சாலை சுத்தம் மற்றும் குப்பை அகற்றும் ப...

சுதந்திரப் போராட்ட வீரர்களை அறிவது அனைவரின் கடமை - அமைச்சர் சம்பத்குமார்

வ.உ.சிதம்பரனாரின் 155வது பிறந்தநாளையொட்டி கோவையில் அமைச்சர் சம்பத்குமார் மரியாதை செலுத்தினார். சுதந்திரப் போராட்ட வீரர்க...

கோவை மாநகராட்சி: கோவையில் தனியார் நிலங்களில் சீமைக் கருவேலம் மரங்களை அகற்ற 10 நாள் அவகாசம்

கோவை மாநகராட்சி எல்லைக்குள் உள்ள தனியார் நிலங்களில் சீமைக் கருவேல மரங்களை 10 நாட்களுக்குள் நில உரிமையாளர்கள் வேருடன் அகற...

கோவை மாநகராட்சி: தனியார் நிலங்களில் சீமைக் கருவேலம் கப் அகற்ற 10 நாள் அவகாசம்

கோவை மாநகராட்சி எல்லைக்குள் உள்ள தனியார் நிலங்களில் சீமைக் கருவேலமரங்களை 10 நாட்களுக்குள் நில உரிமையாளர்கள் வேருடன் அகற்...

மதுக்கரை ACC சிமெண்ட் ஆலைக்கு எதிராக பொதுமக்கள் ஆர்ப்பாட்டம்

கோவை மதுக்கரையில் செயல்படும் ACC சிமெண்ட் ஆலையிலிருந்து வெளியேறும் சிமெண்ட் துகள்களால் காற்று மாசடைந்து சுவாசக் கோளாறு ஏ...

கோவையில் சாலையோர வியாபாரிகளுக்கான லோக் கல்யாண் மேலா சிறப்பு முகாம் செப்டம்பர் 7ல் தொடக்கம்

கோவை மாநகராட்சி பகுதிகளில் சாலையோர வியாபாரிகளுக்கு வங்கி கடன் வழங்கும் லோக் கல்யாண் மேலா முகாம் செப்டம்பர் 7 முதல் 25 வர...