டெங்கு தடுப்பு நடவடிக்கைகளில் கல்லூரி மாணவர்களைக் கொண்டு விழிப்புணர்வு ஏற்படுத்த மாநகராட்சி ஆணையர் அறிவுரை

கோவை மாநகராட்சி ஆணையர் மற்றும் தனி அலுவலர் க.விஜயகார்த்திகேயன் தலைமையில் இன்று மாநகராட்சியில் பணிபுரியும் கொசு ஒழிப்பு பணியாளர்கள், கொங்கு நர்சிங் கல்லூரி அலுவலர்கள் மற்றும் மாணவர்கள் 100 நபர்களுடன் மத்திய மண்டலம் சங்கனூர் மற்றும் இரத்தினபுரி பகுதியில் கொசு ஒழிப்பு பணிகள் மேற்கொள்ளப்பட்டு, வீடு வீடாக சென்று துப்புரவு பற்றிய விழிப்புணர்வு பிரசுரங்கள் விநியோகித்தல், விழிப்புணர்வு ஏற்படுத்துதல் போன்ற சிறப்பு டெங்கு தடுப்பு நடவடிக்கை பணிகள் தொடங்கி வைக்கப்பட்டது.



இதனைத் தொடர்ந்து தெற்கு மண்டலம் குனியமுத்தூர் பகுதியில் மாநகராட்சி பணியாளர்கள், கல்லூரி மாணவர்களைக் கொண்டு நடைபெற்ற சிறப்பு டெங்கு தடுப்பு பணிகளை மாநகராட்சி ஆணையர் மற்றும் துணை ஆணையர் ஆய்வு மேற்கொண்டனர். 

இச்சிறப்பு டெங்கு தடுப்பு பணிகள் மாநகராட்சியின் ஐந்து மண்டல பகுதிகளில் நடைபெற்றது. அவைகளில் மத்திய மண்டலத்தில் சங்கனூர் மற்றும் இரத்தினபுரி இடங்களில் கொங்கு நர்சிங் கல்லூரி மாணவர்கள் 100 பேரும், டிபிசி பணியாளர்களும் 100 பேரும் இணைந்து பார்வையிடப்பட்ட வீடுகளின் எண்ணிக்கை 4890. தெற்கு மண்டலத்தில் குனியமுத்தூர் இடத்தில் நேரு கல்லூரி மாணவர்கள் 100 பேரும் டிபிசி பணியாளர்களும் 60 பேரும் இணைந்து பார்வையிடப்பட்ட வீடுகளின் எண்ணிக்கை 1643.

கிழக்கு மண்டலத்தில் நேரு நகர் மற்றும் காளப்பட்டி இடங்களில் பி.எஸ்.ஜி. கலை மற்றும் அறிவியல் கல்லூரி மாணவர்கள் 100 பேரும் டிபிசி பணியாளர்களும் 65 பேரும் இணைந்து பார்வையிடப்பட்ட வீடுகளின் எண்ணிக்கை 3015. மேற்கு மண்டலத்தில் கல்வீராம் பாளையம், பொம்மனாம் பாளையம், ஓணாம்பாளையம் இடங்களில் இராமலிங்க சௌடேஸ்வரி கலை அறிவியல் கல்லூரி மாணவர்கள் 120 பேரும் டிபிசி பணியாளர்களும் 50 பேரும் இணைந்து பார்வையிடப்பட்ட வீடுகளின் எண்ணிக்கை 1320. 

வடக்கு மண்டலத்தில் காந்திமா நகர் இடத்தில் சி.எம்.எஸ். கலை அறிவியல் கல்லூரி மாணவர்கள் 100 பேரும் டிபிசி பணியாளர்களும் 100 பேரும் இணைந்து பார்வையிடப்பட்ட வீடுகளின் எண்ணிக்கை 2525. இனி வரும் காலங்களில் மாநகராட்சி ஐந்து மண்டல பகுதிகளில் உள்ள இடங்களில் இப்பணிகள் தொடர்ச்சியாக நடைபெறும் என மாநகராட்சி ஆணையர் அறிவித்தார்.

மாநகராட்சி ஆணையர் மற்றும் தனி அலுவலர் க.விஜயகார்த்திகேயன் தலைமையில் நடைபெற்ற இவ்விழிப்புணர்வு நிகழ்ச்சியில் துணை ஆணையர் ப.காந்திமதி, மாநகர நல அலுவலர் கே.சந்தோஷ்குமார், தெற்கு மற்றும் மேற்கு மண்டல உதவி ஆணையாளர் (பொ) டி.ஆர்.ரவி, வடக்கு மண்டல உதவி ஆணையாளர் (பொ) சரவணன், மாநகராட்சி அலுவலர்கள் மற்றும் கல்லூரி மாணவர்கள், நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.

Newsletter

கோவை பீளமேடு வார்டு 27-ல் நியாய விலை கடை மற்றும் தூய்மை பணி ஆய்வு

சிங்காநல்லூர் தொகுதி வார்டு 27-ல் கவுன்சிலர் அம்பிகா தனபால் இன்று நியாய விலை கடை, சாலை சுத்தம் மற்றும் குப்பை அகற்றும் ப...

சுதந்திரப் போராட்ட வீரர்களை அறிவது அனைவரின் கடமை - அமைச்சர் சம்பத்குமார்

வ.உ.சிதம்பரனாரின் 155வது பிறந்தநாளையொட்டி கோவையில் அமைச்சர் சம்பத்குமார் மரியாதை செலுத்தினார். சுதந்திரப் போராட்ட வீரர்க...

கோவை மாநகராட்சி: கோவையில் தனியார் நிலங்களில் சீமைக் கருவேலம் மரங்களை அகற்ற 10 நாள் அவகாசம்

கோவை மாநகராட்சி எல்லைக்குள் உள்ள தனியார் நிலங்களில் சீமைக் கருவேல மரங்களை 10 நாட்களுக்குள் நில உரிமையாளர்கள் வேருடன் அகற...

கோவை மாநகராட்சி: தனியார் நிலங்களில் சீமைக் கருவேலம் கப் அகற்ற 10 நாள் அவகாசம்

கோவை மாநகராட்சி எல்லைக்குள் உள்ள தனியார் நிலங்களில் சீமைக் கருவேலமரங்களை 10 நாட்களுக்குள் நில உரிமையாளர்கள் வேருடன் அகற்...

மதுக்கரை ACC சிமெண்ட் ஆலைக்கு எதிராக பொதுமக்கள் ஆர்ப்பாட்டம்

கோவை மதுக்கரையில் செயல்படும் ACC சிமெண்ட் ஆலையிலிருந்து வெளியேறும் சிமெண்ட் துகள்களால் காற்று மாசடைந்து சுவாசக் கோளாறு ஏ...

கோவையில் சாலையோர வியாபாரிகளுக்கான லோக் கல்யாண் மேலா சிறப்பு முகாம் செப்டம்பர் 7ல் தொடக்கம்

கோவை மாநகராட்சி பகுதிகளில் சாலையோர வியாபாரிகளுக்கு வங்கி கடன் வழங்கும் லோக் கல்யாண் மேலா முகாம் செப்டம்பர் 7 முதல் 25 வர...